Header Ads



ஹஜ்ஜின் பெயரால் புரியப்படும் 3 முக்கிய தவறுகள் பகுதி 1 - ரமழான் அறிவுப் போட்டி (கேள்வி 26)

அபூ நதா

1- மஹ்ரமி இல்லாத பெண்  பல பெண்களுடன் இணைந்து  ஹஜ்ஜுக்கு  செல்லுதல். 

ஹஜ் இஸ்லாத்தின் ஐம்பெரும் பிரதான கடமைகளில் ஒன்றாகும். அதனை ஒரு ஆண் தனிமையாக நிறைவேற்ற அனுமதி இருப்பது போன்று ஒரு பெண் செய்ய மார்க்கத்தில் அனுமதி இல்லை. 
عَنْ ابْنِ عَبَّاسٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَخْلُوَنَّ رَجُلٌ بِامْرَأَةٍ إِلَّا مَعَ ذِي مَحْرَمٍ فَقَامَ رَجُلٌ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ امْرَأَتِي خَرَجَتْ حَاجَّةً وَاكْتُتِبْتُ فِي غَزْوَةِ كَذَا وَكَذَا قَالَ ارْجِعْ فَحُجَّ مَعَ امْرَأَتِكَ (متفق عليه) 

நபி அவர்கள் ஒரு நாள் தனது உரையில், ஹஅந்நிய ஒரு பெண்ணுடன் எந்த ஒரு ஆணும் தனித்திருக்க வேண்டாம்', மஹ்ரம் (மணம் முடிக்க மார்க்கத்தில் தடை செய்யப்பட்டவர், அல்லது கணவர்) உடனே அன்றி பயணம் செய்ய வேண்டாம் எனக் கூறியதை செவிமடுத்த ஒரு மனிதர் எழுந்து, ஹஅல்லாஹ்வின் தூதரே! நான் இன்ன, இன்ன போர்களில் கலந்து கொள்ள வேண்டும் எனப் பதியப்பட்டிருக்கிறேன், எனது மனைவியோ ஹஜ் செய்வதற்காக புறப்பட்டு சென்று விட்டார் என்றார். ஹஉடன் திரும்பிப் போய், உனது மனைவியுடன் ஹஜ் செய்' எனப் பணித்தார்கள். (புகாரி, முஸ்லிம்). 

இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டே ஒரு பெண்ணோ, அல்லது பல பெண்களோ (திருமணம் முடிக்க தடை செய்யப்பட்ட) மஹ்ரமான ஆண்கள் துணையின்றி தனிமையில் ஹஜ் பயணமோ, அல்லது வேறு பயணமோ செல்லக் கூடாது எனக் கூறுகின்றோம்.  

இதற்கு தவறான வியாக்கியானம் செய்யும் ஷாஃபிமத்ஹபைச் சார்ந்தோர் ஹநம்பகமான பெண்கள் பலருடன் சேர்ந்து ஒரு பெண் ஹஜ்ஜை நிறைவேற்றலாம்' என வாதிடுகின்றனர். ஒரு பெண் தனிமையில் பள்ளிக்குச் சென்று தொழுகையை நிறைவேற்றுவது போன்று ஹஜ் செய்யச் செல்லலாமா? முடியாதா என்ற வாதப்பிரதிவாதங்கள் மார்க்க அறிஞர்கள் வட்டத்தில் காணப்பட்டாலும் ஹமஹ்ரம்' என்ற ஆண் துணையுடன் ஹஜ் செய்வதையே நபி (ந) அவர்கள் கட்டாயப்படுத்தி இருப்பதைப் பார்க்கின்றோம். ஒரு பெண் மஹ்ரம் இன்றி ஹஜ் செய்ய முடியாது என்பதையே நாம் சரியான கருத்தாகவும் கொள்கின்றோம்.  

ஐயம்: ஹஜ்குழுவினர் சிலர், தமது ஹஜ் குழுவுடன் ஒருவரை அதிகரித்துக் கொள்வதற்காக, தமது வசதிக்காக பெண்கள் பலருடன் ஒரு பெண் செல்வதில் தவறில்லை என்கின்றனர். உண்மையில் இக்கூற்றிற்கு அவர்கள் சார்ந்திருக்கும் மத்ஹபின் பெயரால் எழுதப்பட்டுள்ள கருத்துக்களும் ஒரு காரணமே!

 மேலும், குர்ஆன், சுன்னாவைப் பின்பற்றும் சிலர் ஒருபடி மேலே சென்று ஒரு  சில அறிஞர்கள் தனிமையாக  ஹஜ் செய்யலாம் என்பதற்கு ஹஅதிய்யே அல்ஹீரா என்ற நகரைப்பார்த்திருக்கிறாயா? நான் அதைப்பார்த்தில்லை. அது பற்றி கேள்விப்பட்டுள்ளேன் எனக் கூறினேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் அவர்கள் ஹநீ நீண்ட காலம் வாழ்ந்தால் தனது ஒட்டகத்தில் பயணம் செய்யும் ஒரு பெண் அந்த அல்ஹீராவில் இருந்து கஃபா வரை வந்து (தன்னந்தனியே) தவாஃப் செய்வாள். அல்லாஹ்வைத்தவிர வேறு யாரையும் அவள் அஞ்சமாட்டாள்.' (புகாரி 3328) எனக் கூறிய அதிய் பின் ஹாதிம் (வ) அவர்கள் அறிவிக்கும் செய்தியை ஆதாரமாகக் கொண்டு ஒரு பெண் ஹஜ்ஜுக்காக தனிமையில் பயணம் மேற்கொள்வதில் தவறில்லை என்கின்றனர்.

விளக்கம்: நம்பகமான பெண்களுடன் செல்லலாம் என்றால் ஏன் அந்த நபித்தோழரை அவரது மனைவியுடன் ஹஜ்ஜை நிறைவேற்றும்படி நபி (ந) அவர்கள் பணித்தார்கள்.? நபி (ச) அவர்களின் காலத்தில் வாழ்ந்த ஆண்களையும், பெண்களையும் விடவுமா இந்தக்காலத்துப் மக்கள் நம்பிக்கையிலும், நாணயத்திலும் உயர்ந்தவர்களா !!!

அதி பின் ஹாதிம் (வ) அவர்களின் ஹதீஸ் அச்சம்,  பீதி அற்ற ஒரு காலத்தை அதுவும் முன்னறிவிப்பு ஒன்றைக் குறிக்கின்றது. நபி (ந) அவர்களின் காலத்தில் நடை பெற்ற வழிப்பறிக் கொள்ளை, வறுமை ஆகியவற்றை முறைப்பாடு செய்த போதே இந்த முன்னறிவிப்பைக் கூறினார்கள். தனது காலத்தைக்கூட  அச்சம், பீதி, வறுமை அற்ற காலம் எனக் கூறவில்லை. 

 மாற்றமாக அதை ஒரு முன்னறிவிப்பாகவே கூறினார்கள். அது அதி (வ) அவர்களின் வாழ்நாளிலேயே நடந்தேறியது.  இதை உண்மைப்படுத்தும் வகையில் அதன் அறிவிப்பாளரான அதிய் (வ) அவர்கள் இது பற்றிக்குறிப்பிடுகின்ற போது, ஹஒரு பெண் ஒட்டகத்தில் ஏறி அந்த அல்ஹீராவில் இருந்து கஃபாவரை வந்து (தனிமையாக) தவாஃப் செய்வதைக் கண்டேன். அல்லாஹ்வைத்தவிர வேறு யாரையும் அவள் அஞ்சமாட்டாள்', என குறிப்பிடுகிறார்கள்.(புகாரி). 

இப்படியான காலத்துடன் கொலைகளும், கொள்ளைகளும் மலிந்து காணப்படும் இந்தக்காலத்தை ஒப்பிடலாமா என்றால், அனைவரும் இல்லை! என்றே கூறுவர். உலகில் அச்சமற்ற நாடுகளில் முன்னணி நாடு என போற்றப்படும் சவூதி அரேபியாவில் கூட கணவனுடன் ஹஜ் செய்யச் சென்ற பெண்கள் பலர் கடத்திக் கற்பழிக்கப்பட்டு,  கொலை செய்யப்பட்டிருக்கின்றனர் என்றால் நடந்தேறிய முன்னறிவிப்பைக் கொண்டு பெண்கள் தனிமையில் ஹஜ் செய்யலாம் என முடிவு செய்வது ஹதீஸுக்கு உடன்பாடான விளக்கமாகத் தெரியவில்லை.   
  
ஐயம். அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் ஜமல் போரின் போது கூபா நோக்கி பயணித்துள்ளார்களே! நாம் ஹஜ்ஜுக்காக செல்வதை எவ்வாறு தவறாகக் கொள்ள முடியும் ?  

தெளிவு:- இது அவர்களின் தனிப்பட்ட ஒரு முடிவாகும். நபித்தோழர்கள் பலர் இதனை விரும்பவில்லை. அப்படி இருந்தும்  இஸ்லாத்தில் சமரசம்  செய்துவைத்தல் விரும்பத்தக்க செயல் எனக் காரணம் காட்டியே அவர்கள் அவ்வாறு புறப்பட்டதாக வரலாறு சொல்கிறது. அத்துடன், பிற்காலத்தில் தனது இந்தத்தவறை உணர்ந்த அன்னை அவர்கள் அவர்களது முந்;தானை நனையும் அளவு அழுது கண்ணீர் வடித்துள்ளார்கள் என ஆதாரபூர்வமான செய்திகள் குறிப்பிடுவதைக் கவனித்தால் இது போன்ற செய்திகள் ஆதாரமாகக் கொள்ள முடியாதவை என்பதை அறியலாம். 

நபி (ச) அவர்களின் மேற்படி கட்டளையை மீறி ஸஹாபிப் பெண்கள் யாராவது இவ்வாறு சென்றிருப்பார்களாயின், அவர்கள் என்ன ஆதாரத்தின் அடிப்படையில் சென்றார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும். பின் அவர்களின் விருப்பம் மார்க்கமாக முடியாது என்பதையும் முடிவு செய்ய வேண்டும். தமது மனைவியர் மாற்றானுடன் புன்முருவல் பூப்பதையே விரும்பாத இம்மேதாவிகள், மாற்றான் மனைவி தனது குரூப்பில் இணைந்து ஹஜ் செய்வதை அனுமதிக்கிறார்கள் என்றால் அதில் உலகியல் இலாபமின்றி வேறு என்னதான் இருக்க முடியும்? 

2- பல உம்ராக்கள் செய்தல்

நபி (ச) அவர்களும், அவர்களின் தோழர்களும் ஒரு பயணத்தில் ஓரு உம்ராவே செய்துள்ளனர். அவர்களோ, அவர்களின் தோழர்களோ தன்யீம் என்ற இடத்திலுள்ள ஹமஸ்ஜித் ஆயிஷா' சென்று இரண்டாவது உம்ராவிற்காக இஹ்ராம் அணிந்து வரவில்லை. அப்படியானால் ஹமஸ்ஜித் ஆயிஷா' விற்கும் இரண்டாவது உம்ராவிற்கும் இடையில் உள்ள உறவுதான் என்ன ? என்ற கேள்வி உங்களிடம் எழலாம்.

பதில்: அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் நபி (ச) அவர்களுடன் ஹஜ்ஜுக்காகச் சென்றிருந்தார்கள். மக்காவை வந்தடைந்ததும் ஹஸரிஃப்' எனும் இடத்தில் அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டது. அழுதவர்களாக நபி (ச) அவர்களிடம் வந்து முறையிட்டார்கள். இது ஆதமின் பெண்மக்களுக்;கு அல்லாஹ் விதித்தவைதானே!. ((அதற்காக ஓர் அழுகை வேண்டுமா? எனக் கேட்டு விட்டு)
   
افعلي ما يفعل الحاج غير ان لا تطوفي بالبيت ஹஹாஜிகள் செய்யும் சகலதையும் நீ செய்து கொள். ஆனால் கஃபா ஆலயத்தை மாத்திரம் வலம் வராதே' என்று கூறினார்கள். உதிரப்போக்கு நின்றதும் குளித்து தூய்மையாகிய அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் தனது தூய்மை பற்றி நபி (ச) அவர்களிடம் கூறினார்கள். விடுபட்ட தவாiஃபயும், ஸஃயையும் பூர்த்தி செய்யுமாறு கூறி, அவர்களது சகோதரரான அப்துர்ரஹ்மான் அவர்களோடு  தன்யீமுக்கு (இப்போதைய ஆயிஷா மஸ்ஜித் இருக்கும் இடத்திற்கு) அனுப்பி, அதிலிருந்து புறப்பட்டு வருமாறு கூறினார்கள். (புகாரி முஸ்லிமில் இடம்  பெறும் நீண்ட அறிவிப்பின் சுருக்கம்).  இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய  பல அம்சங்கள் இருக்கின்றன.

கேள்விகள் - 26

கேள்வி – 1. மஹ்ரம் என்றால் பொருள் என்ன?
கேள்வி – 2. ஆயிஷா (ரலி) அவர்களின் விடுப் பட்ட தவாபையும் ஸஃயையும் செய்வதற்கு யாருடன் ஆயிஷாவை நபி (ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள்?

No comments

Powered by Blogger.