Header Ads



'உணவு சமிபாடு அடைய' விரல்களை சூப்பவேண்டும் - ரமழான் முத்துக்கள் (கேள்வி 5)

•உங்களில் ஒருவர் உணவு உண்டால் தனது விரல்களை சூப்பும்வரை அல்லது சூப்பப்படும் வரை துடைத்துக்கொள்ள (கழுவிக்கொள்ள) வேண்டாம் என முஹம்மது நபி(ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்:- இப்னு அப்பாஸ் (ரலி) ஆதாரம்:- புகாரி, முஸ்லிம்
(சாப்பிட்ட பின்) விரல்களை சூப்பும் படியும் உணவுத்தட்டை வழித்துச் சாப்பிடும் படியும் முஹம்மது நபி (ஸல்) கட்டளையிட்டார்கள். அறிவிப்பவர்:- ஜாபிர் (ரலி) ஆதாரம்:- முஸ்லிம்

•நிச்சயமாக ஷைத்தான் உங்களில் ஒவ்வொருவருடைய காரியங்களின் போதும் சமூகம் தருகிறான். உணவு உண்ணும் போது கூட சமூகமளிக்கிறான். உங்களில் ஒருவரின் உணவு கவளம் கீழே விழுந்துவிடடால் அதனை எடுத்து அதிலுள்ள அசுத்தங்களை நீக்கிவிட்டு சாப்பிடட்டும். தனது விரல்களை சூப்பிக்கொள்ளட்டும். உணவில் எந்தப் பகுதியில் ஷஷபரகத்|| (அருள்வளம்) உள்ளது என்பதை அவர் அறியமாட்டார் என முஹம்மது நபி(ஸல்) கூறினார்கள்.அறிவிப்பவர் : அனஸ்(ரழி) ஆதாரம் : முஸ்லிம்

உணவு உட்கொள்ளும் போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குமுறைகளை முஹம்மது(ஸல்) அவர்கள் கற்றுத்தந்துள்ளார்கள். அதில் முக்கியமான ஒரு ஒழுங்கு முறையைத் தான் இங்கே எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. 

அதாவது உண்ணும் போது உணவு கவளங்கள் விழுந்துவிட்டால் அதனை எடுத்து அதில் பட்ட தூசிகளைத் தட்டி சாப்பிட்டு விட்டு விரல்களை சூப்பவேண்டும் அதன் பிறகு கைகளைக் கழுவிக்கொள்ள வேண்டும் என்று வலிறுத்தி கூறப்பட்டுள்ளது.

இஸ்லாத்தின் பூரணமான வாழ்க்கைத் திட்டத்தின் கீழ் 'சாப்பாடு ஒழங்கு முறையும்' வகுத்துத் தரப்பட்டுள்ளது என்பதை முதலில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். 

சாப்பிட்டபின் விரல்களை சூப்பிக்கொள்ளும் விடயத்தைப் பொறுத்தவரை 'கண்டிப்பான கட்டளையாக' எங்களுக்கு போதிக்கப்பட்டுள்ளது. இதனது தத்துவம் என்ன? உண்மை நிலை என்ன? என்பதை யாரும் கேள்வி கேட்டதில்லை. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி(ஸல்) சொல்கிறார்கள் நாங்கள் செய்கிறோம். நிச்சயமாக அந்த கட்டளையில் எங்களுக்கு நன்மை இருக்கிறது என்ற நிலையில் தான் அன்று முதல் இன்று வரை முஸ்லிம்கள் செயல்படுத்தி வருகிறார்கள். அத்துடன் சாப்பிட்ட பின் விரல்களை சூப்பவதனால் வயிறார சாப்பிட்ட திருப்தி ஏற்படுகிறது என்பதை மட்டும் எல்லோரும் புரிந்து கொள்கிறார்கள்.

இன்றைய விஞ்ஞான உலகம் உணவு சமிப்பாடடைவதற்கான வழிகளை ஆராயும் வேளையில் கண்டுபிடித்த மருத்துவம் என்னவெனில் ஷஷசாப்பிட்ட பின் விரல்களை சூப்புவது உணவு சமிபாடு அடைவதற்கான சிறந்த வழி என்பது தான். அதாவது சாப்பிட்ட பின் விரல் நுனிகளை சூப்பும் போது உணவு சமிபாடு அடைவதற்கான நொதியங்கள் சமிபாட்டுத் தொகுதியிலிருந்து சுரப்பது தூண்டப்படுவதனால் சமிபாடு இலகுவாக்கப்படுகிறது. என்று மருத்துவ உலகம் கூறுகிறது.

உணவு சமிபாடு அடையாதுவிட்டால்; ஏற்படக்கூடிய அவஸ்தைகளை நாம் அனுபவித்திருக்கிறோம், பார்த்திருக்கிறோம். சமிபாடு அடைவதற்கு இப்படியான ஓர் இலகு வழி இருப்பதைக் கண்டு உலகம் ஆச்சரியமடைகிறது.

சிலர் உணவு உண்ட பின் விரல்களை சூப்புவதை கேவலமாக கருதுகிறார்கள். யாராவது விரல் சூப்புவதைக் கண்டால் அசிங்கமான ஒரு காரியம் நடப்பது போல் பார்க்கிறார்கள். இன்னும் சிலர் கைகளினால் எடுத்து சாப்பிடுவதை விட ஷஷகரண்டி, கராப்புகளால்|| எடுத்துச் சாப்பிடுவதை நாகரீகமான செயல் என கருதுகிறார்கள். போலி கௌரவத்தினாலும் அர்த்தமற்ற நகரீக செயல்களினாலும் மனிதன் நன்மைகளை விட கேடுகளை அதிகம் சம்பாதித்து வருகிறான்.

சாப்பாடு சமிபாடு அடையாது, அஜீரனம் ஏற்பட்டர்ல் அதற்காக ஆயிரக்கணக்கில் செலவிடுகிறான். சின்ன ஓர் காரியத்தை செய்ய மறுத்ததனால் பெரியதோர் அவஸ்தைக்கு ஆளாகுகிறான். விரல்களை சூப்புவதனால் மனித கௌரவத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆரோக்கியமான வாழ்வுக்கு இதனை செய்தாக வேண்டும்.

இன்றைய மருத்துவ உலகம் கண்டறிந்த உண்மையை விஞ்ஞான வளர்ச்சியில்லாத அன்றைய காலத்திலேயே முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறியது தான் மிகப்பெரிய அதிசயம்! இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறிய வார்த்தைகள் வீணானவைகள் அல்ல. மருத்துவ உலகம் ஆய்வு செய்யக்கூடிய அதிசயங்கள் அவ்வார்த்தைகளில் இன்னும் புதைந்துள்ளன.

விருத்த சேதனம் செய்தல்
பெண்ணின் கருப்பை கழுத்தில் புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கும்

விருத்தசேதனம் செய்வது, மர்மஸ்தான முடியை களைவது, அக்குள் முடியை அகற்றுவது நகங்களை வெட்டுவது, மீசையை கத்தரிப்பது ஆகிய ஐந்து விஷயங்களும் (செய்வது) இயற்கை மரபுகளில் உள்ளதாகும் என முஹம்மது நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர் :- சயீத் இப்னு முஸய்யப் (ரலி) நூல் : புகாரி (5889) முஸ்லிம் (429)
மனிதன் தேக ஆரோக்கியமாக வாழ்வதற்கு சுற்று சூழலை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுவதை நாம் காண்கின்றோம். சூழல் மாசடைந்துவிட்டால் மனிதனுக்கு பல்வேறுபட்ட கிருமிகள் தொற்றிக் கொள்வதற்கும் பல நோய்கள் ஏற்படுவதற்கும் காரணமாக அமைந்துவிடும்.

எனவே மனிதன் வாழும் சூழல் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். அது போலவே மனிதனது உடல் உறுப்புக்களும் எந்நேரமும் சுத்தமாக இருப்பதும் கட்டாயமானதாகும்.

சூழல் கெட்டுவிட்டால் என்ன பாதிப்புக்கள் உருவாகுமோ அது போன்றுதான் மனித உடல் அழுக்கடைந்துவிட்டால் பாதிப்புக்கள் உருவாகும்.

பொதுவாக இஸ்லாத்தில் சுத்தம் (ஆரோக்கியம்) பேணுவதை கடமையாக்கப்பட்டுள்ளது. ஷஷசுத்தம் ஈமானின் (இறை விசுவாசத்தின்) பாதியாகும்என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல் : முஸ்லிம் - 381)
முஸ்லிம்கள் தங்களையும் தங்கள் சூழல்களையும் பேணிபாதுகாப்பது ஈமானை பாதுகாப்பது போன்றதாகும் என்பதை இந்நபி மொழியிலிருந்து தெரிந்து கொள்கிறோம். தேக ஆரோக்கியத்திற்கு வழிகாட்டும் வலிமையான - உலக மக்கள் உன்னிப்பாக கவனிக்க வேண்டிய - முக்கியமான ஓர் போதனை இது!

மேலே கூறப்பட்ட ஹதீஸுக்கு விளக்கமாக பின்வரும் ஹதீஸும் அமைந்துள்ளது. 
நகங்கள் வெட்டுவது, அக்குள் முடிகளை அகற்றுவது, மர்மஸ்தான முடிகளை நீக்குவது மீசையை கத்தரிப்பது ஆகிய காரியங்களை நாட்பது நாட்களுக்குள் செய்யுமாறு நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு கால எல்லை விதித்தார்கள். அறிவிப்பவர் :- இப்னு உமர் (ரலி) நூல் : முஸ்லிம் (431)

இந்த ஹதீஸ் கூறப்பட்டுள்ள விடயங்கள் ஆண்கள் பெண்கள் இருவருக்கும் பொதுவானதாகும். (மீசையை கத்தரிப்பதை தவிர) என்பதை கவனத்தில் கொண்டு செயல்படுத்த வேண்டும்.

அடுத்ததாக நாம் கவனிக்க வேண்டிய இன்னொரு விடயம் 'விருத்தசேதனம் செய்தல்' என்ற ஹதீஸின் பகுதியாகும்.

விருத்தசேதனம் என்ற சொல்லை முஸ்லிம்கள் பயன்படுத்தாமல் சுன்னத் செய்தல் என்ற சொல்லையே அதிகமாக பயன்படுத்துவார்கள்.சுன்னத் செய்தல் அல்லது விருத்தசேதனம் செய்தல் என்றால் ஆணின் மர்மஸ்தான உறுப்பிலுள்ள முன் தோலை அகற்றுவதாகும்! இதனை செய்வதினால் ஆண்களுக்கு எந்த விதமான பாதிப்புக்களும் ஏற்படப் போவதில்லை.

இதனை செய்யுமாறு நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு கட்டளையிடுகிறார்கள். முஸ்லிம்கள் அனைவரும் இதனை செய்து வருகிறார்கள். முஸ்லிமல்லாத சகோதரர்கள் இக்காரியத்தை தப்பான கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள். விமர்சனம் செய்கிறார்கள். விருத்தசேதனம் செய்வதனால் ஏற்படும் நன்மைகளை இவர்கள் அறிந்துகொண்டால் கட்டாயமாக இவர்களும் விருத்தசேதனம் செய்வார்கள். மற்றவர்களையும் செய்யுமாறு தூண்டுவார்கள்.

ஆணின் உறுப்பில் சற்று கூடுதலாகவுள்ள முன்தோலை நீக்குவிடுவதால் பைமோகிஸ் (Phimosis)  என்று கூறப்படுகின்ற ஒரு வகையான நோய் ஏற்படுவது தடுக்கப்படுகின்றது.

சற்று கூடுதலாக உள்ள அந்த முன் தோலை நீக்கிவிடாது விட்டால் சிறுநீர் கழிக்கும் போது அந்த தோலில் சிறுநீர் தேங்கி நிற்பதற்கும், கிருமிகள் உண்டாவதற்கும், சிறுநீர் அடைப்படுவதற்கும், சிறுநீரக கோளாறுகள் ஏற்படுவதற்கும் காரணமாகிவிடும்.

அது மட்டுமல்லாமல் (இல்லறத்தில் ஈடுபடுகின்ற போது) பெண்ணின் கருப்பை கழுத்தில் (CarcinomaCervix) புற்று நோய்கள் ஏற்படுவதற்கும் காரணமாகிவிடுகிறது.

ஆகவே இந்த பாதிப்புக்களிலிருந்து, நோய்களிலிருந்து பாதுகாப்பு பெறுகின்ற சிறந்த மருத்துவம் தான் ஆணின் உறுப்பிலுள்ள முன்தோலை அகற்றிவிடுவதாகும் என மருத்துவ உலகம் கூறுகின்றது.

இந்த மருத்துவத்தை ஜாதி மத பேதமின்றி அனைவரும் செய்தாக வேணடும். இந்த தோலை அகற்றுவதற்கு சத்திர சிகிச்சை எதுவும் செய்ய வேண்டியதில்லை. இலகுவான முறையில் வெட்டி அகற்றக் கூடிய மிகச் சிறிய விஷயம் இது! பயப்படுவதற்கும் ஒன்றுமில்லை.

முஸ்லிம்களை பொறுத்த மட்டில் குழந்தை பருவத்திலேயே இந்த விருத்தசேதனத்தை செய்து விடுவார்கள். மார்க்க கட்டளை என்ற அடிப்படையில் அவர்கள் கடைப்பிடித்து வரும் இக்காரியம் பெரியதோர் நோயிலிருந்து காப்பாற்றிவிடுகிறது.

மருத்துவ உலகம் கண்டுபிடித்த இந்த உண்மையை 7ம் நூற்றாண்டில் முஹம்மது நபி (ஸல்) கூறியது ஆச்சரியமாக இருக்கிறதா?

உணவு சமிபாடு அடைய 

1.சாப்பிட்ட பின் விரல்களை சூப்பும் படியும் உணவு தட்டை வழித்துச் சாப்பிடும் படியும் நபி (ஸல) அவர்கள் கட்டளையிட்டடுள்ளார்கள் என்ற ஹதீஸ் எந்த ஹதீஸ் கிதாபுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது?
2. நகம் வெட்டுதல் ,அக்குள், மர்மஸ்தான முடி, மீசையை கத்தரிப்பது எத்தனை நாட்களுக்குள் செய்யப்பட வேண்டும்?

No comments

Powered by Blogger.