Header Ads



பாராளுமன்றத்திற்குள் தமக்கு அநீதி இழைக்கப்படுவதாக எதிர்கட்சி குற்றச்சாட்டு


நாடாளுமன்றத்தில் புறக்கணிப்புச் செயற்பாடு தொடா்பாக, இன்று எதிர்க்கட்சியினர், தமது ஆட்சேபனைகளை வெளியிட்டனா்.

நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பமானதும், நாடாளுமன்ற உறுப்பினா்களின் வாய்மூலக் கேள்விகள் தொடுக்கப்படும் சந்தா்ப்பத்தில் ஆளும் கட்சியினருக்கு அதிக வாய்ப்புக்கள் வழங்கப்படுவதாகக் கூறியே இந்த ஆட்சேபனைத் தொிவிக்கப்பட்டது.

ஆளும் கட்சியினர், தமது பிரச்சனைகளை ஆளும் கட்சியின் குழுக்கூட்டத்தில் தீா்த்துக்கொள்ளமுடியும்.

இந்தநிலையில் எதிா்க்கட்சியினரே, ஆளும் கட்சியினரிடம் வாய்மூலக் கேள்வி நேரத்தின்போது அதிக கேள்விகளை கேட்கவேண்டியிருக்கும்.

எனினும் தொடா்ந்து வரும் அமர்வுகளின்போது அரசாங்கக்கட்சியினருக்கே அதிக வாய்ப்புக்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

எனவே நாடாளுமன்ற உறுப்பினா்களின் உாிமைகளை பாதுகாக்கும் கடமையைக் கொண்டுள்ள சபாநாயகா் இதற்கு உாிய தீா்வைத் தரவேண்டும் என்று எதிா்க்கட்சியினா் கோாினா்.

இதனை ஏற்றுக்கொண்ட சபாநாயகா், இது தொடா்பில் பாிசீலனை செய்வதாக உறுதியளித்தாா் TW

No comments

Powered by Blogger.