Header Ads



அலி சப்ரியை உடனடியாக நீக்கு - ஞானசாரர் விடாப்பிடி


நீதி அமைச்சர் பதவியில் இருந்து அலி சப்ரி (Ali Sabry) உடனடியாக நீக்கப்பட வேண்டும் எனவும் அவர் நீதி அமைச்சர் பதவியில் இருக்கும் வரையில் சஹ்ரான் செய்த குற்றங்களுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொள்ள முடியாது எனவும் பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளரும் 'ஒரே நாடு - ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணியின் தலைவருமான கலகொட அத்தே ஞானசார தேரர் (Gnanasara Thera) தெரிவித்துள்ளார்.

'ஒரே நாடு - ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணியின் தலைமைத்துவம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளதுடன், நீதி அமைச்சர் உள்ளிட்ட ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள நிலையில் அதற்குப் பதில் தெரிவிக்கும்போதே ஞானசார தேரர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

'ஒரே நாடு - ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணி உருவாக்கத்தின் போதும், அதில் என்னைத் தலைவராக நியமித்துள்ளதற்கும் பல்வேறு விமர்சனங்கள், அவதூறு கருத்துக்கள் எழுவதை அவதானித்தே வருகின்றேன். ஆனால், இவற்றை நாம் கருத்தில்கொள்ளப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.  

2 comments:

  1. சபாஷ் சரியான போட்டி. கௌரவ. அலி சப்ரி அவர்கள் இலங்கை மக்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து வாழ முடியுமா? அல்லவா? என்ற முடிவெடுக்கும் தருணம்.

    ReplyDelete
  2. அலிசப்ரியை நீதி அமைச்சராக நியமித்தது சனாதிபதி, ஞானசாரயின் செயலணியின் தலைவரையும் நியமித்தது சனாதிபதி, அப்படியானால் சனாதிபதியால் நியமிக்கப்பட்ட அமைச்சரை நீக்குமாறு சனாதிபதி நியமித்த ஒருவனுக்கு என்ன அதிகாரமிருக்கின்றது. அல்லது பிள்ளையையும் கிண்டி தொட்டிலாடடும் நாடகத்தின் ஓரம்சமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

    ReplyDelete

Powered by Blogger.