Header Ads



இஸ்லாமிய சமூகத்தின் அபிலாஷைகள் மதிக்கப்பட வேண்டும் - செல்வம் அடைக்கலநாதன்


இஸ்லாமிய சமூகத்தின் அபிலாஷைகள் மதிக்கப்பட வேண்டியது, தமிழ் மொழியால் பிரிக்க முடியாத இணைந்த சமூகங்கள் தமிழர்களும், முஸ்லிம்களும் எமது  பயணம் ஆரோக்கியமானதாகவே என்றும் இருக்கும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன்  தெரிவித்துள்ளார்.

புத்தளத்தில்  நேற்று இரவு தனிப்பட்ட நட்பு விஜயத்தின் போது இந்த சந்திப்பு இடம் பெற்றது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்,முஸ்லிம் கட்சிகள் அனுப்ப உள்ள ஆவணம் தொடர்பில் முஸ்லிம் புத்தி ஜீவிகள் மத்தியில் பேசப்படும் விடயங்கள்  தொடர்பில் புத்தளம் மாவட்ட தமிழ்,முஸ்லிம் ஊடகவியலாளர் சங்கத்தின் செயலாளர் தேசமான்ய  இர்ஷாத் றஹ்மத்துல்லா விளக்கமளித்தார்.

இதன் போது அவர் வழங்கிய பதில் மகிழ்ச்சிக்குரியதாக இருந்த்து.

யதார்த்தத்தின் அடிப்படையில் காத்திரமாக இரு சமூகங்களும் எவ்வித பிரிவுகளுமின்றி சகோதர உணர்வுகளுடன் பயணிக்கும் என்ற புதுவருட வாழ்த்தாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் இன்றைய சந்திப்பின் போது கருத்துரைத்தார்.

இதே வேளை தற்போதைய  அரசாங்கத்தின் செயற்பாடு மற்றும் வடகிழக்குக்கு வெளியே அரசியல் செயல்பாடுகள் தொடர்பிலும் இதன் போது  சுட்டிக்காட்டினார்.


1 comment:

  1. போடா மயிராண்டி.. முஸ்லிம்களின் ஜனாஸாக்களை மன்னாரில் புதைக்க இடம்கொடுக்காத உம்முடைய இனவாதம் புழுத்த எண்ணம் இப்பொழுது முஸ்லிம்களுக்காக பேசுகின்றதா?? உங்களுடைய நாயவஞ்சக குணத்தால் முஸ்லிம்களை நக்கியாவது உங்கள் வழிக்கு இழுக்க பார்க்கிறீர்கள். ஆனால் அந்த பருப்பு முஸ்லிம்களிடம் வேகாது நீங்கள் யார் உங்கள் குணம் என்னவென்று முஸ்லிம்களுக்கு நன்றாக தெரியும் வேறு வேலையிருந்தால் பாருங்கடா.

    ReplyDelete

Powered by Blogger.