Header Ads



தமிழ் பாடசாலையிலிருந்து முஸ்லிம் மாணவிகள் வெளியேற்றம் (மேலதிக இணைப்பு)

(மொஹமட் அன்வர் - கிழக்கு மாகாண சபை உறுப்பினர்)

இன்று 03-07-2013 நிலாவெளி தமிழ் மகாவித்தியாலத்தில் கல்வி பயிலும் முஸ்லீம் மாணவிகள் தமது கலாச்சாரம் பேணியதான பர்தா அணிந்து பாடசாலைக்குச் சென்றவேளையில் அதிபரால் குறித்தமாணவிகள் பாடசாலை வளவினுள் பர்தா அணிந்து வரக்கூடாதென்று அதிபர் தெரிவித்ததை தொடர்ந்து மாணவர்கள் பாடசாலைக்கு வெளியே சுமார் காலை 09 மணிவரை தடுத்து நிறுத்தப்பட்டதை தொடர்து அம்மாணவர்களுடைய பெற்றார்கள் உரிய இடத்திற்குச் சென்றதன் பின்னர் பெரும் பதற்ற நிலை தோன்றியது.

இதனை அடுத்து குச்சவெளி பிரதேசத்திற்கு பொருப்பான பொலிஸ்அதிகாரி கிழக்கு மாகாண சபை உறுப்பினரான அன்வர் பிரதேசசபை உறுப்பினரான ஜனா சலாஹீதீன் மற்றும் வலயப்பணிப்பாளர் உட்பட பாசாலை அதிபர் பாடசாலை அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள் தலைமையில் பேசப்பட்டு மாணவர்கள் பேச்சுவார்தைகளின் அடிப்படையில் இணக்கம் காணப்பட்டு பாடசாலை வலாகத்திற்குள் அழைக்கப்பட்ட அதேவேளை சில விஸமிகளின் தூண்டுதலால் தமிழ் மாணவர்கள் தங்களது பெற்றார்களால் பழவந்தமாக வெளியேற்றப்பட்டதனை தொடந்து கிழக்கு மாகாண சபை உறுப்பினரான அன்வர் ஜனாரத்தனன் குச்சவெளி பிரதேசத்திற்கு பொருப்பான பொலிஸ்அதிகாரி யாப்பா பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் பிரதேசசபை உறுப்பினரகள் மாகாண கல்விப்பணிப்பாளர் நிஸாம் வலயக்கல்விப்பணிப்பாளர் மற்றும் பாடசாலை அதிபர் பாடசாலை அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள் பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றார்கள் இருசமூகத்தை சார்ந்த முக்கியஸ்தர்கள் தலைமையில் குறித்த பாடசாலையிலே அவசரகூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு கலந்துரையாடப்பட்டு பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச்சங்கம் தமிழ் சமூகத்தைச்சார்ந்த பெற்றார்கள் தமது கலாச்சாரத்தை இந்த பர்தா அழித்துவிடும் மட்டுமல்லாது பெரும்பாண்மையாக உள்ள மாணவர்களைப்போன்று தமது கலாச்சாரத்தையே இப்பாடசாலையில பின்னற்றவேண்டும் எனவும் ஒருமித்த கருத்தை தெரிவித்ததை தொடர்ந்து முஸ்லிம் மாணவர்களுடைய பெற்றார்கள் தமது வயது வந்த உயர்தர மாணவிகள் பர்தா அணியவேண்டும் என்ற அவசியம் கலவன் இப்பாடசாலை என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது.

எனவே பாதிக்கப்பட்ட பெற்றார்கள் தமது பிள்ளைகளை அருகாமையிலுள்ள அல்பதா வித்தியாலயத்திற்கு 93 மாணவர்களையும் இடம் மாற்றுவதாக மாகாண கல்விப்பணிப்பாளரிடம் தெரிவித்ததோடு அப்பாடசாலைக்கான முழுவசதிகiயும் தமது மாணவர்களுக்கு செய்து தருவதாக உறுதியளித்ததை தொடந்து அங்கு பேசிய பெற்றார் தொடர்ந்தும் இப்பாடசாலையில் கல்வி கற்பார்களாயின் இவர்கள் தொடர்ந்து வேற்றுமை காட்டி உளரீதியாக பாதிப்படைவார்கள் மட்டுமன்றி இது ஒரு திட்டமிட்ட செயல்பாடாகவே பார்க்கின்றோம் என்றும் சுட்டிக்கர்டப்பட்டன

அதேவேளை குச்சவெளி பிரதேசத்திலுள்ள ஏனைய முஸ்லிம் பாடசாலையில் கல்வி பயிலும் தமிழ் மாணவிகளின் தமிழ் கலாச்சாரம் பேணப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

அதுமட்டுமல்லாது கடந்த இருவாரங்களுக்கு முன் பாடசாலைக்கு அருகாமையிலுள்ள பிரதேச சபைக்குச் சொந்தமான  பொதுவிளையாட்டு மைதானம் தமது பாடசாலைக்கு பெற்றுத்தருமாறு மாணவர்கள் வீதியில் நிறுத்தப்பட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டு பொலிஸாரினால் தடுத்து நிறுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது

5 comments:

  1. ithu nadanthathu Potraththakka vidayam Karanam Kakkai koottil Kuyil muttai iduvathupola
    Antha samooham thamathu pillaikal padikkum Padasalaiyai Yarkali pidiththavathu Munneturarkal
    Asiriyarkal Akkarayodu Katrukkodukkirarkal Emmavar Avarkal padasalaiyyil thamathu pillaikalai lesaha serththuvittu Varuvaarkal.
    Eean Emathu Samoohaththukkum,Aasiriyarkalukkum,Kalviyil Akkarai illai?

    ReplyDelete
  2. எமது அரசியல்வாதிகள் நீண்ட மற்றும் குறுகிய கால திட்டமிட்ட அடிப்படையில் சமூகத்திற்காக ஒன்றின்னையா விட்டால் நம் சமூகத்தை இந்த கேவலமான இனவாதத்திடமிருந்து நம்மை பாதுகாப்பது கல்லில் நார் உரிப்பதட்கு சமமானது. எம் சமூகம் ஒற்றுமை படாதவரை அழ்ழாஹ்வின் உதவியை எதிர் பார்க முடியாது யா அழ்ழாஹ் நீயே எம்மை பதுகாக்க போதுமானவன்

    ReplyDelete
  3. அரைகுறை ஆடையோடு பெண்களை அழகு பார்க்கத் துடிக்கும் சமூகம் . இதற்குப் பெயர் கலாச்சாரம் .

    ReplyDelete
  4. ஒற்றுமை படாதவரை அல்ல அழ்ழாஹ்வை நம்ப வேண்டிய அடிப்படையில் நம்பி அவனுக்கு மட்டுமே சிரம் பணியும் நிலை வராத வரை அழ்ழாஹ்வின் உதவியை வராது.

    ReplyDelete

Powered by Blogger.