July 10, 2013

'இப்தார் விருந்து என்ற பெயரில் என்ன செய்கிறோம் என்பதை சிந்தித்துப் பாருங்கள்'

புனித றமழான் மாதம் நம் அனைவருக்கும் இறை அருள் சுறக்கும் மாதமாக அமையட்டும் என முதலில் பிரார்த்திக்கின்றேன்.  றமழான் மாதத்தின் நோன்பு காலத்தை இனப் புரிந்துணர்வு இன ஒற்றுமை என்ற பெயரில் வீணான இப்தார் ஒன்று கூடல்களில் கழிக்காமல் இந்த நாட்டில் முஸ்லிம்கள் அனுபவித்து வரும் இன்னல்களில் இருந்து விடுதலை பெறுவதற்கான பிரார்த்தனைகளில் கழிக்குமாறு உங்களை அன்போடு வேண்டிக் கொள்கிறேன் என்று தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்று இப்தார் நிகழ்வுகளை தமது சமூக அந்தஸ்தை வெளிப்படுத்துவதற்கான ஒரு அடையாளமாக செல்வந்தர்கள் பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.சமூகப் பணியில் ஈடுபடுவதாகக் கூறிக்கொள்ளும் சில அமைப்புக்களும், மற்றும் ராஜதந்திர நிலையங்களும் வெறும் கூடிக்கழியும் ஒரு நிகழ்வாக எந்தப் பிரயோசனமும் இன்றி இந்த நிகழ்வுகளை நடத்தி வருகின்றன. இதில் மிகவும் கவலைக்குரிய விடயம் இந்த நிகழ்வுகளுக்கு அந்நிய மதத்தவர்களும் அழைக்கப்பட்டு போலியான விதத்தில் அவர்களையும் நோன்பு துறக்க வைப்பதாகும். இவ்வாறான இன்றைய இப்தார் நிகழ்வுகளின் மூலம் நோன்பின் மாண்பு கெடுக்கப்படுகின்றது.

ஒரு காலத்தில் நாம் நோன்பு நோற்பதைப் பார்த்து மற்ற சமூகங்கள் ஆச்சரியம் அடைந்தார்கள். எம்மை வியப்புடன் நோக்கினார்கள்.ஆனால் இப்போது நிலைமை மாறியுள்ளது. இனப்புரிந்துணர்வு, இன ஒற்றுமை என்ற போர்வையில் நாம் நோன்பு காலத்தில் அவர்களுக்கு வழமையாக நோன்பு துறப்பதை விட மேலதிகமான உணவுப் பொருள்கனைக் கொண்டு விருந்து படைத்ததால் நோன்பை பற்றி அவர்களுக்கு இருந்த மகிமை இப்போது இல்லை. 'என்ன நோன்பா பகலில் மட்டும்தானே சாப்பிடாமல் இருக்கின்றீகள்? மாலையில் விதவிதமாக சாப்பிடுகின்றீர்கள் தானே' என்று அந்நியவர்கள் எம்மிடம் கிண்டலாகக் கேட்கும் நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையை உருவாக்கியவர்கள் நாங்கள் தான். நோன்பு துறக்கும் நேரத்தில் கேட்கப்படும் எந்த துஆவையும் இறைவன் நிராகரிப்பதில்லை என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் நாம் புனிதமான இந்த பிரார்த்தனை வேளையில் இப்தார் விருந்து என்ற பெயரில் என்ன செய்து கொண்டிருக்கினறோம் என்பதை ஒரு தடவை சிந்தித்துப் பாருங்கள். அந்நியர்களை இப்தார் விருந்துக்கு பள்ளிக்கு அழைத்தோம் அதை விட மேசமாக நம்மவர்கள் கடந்த காலங்களில் பௌத்த விகாரைகளுக்குச் சென்று நோன்பு துறந்த கவலைக்குரிய நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளன. இவற்றால் என்ன பிரயோசனம்? நாம் பிடித்த நோன்புகளும் நமது பெறுமதி மிக்க பிரார்த்தனை காலமும் வீணானதை தவிர வேறு பலன் கிட்டியதா என்று சற்று யோசித்துப் பாருங்கள்.

இனப்புரிந்துணர்வுக்கும் இன ஒற்றுமைக்குமான செயற்பாடுகள் கூடாது என்றோ முஸ்லிம் சமூகம் அவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கக் கூடாது என்றோ நான் சொல்லவில்லை. ஆனால் அவற்றுக்கான காலம் றமழான் மாதத்தின் இப்தார் நிகழ்வுகள் அல்ல என்பதையே நான் இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன். அது எமக்கு மட்டும் பிரத்தியேகமான கடமை. எமது பிரார்த்தனைகள் அங்கிகரிக்கப்படுவதற்கான பிரத்தியேகமான நேரம் இவ்வளவு காலமும் வீணான பொருத்தமற்ற விருந்தோம்பல்களில் அதை வீணடித்துவிட்டதால் எமது பிரார்த்தனைகள் எற்றுக் கொள்ளப்படாமல் ஈருலகிலும் நட்டவாளிகளாவிட்டோம். 

இந்த வருடமாவது நாம் இப்தார் மாயையில் இருந்து விடபட்டு புனித றமழானை அதற்கே உரிய மகத்தவத்துடன் கழிக்க உறுதி பூனுவோமாக என்பதே எனது பணிவான வேண்டுகோள். இன ஒற்றுமைக்கான செயற்பாடுகளை வேண்டுமானால் நாம் நோன்பு கழித்து வரும் நோன்பு பெருநாளையும் அதனைத் தொடர்ந்து வரும் ஹஜ்ஜுப் பெருநாளையும் மையமாகக் கொண்டு அதற்கேற்ப நிகழ்ச்சிகளை நாம் வாழும் சூழலில் ஒழுங்கு செய்து கொள்ளலாம். இவ்வாறான நிகழ்வுகளுக்கு முடியுமான ஒத்துழைப்புக்களை வழங்க தேசிய ஐக்கிய முன்னணி தயாராக உள்ளது என்பதையும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். நாம் றமழானில் இதுவரை கடைப்பிடித்து வந்த தவறான நடைமுறையைக் கைவிடுவோம். புதிய கலாசாரம் ஒன்றை தோற்றுவிப்போம். இந்தப் புனித றமழானை நற்காரியங்களிலும் பிராhத்தனைகளிலும் செலவிடுவோம்.

தற்போதைய இனவாத அரசின் கீழ் இந்த நாட்டின் சிறுபான்மை மக்கள் குறிப்பாக முஸ்லிம்கள் அனுபவித்து வரும் இன்னல்கள் நீங்கி முஸ்லிம்களுக்கு எதிராக அநியாயம் புரிகின்றவர்கள் தமது தவறுகளை உணர எல்லாம் வல்ல இறைவன் அவர்களுக்கு வழி காட்ட வேண்டும் என்ற பிரார்த்தனையையும் நாம் இவ்வாண்டு றமழான் பிரார்த்தனையில் சேர்த்துக் கொள்வோமாக.

எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவர் மீதும் புனித றமழானின்; அருளைச் சொறிந்தருள்வானாக.

9 கருத்துரைகள்:

Muslim mean is direct connection with Allah and his orders. But to days Muslims faith is weak so they afraid not from the Almighty who created them or his book and his laws. Muslim nation is not worshiping for Idols but they are doing it. How? They afraid from the creation same as them created by Allah Subahan huwathala. They are not afraid from Allah but their wealth and self-defendant is more important for them. Also this is the big drama that they wanted to inform to the other nation how they treat them or love them. But who love the nation, country or the religion they can do many thing without associating the Islamic pillars with unknowing people. First we should know how to deliver our message without fear for hat we should be honest in front of the Allah and the nation.
Also I would like to Ask from Ulama comity of mother lanka. In Ed Al Adha how can you ask our srilankan people to fast as day of Arafat? How many hours are different between Saudi and Srilanka? According to the Qur’an and Prophet teaching can anybody fast in the day of Ed? Why are you all not thinking or do not wanted to think? While hole the world is standing in mount of Arafat that day is for you all nothing and changing the day as you need. Please little open your eyes and check.

டியர் அசாத் சார்,

இப்தார் நிகழ்சிகள் ஏற்பாடு செய்து மாற்று மத நண்பர்களை அழைத்து அவர்களுக்கு இஸ்லாத்தை அறிமுகப்படுத்த வேண்டும். இது நம் மீது கட்டாயக் கடமை.

அத்தோடு கப்ருகளை தவாப் சஜ்தா செய்வது போன்ற இணைவைப்பான காரியங்கள் மூலம் நோன்பு உட்பட நாம் செய்யும் அனைத்து நற்காரியங்களும் அழிந்து விடும்.


39:65] தமிழ்
அன்றியும், உமக்கும், உமக்கு முன் இருந்தவர்களுக்கும், வஹீ மூலம் நிச்சயமாக அறிவிக்கப்பட்டது என்னவென்றால், "நீர் (இறைவனுக்கு) இணை வைத்தால், உம் நன்மைகள் (யாவும்) அழிந்து, நஷ்டமடைபவர்களாகி விடுவீர்கள்" (என்பதுவேயாகும்).

6:88] தமிழ்
இதுவே அல்லாஹ்வின் நேர் வழியாகும், தன் அடியார்களில் அவன் யாரை விரும்புகிறானோ, அவர்களுக்கு இதன்மூலம் நேர்வழி காட்டுகிறான்; (பின்னர்) அவர்கள் இணைவைப்பார்களானால், அவர்கள் செய்து வந்ததெல்லாம், அவர்களை விட்டு அழிந்துவிடும்.

Who that slaha.rubbish

அஸ்ஸலாமு அலைக்கும்

சகோ. அஸாத் ஸாலியின் கருத்து நூற்றுக்கு நூறு சரியானதே! சத்தியத்தைச் சொல்வதற்கு பயம் இருக்கவே கூடாது. அல்லாஹ்வுக்கு மட்டுமே அச்சப்பட வேண்டும். இஃப்தார் நிகழ்ச்சிகளில் இஸ்லாத்தைச் சொல்ல முடியும் ஆகவே அதை அவ்வாறு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சகோ. ஸ்லாஹி சொல்கிறார். இஸ்லாத்தைச் சொல்ல வேறாக நிகழ்ச்சிகளை நடத்தலாம் சாப்பாட்டுடன். நோன்பின் மகத்துவத்தைக் கெடுக்கும் நிகழ்வுகள் தேவையில்லை. சகோ. அஸாத் ஸாலி அந்த விட்யத்தில் சரியானதையே சொல்லியுள்ளார்.

jaffnamuslim.com நடத்துனர்களுக்கு ஒரு வேண்டுகோள்: இந்தச் செய்தியை நோன்பு முடியும்வரை முதல் செய்தியாகவே வைத்திருங்கள்.
வஸ்ஸலாம்

Don't look who is SLAHY. Just read the reality. Nothing wrong in my statement.

இப்தார் ஒரு சடங்கல்ல என்பதை முதலில் முஸ்லிம்கள் உணர வேண்டும். பசித்திருந்தவன் தனது பசியை இறை அச்சத்தோடு போக்கும் தருணம் அது. யார், யாரோ எல்லாம் வந்து சாப்பிட்டுச் செல்லும் விருந்துபசாரமல்ல. நமது ஆடமபரததை வெ ளிப்படுத்தும் நிகழ்வல்ல. சுயநலங்களையும், அரசியல் இலாபங்களையும் ஈட்டும் இடமல்ல.

பகல் முழுதும் பசித்திருந்து, பசியின் கஷ்டத்தை உணர்ந்து மனிதரில் எவரும் பசியினால் வாடக்கூடாது என்பதனை நமக்கு உணர்த்தி, நாம் ஒவ்வொருவரும் நம்மால் முடிந்தளவு, மனிதரில் எவரையும் பசியால் வாடவிடாது காப்பாற்றும் நடவடிக்கையில் இறங்க வைப்பதை அடிப்படை நோக்கமாகக் கொண்டே நமக்கு, நம்முன்னோருக்கு மற்றைய வேதங்களில் கடமையாக்கப்பட்டது போன்று, நோன்பு நம்மீதும் கடமையாக்கப்பட்டுள்ளது.

ஆனால், இப்தார் என்ற பெயரில் அண்மைக் காலமாக, விஷேடமாக சென்ற றமழானில் இந்நாட்டில் நடைபெற்றவற்றைப் பார்க்கும் போது, இன்று முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள கஷ்டங்கள் இதன் காரணமாக அல்லாஹ்வால் ஏற்படுத்தப்பட்ட சோதனைகளா என்பதை உணர வேண்டிய கால கட்டமிது.

மேலும், உலமாக்கள் கூட இவ்விடயத்தில் கரிசனையற்று தாமும் அவ்வாறான நிகழ்வுகளில் கலந்து, ஏதோ சமூக ஒற்றுமையை ஏற்படுத்துகிறோம் என்று புதிய ஒரு சம்பிரதாயத்‌தை ஏற்படுத்தி, நோன்பின் அடிப்படையையே மாற்றிக் கொண்டுள்ள தற்போதைய நிலையில்,ஒரு அரசியல்வாதியிடம் இருந்தும் இவ்வாறான ஆலோசனை வருவதைக் காணும போது மிகவும் வியப்படைகின்றேன். நல்ல முன்மாதிரி. அவருக்கு அல்லாஹ் அருள்பாலிப்பானாக! அல்லாஹ் தன் வழியில் எந்த மாற்றத்தையும் செய்வதில்லை.

நோன்பில் நாம் படித்த அனுபவமான, பாடமான, செய்தியான பசியில் ஒருவன் வாடவிடாது பார்க்க வேண்டியது முஸ்லிமாகிய ஒவ்வொருவரதும் கடமை என்பதுடன், இது நோன்பு நாட்களில் மட்டுமல்ல நமது வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிக்க வேண்டிய படிப்பினை என்பதை கருத்தில் கொண்டு செயலாற்ற் வேண்டும்.

தருமம், ஸக்காத்து போன்றவைகளைக் குர்ஆனிய அடிப்படையில், கடனாளிகள், ஏழைகள், விடுபட வேண்டியவர்கள், வழிப்போக்கர்கள் போன்றோருக்கு வழங்கி வருவோமாயின் அனைத்து இனமக்களும் பயனுறுவர், அதனால் சகோதரத்துவம், இன சௌஜன்யம், சகவாழ்வு போன்றவை மலரும். அல்லாஹ்வின் எதிர்பார்ப்பும் அதுவே! முஸ்லிம்கள் மேல் ஏற்பட்டுள்ள சந்தேகங்கள் அகலும், அவதூறுகள் ஒழியும், மதிப்பு உயரும். இஸ்லாம் என்றால் என்ன என்பதை அனைத்து மக்களும் உணர்வர்.

உண்மையில் அன்னிய மதத்தவரோடு பகிர்ந்துண்ண வேண்டும், நல்லெண்ணத்தை வளர்க்க வேண்டும், ஒற்றுமையைப் பேண வேண்டும என்று கருதுவோருக்காக எஞ்சியுள்ள பதினொரு மாதங்களிருக்கின் றன. அதைவிடுத்து பிறர் நகைக்கு மாறு றமழானைக் கொச்சைப் படுத்தக் கூடாது. ஹலால் ஆன உழைப்பின் மூலம் பெறப்பட்ட உணவைக் கொண்டேநோன்பு திறக்க வேண்டும். நோன்பு திறக்க அந்நியர் தரும் உணவு ஹலாலான உழைப்பினால் பெறப்பட்டதா?

ஆமாம் கண்டிப்பாக அத்தனையும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயம்தான், இப்தார் என்ற பெயரில் பல இடங்களிலும் பலவகையான ஒன்று கூடல்கள் நடக்கின்றன அவைகளால் நமடு நோன்பின் மகிமையும் அதன் நற்கூலிகளும் கேலிக்கையாகிவிடக்கூடாது என்பதை சகோதரர் ஆசாத் சாலி மிகவும் அழ்காகச்சொல்லியிருக்கின்றார். இது இறைவனால் மனிதனுக்கு விசேடமாக நன்மைகளைச்சம்பாதிப்பதற்காகவே உருவாக்கப்பட்ட மாதம் அதற்குள் எதற்கு வியாபாரமும் அரசியலும்.


சகோதரர் SLAHY;

சொல்வதுபோன்று இப்தார் நிகழ்சிகளை ஏற்பாடுசெய்து மாற்று மத சகோதர்களை அழைத்து இஸ்லாத்தை அறிமுகப்படுத்துவது நமது கட்டாய கடமை என்பதை அவர் எங்கிருந்து பார்த்துத்தெரிந்துகொண்டாரோ எமக்கும் சொன்னால் நாமும் ஊர்ஜிதப்படுத்திக்கொள்ளலாம்.

Aaww, Dear Mr.Mawahib mohamed there are difference of opinion among the scholors of knowledge about moonsighting therefore we all try to acquire deep knowledge of our religion.

Post a Comment