Header Ads



தங்கத்துடன் போட்டிபோடும் சீனாவின் தேயிலை

சீனாவில் விளையும் ‌டீ வகைகளில் முக்‌கியமானவையாக கருதப்படும் டீ வகையான லாங்ஜிங் டீயின் ஒரு கிழோ விலை ரூபாய் 53 ஆயிரம் டாலர் என நிர்ணயிக்‌‌கப்பட்டுள்ளது. இது தற்போதை தங்கத்தின் கில‌ோ ஒன்றிற்கான விலையை விட சற்‌றே குறைவானதாகும். உலக வியாபாரிகளால் அதிகமாக விரும்பி வாங்கப்படும் டீ வகைகளில் இது முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த வகை டீ சீனாவின் பாரம்பரிய திருவிழாவான கிங்மிங் விழா கொண்டாடப்படும் மாதமான ஏப்ரல் மாதத்தில் அறு‌வடை செய்யப்படு்கிறது. ஸேஜியாங் மாகாணத்தி்ல் உள்ள ஹாங்க்ஜோவ் பகுதியில் விளைவி்க்கப்படுகிறது.

ஜூபைசாங் என்ற வியாபாரி கூறுகையில் கடந்த ஆண்டு இந்த வகை டீ சுமார் 10 ஆயிரம் யுவானிற்கு (சீனநாணயம்) விற்பனையானது. இந்தாண்டு இதன் விலை சுமார் 80 ஆயிரம் யுவான் வரை அதிகரிக்க கூடும் என தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் மற்றொரு ‌வகை டீயின் விலை கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கிலா ஒன்றிற்கு 600 யுவான் என விலை இருந்தது. அவை தற்போதைய விலை சுமார் 2 ஆயிரம் யுவான் என நிர்ணயி்க்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. அந்த இனத் தேயிலைகளில் அப்படி என்னதான் இருக்கின்றது?

    இலங்கையிலும் குறித்த இன தேயிலைகளை பயிரிட முடியாதா?

    ReplyDelete

Powered by Blogger.