மறக்கப்பட்ட மேதை, ஏமாற்றப்பட்ட சமூகம்
அவர்கள் ஒரு பெயரை மறைக்கிறார்கள், அந்தப் பெயரைக் குறிப்பிட்டால், அவர்கள் நம்பும் ஹீரோக்களின் புத்திசாலித்தனம் மறைந்துபோகும் என பயப்படுகிறார்கள்.
🛑 அந்தப் பெயர் எதிரொலிக்கத் தொடங்கினால், பல்கலைக்கழக அரங்குகளும் அதனுடன் சேர்ந்து எதிரொலிக்கும்.
🌷 ஒவ்வொரு அறிவியல் துறையிலும் அந்தப் பெயரின் மரியாதைக்காக தொப்பிகள் உயர்த்தப்படும்.
🌷இந்த நூற்றாண்டில் மட்டுமல்ல, முந்தைய நூற்றாண்டுகளிலும் வெளிச்சம் பாய்ச்சிய ஒரு பெயர்.
🔴 அவர்தான் அபூ ரய்ஹான் அல்-பிரூனி (Al-Biruni) எனும் இஸ்லாமிய உலகின் மிகச்சிறந்த அறிஞர்.
இவரை "பல்துறை அறிஞர்" (Polymath) என்று உலகம் போற்றுகிறது.
இவர் இரண்டு கால்களில் நடக்கும் ஒரு கலைக்களஞ்சியம்!
ஆய்வகங்களும் கணினிகளும் இல்லாத காலத்தில், எண்ணெய் விளக்குகளும் அறிஞர்களின் மை குப்பிகளும் இல்லாத காலத்தில், 10 துறைகளின் அறிவை தனக்குள்ளே உள்ளடக்கிய ஒற்றை மனிதர்.
✍️ 120க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்.
🌍 செயற்கைக்கோள்கள் இல்லாமல் பூமியின் சுற்றளவை வியக்கத்தக்க துல்லியத்துடன் (99.7%) கணக்கிட்டார்!
🔭 ஐரோப்பா பிறப்பதற்கு முன்பே பூமி அதன் அச்சில் சுழல்வதை நிரூபித்தார்!
🧭 1000 ஆண்டுகளுக்கு முன்பே புவியியல் அறிவியலின் அடித்தளத்தை அமைத்தார்!
🧪 வானியல், மருத்துவம், வேதியியல், கணிதம், வரலாறு, தத்துவம், புவியியல் மற்றும் பல துறைகளில் தேர்ச்சி பெற்றவர்!
🧪 வரலாற்றில் "இந்தியவியலின் தந்தை" (Father of Indology) என்று அழைக்கப்படுகிறார். இந்தியாவுக்கு வந்த அவர், இங்குள்ள கலாச்சாரம் மற்றும் அறிவியலை ஆழமாகப் பயின்றார்.
✍️ கிதாபுல் ஹிந்த் (Kitab al-Hind). இது இந்தியாவின் மதம், தத்துவம், சாதி முறை, சமூக பழக்கவழக்கங்கள் மற்றும் அறிவியல் குறித்து அவர் எழுதிய மிகப்புகழ்பெற்ற நூல்.
இந்தியாவின் சமஸ்கிருத அறிஞர்களுடன் கலந்துரையாடி, இந்து தர்மத்தின் தத்துவங்களை நடுநிலையோடு பதிவு செய்தார்.
🌴 இவரைப் பற்றி மேதைகள் என்ன கூறினார்கள்?
🧑🏫 ஜெர்மன் ஓரியண்டலிஸ்ட் சச்சாவ்: "மனிதகுலம் இதுவரை கண்டதிலேயே மிகப்பெரிய மேதை!"
📚 ஜார்ஜ் சார்டன், தனது அறிவியலின் வரலாறு எனும் நூலின் முன்னுரையில்: “அவர் ஒரு பயணி, தத்துவஞானி, வானியலாளர், பல்துறை வல்லுநர், இஸ்லாத்தின் மிகச்சிறந்த நபர்களில் ஒருவர், உலகின் மிகச் சிறந்த அறிஞர்களில் ஒருவர்.”
இன்று நமது மாணவர்கள் அவரைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறார்களா?
அவர் நமது பாடத்திட்டங்களில் சேர்க்கப்பட்டுள்ளாரா? இல்லை.
அவரது வாழ்க்கை வரலாறு பொய்யான வரலாற்றின் குவியல்களின் கீழ் புதைக்கப்பட்டுள்ளது.
உலகுக்கே வழிகாட்டிய நமது சமூகத்தின் நினைவிலிருந்துகூட அல்-பிரூனியின் பெயர் அழிக்கப்பட்டதுதான் வேதனை.
காரணம், விஞ்ஞானம் மேற்கில் மட்டுமே பிறந்தது என்று நாமும் நம்ப ஆரம்பித்துவிட்டோம்.
நமது மகிமையைக் கொண்டாடுவதற்குப் பதிலாக மன்னிப்பு கேட்கத் தொடங்கிவிட்டோம்.
📌 கற்றுக்கொண்ட பாடம்:
நமக்காக வேறொருவரின் வரலாறு எழுதப்படுவதற்கு முன்பு நமது வரலாற்றை நாம் அறிந்து கொள்ளவேண்டும். நமது நாகரிகத்தை வெளிக்காட்டுவதற்கு வெட்கப்பட வேண்டியதில்லை. ஆனால் அதை அறியாதவராக இருப்பதற்காக வெட்கப்படவேண்டும்!
✍️ நூஹ் மஹ்ழரி

Post a Comment