Header Ads



முஸாபகது ரமழான் கேள்விகள் (பகுதி 2)

ஸஹீஹுல் புகாரியின் 01 முதல் 300 வரையிலான ஹதீஸ்களிலிருந்து

1. 'உனது மனைவியின் வாயில் அன்புடன் நீர் ஊட்டும் ஓர் பிடி உணவும் தர்மமாகும்'. இந்த ஹதீஸை அறிவிக்கும் ஸஹாபி யார்? 

2. ஒருமுறை நபி (ஸல்) அவர்களிடம் 'ரபீஆ' என்ற கூட்டத்தினர் வந்தபோது, அவர்களுக்கு நபியவர்கள் எத்தனை விடயங்களை ஏவி, எத்தனை விடயங்களைத் தடுத்தார்கள்? 

3. 'உமர் (ரழி) அவர்கள் நீண்ட சட்டை அணிந்தவராக என்னிடம் கனவில் எடுத்துக் காட்டப்பட்டார்' எனக் கூறிய நபியவர்கள், அதற்களித்த விளக்கம் யாது?

4. 'ஹிரக்ல்' என்ற மன்னனுக்கு நபி (ஸல்) அவர்கள் ஒரு கடிதத்தை அனுப்பி வைத்தார்கள். அக்கடிதத்தில் அல்குர்ஆன் வசனமொன்றும் எழுதப்பட்டிருந்தது. அத்தியாய, வசன எண்;களைக் குறிப்பிடுக. அபூ ஸுப்யான் (ரழி) அவர்களிடம் அம்மன்னன் தொடுத்த வினாக்கள் எத்தனை?  அதில் இறுதி வினாவுக்கு அபூ ஸுப்யான் (ரழி) அவர்கள் அளித்த பதில்கள் என்ன?

5. பால்குடி உறவுள்ள இருவருக்கிடையில்; நடைபெற்ற திருமணத்தை நபியவர்கள் பிரித்து வைத்தார்கள். அவர்கள் யார்? என்பதையும் இ;வ்விடயம் இடம்பெற்றிருக்கும் ஹதீஸ் எண்ணையும் குறிப்பிடுக.
6. அலி (ரழி) அவர்களின் ஏட்டில் எழுதப்பட்டிருந்த விடயங்கள் எவை?

7. 'இரு முஸ்லிம்கள் தம் வாட்களால் சண்டையிட்டு; கொன்றவர், கொல்லப்பட்டவர் ஆகிய இருவருமே நரகத்தில் நுழைவர்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதில் கொல்லப்பட்டவர் நரகத்திற்குச் செல்வதற்கான காரணம் என்ன? இந்த ஹதீஸை அறிவிக்கும் ஸஹாபி யார்?

8. பாவம் செய்யும் இறை நம்பிக்கையாளர் பற்றி 'அல் முர்ஜிஆ' எனும் கூட்டத்தினரின் கூற்று யாது? என்பதை ஹதீஸ் இலக்கத்தோடு குறிப்பிடுக.

9. ஹதீஸ் கலை அறிஞர்களில் ஒருவர் அறிவிப்பாளர் வரிசையில் பயன்படுத்தப்படும் நான்கு வார்த்தைகளையும் ஒரே கருத்துடைய வார்த்தையாகக் கருதுகிறார். அவ்வறிஞர் யார்? அவ்வார்த்தைகள் எவை?

10. வுழூவின் போது தலையை ஒரு தடவையே தடவ வேண்டும், என வரும் ஹதீஸ்களின் அறிப்பாளர்களையும், ஹதீஸ் இலக்கங்களையும் கூறுக?

11. கை, கால்கள் வெட்டப்பட்டு, கண்கள் தோண்டப்பட்டு தண்டனை வழங்கப்பட்ட கூட்டம் எது? அவர்களுக்கு இத்தண்டனை வழங்கப்ப்ட, அவர்கள் செய்த நான்கு குற்றங்களும் எவை? ஹதீஸ் இலக்கத்துடன் குறிப்பிடுக?

12. கிப்லாவை முன்னோக்கியோ, பின்னோக்கியோ மலஜலம் கழிப்பது கூடாது, ஒரு சந்தர்ப்பத்தைத் தவிர. அச்சந்தர்ப்பம் யாது? அதற்கான ஹதீஸ் இலக்கங்களையும்; தருக.

முஸாபகது ரமழான் போட்டி அறிமுகத்தை பார்வையிட இங்கே கிளிக் செய்க..!

No comments

Powered by Blogger.