Header Ads



டொலர் தட்டுப்பாடு - இறக்குமதியை குறைக்கவும் இந்தியா, சீனா, ஜப்பானுடன் கலந்துரையாடவும் நடவடிக்கை


டொலர் தட்டுப்பாடு காரணமாக இறக்குமதியை தொடர்ந்தும் கட்டுப்படுத்துமாறு நிதி அமைச்சர் பெஷில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி சிங்கப்பூர் சென்றுள்ள நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் நேற்று (13) இரவு நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

எனினும், எரிபொருள், மருந்து, அத்தியாவசிய உணவு பொருட்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கான பொருட்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் கூறியுள்ளார்.

டொலர் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் கலந்துரையாடல்களை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

மேலும், இந்தியாவிற்கான தனது விஜயம் வெற்றியளித்துள்ளதாகவும் நிதி அமைச்சர் மேலும் கூறினார்.

2 comments:

  1. பிச்சைக்காரனுக்கு யாரும் கடன் கொடுப்பதில்லை என்ற யதார்த்தம் இந்த நாட்டின் வாழும் ஹிமார்களுக்கு விளங்குவதில்லை.

    ReplyDelete
  2. "ஹிமார்" என்ற அரபுச் சொல்லுக்கு தமிழில் "எருமை மாடு" என்ற கருத்து. இந்த ஹிமார் இரண்டு வேலைகளை மாத்திரம் செய்யும். ஒன்று சாப்பிட தலையை கீழே இறக்கும். சாப்பிட்டு முடிந்தவுடன் தலையை மேலே உயர்த்தும்.

    ReplyDelete

Powered by Blogger.