Header Ads



Dr ஷாபி சம்பள நிலுவையுடன் மீண்டும் பணியில் அமர்த்தப்படவுள்ளார்.


குருநாகல் வைத்தியசாலையில் பணிபுரிந்த மகப்பேறு மருத்துவர் டாக்டர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபி மீண்டும் பணியில் அமர்த்தப்படவுள்ளார்.

மேலும் கட்டாய விடுப்புக் காலத்திற்குரிய அனைத்து ஊதியங்களையும் அவருக்கு வழங்கவும் பொதுச் சேவை ஆணைக்குழு சுகாதாரச் செயலாளருக்கு அறிவித்துள்ளது.

இவர் குருநாகல் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிய காலப்பகுதியி பெலோபியன் குழாயில் தடை ஏற்படுத்துவதன் ஊடாக  சிங்கள தாய்மார்களுக்கு சட்ட விரோத கருத்தடைசெய்தார் என பல்வேறு தரப்பினரால் குற்றம் சுமத்தப்பட்டது.

இது நாடளாவியரீதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

மேலும், 2019. மே 24, முதல் வைத்தியர் ஷாபியை கட்டாய விடுப்பில் அனுப்ப சுகாதார அமைச்சகம் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

3 comments:

  1. இந்த அநீதிக்குக் காரணமானவர்களின் மரணத்தைக் காண ஆவலாக இருக்கிறேன். நிச்சயம் அவர்களின் மரணங்கள் அருவருப்பானதாக அமைய வாய்ப்புண்டு. அதுதான் இயற்கையின் இயல்பு.

    ReplyDelete
  2. உண்மை ஒரு நாள் வென்றே தீரும் என்பதுக்கு இது ஒரு அத்தாட்சி

    ReplyDelete

Powered by Blogger.