குர்ஆன் ஏற்படுத்திய மாற்றம்- புனித ரமழான் அறிவுப்போட்டி (கேள்வி -7)
இஸ்லாம் மார்க்கம் சிறந்த வழிமுறை யையும் வாழ்க்கைத் திட்டத்தையும் ஒழு ங்குபடுத்தி தெளிவானதோர் கோட்பாட்டை முன்வைத்து எளிமையான வாழ்க்கையின் பக்கம் உலக மக்களை அழைக்கிறது.
இஸ்லாம் இப்புவியில் மலர்வதற்கு முன் ஜாஹிலியா (மடையர்கள்) காலம் என வர்ணிக்கக் கூடிய ஒரு காலம் இருந்தது. அக்காலத்தில் மனிதாபிமானத்து டனோ, மனித நேயத்துடனோ மனிதனை மனிதன் பார்க்க மாட்டான் பிறந்துவிட் டோம் வாழவேண்டும் என்பதற்காகவே கண்மூடித்தனமாக வாழ்ந்தார்கள்.
ஒரு ஒட்டகம் மாற்றானுடைய தோட்டத்தில் மேய்ந்து விட்டால் அதற்காக பல வருடங்களாக சண்டைப்பிடிக்கும் அறிவி லிகளாகவும், பெண்குழந்தை பிறந்து விட்டால் கேவலம் என்றெண்ணி மண் தோண்டிப் புதைக்கும் அரக்கர்களாகவும் வாழ்ந்தார்கள். மதுவிலும் மாதுவிலும் மயங்கிக் கிடந்தார்கள். மது மதியை மயக்கி விட்டது என்றால் தாரத்திற்கும் தாய்க்கும் வித்தியாசம் தெரியாத கயவர்களாக வாழ்ந்தார்கள்.
எவர் ஆண் குழந்தையை பெற்றெடுக் கிறாரோ, அவரிடம் தன் மனைவியை அனுப்பி அவள் கர்ப்பமடையும் வரை காத் திருக்கும் கயவர்களாக இருந்தார்கள். பெண்களை போதைப் பொருளாக்கி, அப்பெண்களுக்கு படிப்பறிவோ, சொத்து ரிமையையோ கொடுக்காமல் வாழ்வுரிமை யை பறித்து வாழ்ந்தார்கள். இப்படித்தான் வாழவேண்டும் என்றில்லாமல் எப்படியும் வாழலாம் என்ற மிருகங்களை விட மிக கேடுகெட்டவர்களாக வாழ்ந்தார்கள்.
இப்படியான நேரத்தில் தான் இஸ் லாம் எனும் தென்றல் வீச ஆரம்பித்தது. முஹம்மது என்ற மாமனிதர் இறைத் தூதராக தேர்ந்தெடுக்கப்பட்டு வழிகாட்டி யாக அனுப்பப்பட்டார்கள் அம்மக்களை இறைவனின் போதனையான அல்குர்ஆ னின் நிழலின் கீழ் ஒன்று சேர்த்தார்கள். உலகமே வியக்கக் கூடிய அளவுக்கு அம்மக்கள் புனிதர்களாக மாறினார்கள்..
அல்குர்ஆன் இப்படிக் கூறுகிறது:-
'நீங்கள் (ஒருவருக்கொருவர்) பகைவர் களாக இருந்த நிலையில் அல்லாஹ் உங்களுக்கு புரிந்த அருளை எண்ணிப் பாருங்கள். அவன் உங்கள் உள்ளங்களுக்கிடையே இணைப்பை ஏற்படுத்தினான். எனவே அவனது அருளால் சகோத ரர்களாகிவிட்டீர்கள்' (3:103)
சகோதர வாஞ்சையுடன் வாழ்ந்த அம்மக்களின் நேர்மை, பணிவு, துணிவு, தியாகம் போன்ற செயல்களால் அல்லா ஹ்வுக்கு மட்டும் அடிபணிந்து வாழ்ந்த தால் இறைநேசத்தையும் அன்பையும் பெற்ற மக்களாக வாழ்ந்தார்கள். அல்குர்ஆன் இப்படிக் கூறுகிறது.
... அல்லாஹ் இவர்களை பொருந்திக் கொண்டான். இவர்களும் அல்லாஹ்வை பொருந்திக் கொண்டார்கள். (48:18)
மனித வாழ்க்கைக்கு தேவையான அத்தனை திட்டங்களையும் இரத்தினச் சுருக்கமாக எளிமையான முறையில் அறிமுகப்படுத்தியது அல்குர்ஆன்! சமூகப் பொருளாதார, அரசியல் என்று பல்வேறு பரிணாமங்களில் வழிகாட்டியது இந்தக் குர்ஆன்! மதத்தின் பெயரால் சுரண்டிப் பிழைப்பதை தடுத்து நிறுத்தியது! ஆத்மீக பௌதீக வாழ்க்கையின் அர்த்தங்களை புரிய வைத்தது!
குலம் கோத்திரம் சாதி இவற்றால் ஏற்படும் தீண்டாமை, இனவெறி ஆகியவை உலகில் பலநாடுகளில் பல நூற்றாண்டு களாக தீர்க்கப்படாத பிரச்சினைகளாக உள்ளன. இந்த சிக்கலான பிரச்சினைக்கு மிக எளிதான தீர்வை வழங்கி மனித நேயத்தை சகோதரத்துவத்தை நிலை நாட்டிக் காட்டியது இந்தக் குர்ஆன்!
கொலை, கொள்ளை, கற்பழிப்பு, சிறுவர் துஷ்பிரயோகம் என்ற பஞ்சகமா பாதகங்கள் நாளுக்கு நாள் கேட்கும் செய்திகளாகவும் பார்க்கும் காட்சிகளாக வும் இன்று அமைந்துவிட்டன. இக்கொடூர செயல்களை தடுத்து நிறுத்த குர்ஆன் கூறும் சட்டங்கள் தேவையென முஸ்லிமல்லாதவர்கள் கூட கோரிக்கை வைக்கும் அளவுக்கு மனித குலத்திற்கு பாதுகாப்பான சிவில் சட்டங்களை குர்ஆன் முன்வைக்கிறது என்றால் அது இந்தக் குர்ஆன் உலகில் ஏற்படுத்திய மாபெரும் புரட்சியாகும்.
அல்குர்ஆன் முன்வைத்த தனிமனித குடும்ப சமூக வாழ்வின் மேம்பாட்டுக்கு தேவையான வழிகாட்டுதல்களை இன்றைய உலகம் வேண்டி நிற்கிறது என்றால் இதைவிட மகத்தான புரட்சி வேறு ஏதாவது இருக்குமா?
முழுக்க முழுக்க மனித சமுதாயத் தின் சிந்தனைக்கும் விமோசனத்திற்கும் இக்குர்ஆன் வழிகாட்டுகிறது. இன்றைய உலகின் சரியான வழிகாட்டுதல் அல்குர் ஆன் என்றால் மிகையல்ல!
அறிஞர் பேர்னாட்ஷா ஒருமுறை இப்படிச் சென்னார்.
இன்றைய ஐரோப்பா உலகிற்கு வழிகாட்டுவதற்கு முஹம்மது (நபியை) போல் ஒருவர் தேவைப் படுகிறார்| என்றார்.
ஐரோப்பா உலகம மட்டுமல்ல முழு உலகமும் சீரழிந்து சின்னாபின்னமாகி யுள்ளது. அதனை சரிகட்டுவதற்கு அல் குர்ஆன் அத்தியவசியமாக தேவைப் படுகிறது. முஹம்மது நபியின் வழி காட்டுதல் வேண்டப்படுகிறது.
'ஆத்மீகத்திலும் லௌகீகத்திலும் வெற்றி பெற்ற ஒரே தலைவர் முஹம்மது நபி மட்டும் தான்' என மைக்கல் ஹார்ட் The 100' எனும் நூலில் குறிப்பிடுகிறார்.|| அன்றைய ஜாஹிலியா மக்களைவிட இன்றைய ஜாஹிலியா மக்கள் அவ்வளவு மட்டகரமானவர்களல்ல!
எனவே இந்த மக்களின் விடிவுக்கு முஹம்மது நபியின் வழிகாட்டுதல், அல்குர்ஆன் போதனை தேவைப்படுகிறது. உலகம் கண்ணை திறந்து பார்க்கு மா? நேர்வழியை பின்பற்றுமா? இது (அல்குர்ஆன்) அகிலத்தார்கெல்லாம் உப தேசமேயன்றி வேறில்லை (51:27)
கேள்விகள் - 7
குர்ஆன் ஏற்படுத்திய மாற்றம்
1. The 100 என்ற நூலை எழுதிய நூலாசிரியர் யார் ?
2. அல்லாஹ் இவர்களைப் பொருந்திக் கொன்டான். அவர்களும் அல்லாஹ்வை பொருந்திக் கொண்டார்கள் என்ற வசனம் இடம் பெறும் அத்தியாயத்தின் இலக்கத்தையும், வசனத்தின் இலக்கத்தையும் எழுதவும் ?
.jpg)
Post a Comment