Header Ads



பௌத்த தேரர்கள் வழங்கிய ஆலோசனைகளை ஏகமனதாக ஏற்றுக்கொண்டோம் - சஜித் (வீடியோ)

(nf) ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்திலிருந்து ரணில் விக்ரமசிங்க விலக வேண்டும் என்ற ஐக்கிய பிக்குகள் முன்னணியின் யோசனையை, தலைமைத்துவம் உள்ளிட்ட சில பிரிவுகள் ஏற்றுக் கொண்டுள்ளன.  

ஐக்கிய பிக்குகள் முன்னணியின் தேரர்களுக்கும்    பாராளுமன்ற உறுப்பினர்களான  சஜித் பிரேமதாஸ மற்றும் கரு ஜயசூரிய ஆகியோருக்கு இடையில் இன்று கொழும்பில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

இந்த சந்திப்பின் பின்னர்  ஐக்கிய பிக்கு முன்னணியின் தேசிய அமைப்பாளர் உலபனே சுமங்கல தேரர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்

 உலப்பனே சுமங்கள தேரர் தெரிவித்த கருத்து :-

"தலைவர் மாற்றப்பட்டு தலை​மை சபைக்கு அதிகாரங்கள் கையளிக்கப்பட வேண்டும் என்பதே ஐக்கிய பிக்கு முன்னணியின் நிலைப்பாடாகும். இன்று  இரண்டு பிரதி தலைவர்களுடனும் பேச்சு வார்த்தைகளை முன்னெடுத்து எமது தீர்மானத்தை அவர்களுக்கு அறிவித்துள்ளதுடன் இன்று மாலை நடைபெறவுள்ள தலைவருடனான சந்திப்பின் போது இதனை அறிவிக்குமாறு  தெரிவித்துள்ளோம்"

அங்கு கருத்து வெளியிட்ட சஜித் பிரேமதாஸ

சஜித் பிரேமதாஸ தெரிவித்த கருத்து :-

"தேரர்கள் வழங்கிய ஆலோசனைகளை நானும் பாராளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரியவும் ஏகமனதாக ஏற்றுக் கொண்டோம்.இதனை இன்று மாலை நடைபெறவுள்ள ரணில் விக்ரமசிங்கவுடனான பேச்சுவார்த்தையின் ​போது இரு தரப்பு யோசனைகளையும் நாம் எடுத்துரைக்க  எதிர்பார்த்துள்ளோம்"

இதையடுத்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரசிங்க மற்றும் ஐக்கிய பிக்குகள் முன்னணியின் தேரர்கள் ஆகியோருக்கு இடையில் கொழும்பில் இன்று மாலை கலநதுரையாடலொன்று இடம்பெற்றது.

இந்த சந்திப்பு தொடர்பில் ஐக்கிய பிக்குகள் முன்னணியின் பிரதம ஆலோசகரும் இலங்கை ராமஞ்ஞ பீடத்தின் அனுநாயக்கருமான கிராம்பே ஆனந்த தேரர் கருத்து வெளியிட்டார்

 கிராம்பே ஆனந்த தேரர் அதரிவித்த கருத்து :-

"எமது கட்சியின் எதிர்கால நடவடிக்கைகளுக்காக ஐக்கிய பிக்குகள் அமைப்பினால் தயாரிக்கப்பட்ட கோரிக்கைகளை அவர் இந்த இடத்தில் ஏற்றுக் கொண்டார். தேரர்களின் கோரிக்கைக்கு அமைய ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்கால மாற்றங்கள் அனைத்தும் மகா சங்கத்தினரின் அனுமதியின் பிரகாரம் முன்னெடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார்"

ஐக்கிய பிக்குகள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் உலப்பனே சுமங்கல தேரரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருடனான சந்திப்பை அடுத்து கருத்து வெளியிட்டார்

உலபனே சுமங்கல தேரர் தெரிவித்த கருத்து :-

"ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ பொறுப்பிலிருந்து விலகி, சிரேஷ்ட தலைவராக இருந்து, கட்சியை செயற்படுத்தும் அதிகாரத்தை பெற்றுக் கொள்வதாக இன்று மாலை ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடலின் போது உறுதியளித்திருந்தார். கட்சியின் அதிகரங்களை தலைமைத்துவ சபைக்கு வழங்குவதற்கும், கரு ஜயசூரியவை தலைவராக நியமித்து, தலைமைத்துவ சபையை அவர் பொறுப்பேற்பதாகவும் அவர் மகா சங்கத்திடம் உறுதிமொழி வழங்கினார்."

இதனிடையே, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் பாராளுமன்ற உறுப்பினர்களான சஜித் பிரேமதாஸ மற்றும் கரு ஜயசூரிய ஆகியோருக்கிடையில் இன்று மாலை விசேட  சந்திப்பொன்று நடைபெற்றது.

No comments

Powered by Blogger.