ஜாகிலிய்யத்தில் இருக்கின்றார்கள் போலும்...!
Zuhair Ali (Ghafoori-UOC)
மனிதன் இலை,குலை,மரம்,செடி,கொடிகைளை உண்டு உயிர் வாழ்ந்த காலம் போய் இன்று மனிதன் மனிதனை கொண்டு உண்ணும் காலம் வந்து இனத்துக்கு இனம் ,நாட்டுக்கு நாடு,வீட்டுக்கு வீடாக சண்டையும்,சச்சரவுகளுமாய் நிர்ணயமற்ற இவ்வுலக சொற்ப வாழ்க்கைக்குள் எதைத்தான் இம்மனிதம் தேடுகின்றதோ..?
தம் தனி மனித அன்றாட வாழ்க்கையில் தமக்கென ஒரு உறைவிடம் அல்லது உணவு,உறவு என்ற அடிப்படைத் தேவைகளுக்கான தேடல்,பாடல் முனங்களுடன் தள்ளாடித் தவிக்கும் மனிதன் அதற்கன நேரங்களை ஒதுக்குவதற்கு கூட சிந்திக்க நேரம் இல்லா காலத்தின் பிடியில் இருக்கையில்...! அம்மனிதனின் சிந்தையில் சின்னா பின்னா காட்சிகளைம்,உள்ளக் குமுறல்களைம் விதைத்து விட்டு அறுவடை செய்வதில் என்ன லாபமோ இந்த மனித குலத்திற்கு..!
பொதுவாகப் பழையகற்காலத் தொடக்கத்தில் மனிதன் வேட்டையாடுபவர்களாயும், உணவு சேகரிப்போராயும் இருந்தனர். விடயங்களை விளக்குவதற்கு, முறைசாராத பழங்கதைகளைப் பயன்படுத்தியது, இக்காலத்தில் குறிப்பிடத் தகுந்த சிறப்பியல்புகளுள் ஒன்றாகும். இயல்பான தலைவர்களின் கீழ், தற்காலிகமாக ஒழுங்கமைப்பை உருவாக்குவதேயன்றி நிரந்தரமான தலைமையோ, ஆட்சியோ இருக்கவில்லை.
ஆண், பெண்களுக்கு இடையே ஏறத்தாள சமநிலை நிலவியது. ஆண் வேட்டையில் ஈடுபடப் பெண் உணவு சேகரிப்பதிலும், குழந்தைகளைக் கவனிப்பதிலும் ஈடுபட்டனர் இதற்கு மேலுள்ள வேலைகளை இரு பகுதியினரும் பகிர்ந்து செய்ததாகவே தெரிகிறது. அவர்கள் தாவரங்கள், மூலிகைகள் என்பன பற்றிக் குறிப்பிடத்தக்க அறிவைப் பெற்றிருந்தனர்.
நவீனமயமற்ற பழையகற்காலம் என்று சொல்லப்படுகின்ற அக் காலப்பகுதியில் கூட மனிதன் ஒரு இயல்பான,மனிதத்தோடு வாழ்ந்திருக்கையில் ஏன் இந்த நவ நாகரீகம் வளர்ந்த,புரிந்த காலத்தில் மனிதன் மனிதனை ஏன் வேட்டையாடுகின்றான் என்ற கேள்வி எழத்தான் செய்கின்றன.
இதன் காரணமாகவே, “நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்” என்று இஸ்ராயீலின் சந்ததியினருக்கு விதித்தோம். மேலும், நிச்சயமாக நம் தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; இதன் பின்னரும் அவர்களில் பெரும்பாலோர் பூமியில் வரம்பு கடந்தவர்களாகவே இருக்கின்றனர். (5:32)
இந்த குரான் வசனம் செவ்வனே ஒரு சாராருக்கு மாத்திரமன்றி 'எவன் ஒருவன்' என்று முழு மனித குலத்துக்குமான பொதுப்படையான வார்த்தைப் பிரயோகம் என்பதும் தெளிவு.இஸ்லாத்தில் மாத்திரமல்லாமல் இந்து,பௌத்த,கிறிஸ்துவ மதங்களில் கூட மனிதனை மனிதன் கொள்ளவோ,சண்டை போடவோ அனுமதிக்க வில்லை என்பது யாரும் அறிந்த உண்மை.
இன்று நாம் இணைய தளங்களை திறந்தாலே அங்கும்,இங்குமாய் படுகொலைகளும்,தற்கொலைகளும்,புரட்சி என்ற அலங்கோலங்களை சகித்துக் கொள்ள முடியாத அநாகரீகமான காலத்தில் ‘மலோரோடு மலரிங்கு மகிழ்ந்தாடும் போது மனதோடு மனமிங்கு பகை கொள்வதேனோ’..? என்பது போல் சில நேரம் என்னத் தோண்டுகிறது.
ஆகக் குறைந்த பற்சம் அறுபது அல்லது எழுபது ஆண்டு கால நாளையோ,இன்றோ என்ற உத்தரவாதமில்லா வழ்க்கையில் நிம்மதியான வாழ்வை இழந்து தனி மனித வாழ்வைக் கூட சுபீட்சமாக வாழ விடாத இந்த மனிதம் மரணித்து விட்டதை எண்ணி எத்தனை நாட்கள்தான் கடத்த முடியும.
உதாரணத்துக்கு நாம் ஒரு வீடியோவில் அல்லது இணயத்தில் புலியோ,சிங்கமோ மானை வேட்டையாட துரத்தும்போது அம்மான் எப்படியாவது தப்பிக்க வேண்டும் அல்லது அவ்வலையில் சிக்கி விடக் கூடாது என்றே நாம் விரும்புவோம் என்றாலும் அப் புலி வேட்டையாடுவது தன் இரைக்காகவே அன்றி வெறுமனே வீண் விளையாட்டுக்காகவல்ல, மிருகம் மிருகத்தை வேட்டையாடுவதைக் கூட தான் ஒருபோதும் விரும்பாதபோது ஏன் மனித புனிதத்தை வேட்டையாடுகின்றனர்..?
ஒட்டு மொத்த அரபு நாடுகளிலும் அல்-கூரானையே தனது வழி கட்டியாக பின்பற்றப்படுகின்றன. ஆனால் அரபுக்கு எதிராக அரபும், முஸ்லிமுக்கு எதிராக முஸ்லிமும் முட்டிமோதும்போது இன்னும் இவர்களிடத்தில் குரான் முளுமையாக விளங்காத ஜாகிலிய்யத்தில் இருக்கின்றார்கள் போலும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் உயிர் எவன் கையிலுள்ளதோ அ(ந்த இறை)வன்மீது சத்தியமாக! மக்களுக்கு ஒரு காலம் நிச்சயமாக வரும். (அப்போது) கொலை செய்தவனுக்குத் தான் எதற்காகக் கொலை செய்தான் என்பது தெரியாது. கொல்லப்பட்டவனுக்குத் தான் எதற்காகக் கொல்லப்பட்டான் என்பது தெரியாது.- அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்-
அக்காலம் இதுவோ என்று கூட எண்ணத் தோணுகிறது, ‘ஏதென்று கேட்பாரும் இல்லை,எடுத்துப் பிடிப்பாரும் இல்லை’ 30-40 பாகை வெயிலில் கூட உஷ்ணத்தை தங்க முடியாத இம் மனிதம் எப்படித்தான் அத்தீயிற்கு விரகாக எரிகிறதோ ...! இயற்கை அழிவுகள் ஒரு புறம் நம் காதுகளில் வருடத்துக்கு வருடம் 'இன்றுதான் இறுதிநாள் உலகம் அழிந்து விடும்' என்றெல்லாம் அரை கூவல் ஒருபுறம் இருக்க,மனிதம் மனிதமாகத் தேவை இல்லை மனித குளம் புனிதமாக மரணிப்பதேற்கேனும் ஒரு கணம் சந்தர்ப்பம் கிடைக்குமோ...!
.jpg)
Post a Comment