Header Ads



மேமன் சங்கத்தின் ஏற்பாட்டில் கிரிக்கெட் கார்னிவல் (படங்கள்)


 (ஏ.எஸ்.எம்.இர்ஷாத்)

இலங்கை மேமன் சங்கத்தின் 12வது வருடாந்த கிரிக்கட் கார்னிவல் செவ்வாய்க்கிழமை 27-11-2012 என்.சீ.சீ மைதானத்தில் முழுநாளும் நடைபெற்றது. மேமன் சங்கத்தின் ஏற்பாட்டாளரும் திட்டமிடல் பிரிவு தலைவருமான நஸார் லதீப் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டுப்படுத்தப்பட்ட ஐந்து ஓவர்களைக் கொண்ட கனிஷ்ட, சிரேஷ்ட மட்டத்தில் கிரிக்கட் போட்டிகள் நடைபெற்றன. 

இதன் பரிசளிப்பு நிகழ்வில் சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்தின் பணிப்பாளர் புரவலர் ஹாசிம் உமர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு  வெற்றி பெற்றவர்களுக்கான விருதுகளையும் சம்பியன் கிண்ணத்தையும் வழங்கினார்.

இறுதிப்போட்டி சில்வர் சிக்ஸ் அணிக்கும் சண்டே செவன் அணிக்கும் இடையே நடைபெற்றது. இதில் சில்வர் சிக்ஸ் அணி வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தை தட்டிக் கொண்டது. வெற்றி பெற்ற அணியின் தலைவர் எம்.ரஸீன் புரவலர் ஹாசிம் உமரிடமிருந்து சம்பியன் கிண்ணத்தை பெற்றுக் கொண்டார். 

மேமன் சங்கத்தின் பிரதி தலைவர் ஹாஜி சுலைமான், மேமன் சங்க உறுப்பினர்கள் மற்றும் அச்சமூகத்தின் ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டு போட்டியை உற்சாகப்படுத்தினர். 











No comments

Powered by Blogger.