Header Ads



ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகள் குறித்து அரசாங்கத்தையோ, பொலிஸாரையோ எவராலும் பழி சொல்ல முடியாது - சரத் வீரசேகர


ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் குறித்து, அரசாங்கத்தையோ அல்லது பொலிஸாரையோ எவராலும் பழி சொல்ல முடியாது என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

இன்றையதினம் (27) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்விடயத்தை அவர் தெரிவித்தார்.

பொலிஸார் தங்களது கடமையைச் செய்துள்ளனர் என்றும் இந்த விசாரணைகள் அனைத்தும் முடிக்கப்பட்டு சட்டமா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதுவரை, ஐந்து மேல் நீதிமன்றங்களில் ஒன்பது வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பதுடன், இதைத் திட்டமிட்ட மிகவும் ஆபத்தான பயங்கரவாதிகள் 24 பேருக்கு எதிராக ஏற்கனவே அதி குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார்.

மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவரடங்கிய தீர்ப்பாயம் நியமிக்கப்பட்டு, நாளாந்தம் வழக்குகளை விசாரிக்கும் அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்த அவர், விசாரணைகள் மூடி மறைக்கப்படுவதாக அரசாங்கத்தையோ, பொலிஸாரையோ எவராலும் குறை கூற முடியாது என்று சுட்டிக்காட்டினார்.

2001ஆம் ஆண்டு செப்டெம்பர் 11ஆம் திகதியன்று உலக வர்த்தக மையத்தைத் தாக்கிய ஷேக் முகமது இரண்டு வாரங்களுக்கு முன்னர், அதாவது 20 வருடங்கள் கழித்து குற்றஞ்சாட்டப்பட்டார் என்று குறிப்பிட்ட அமைச்சர், வழக்கு நடவடிக்கை தொடர்பில் நாம் திருப்தி அடையலாம் என்றும் குறிப்பிட்டார். 

பொலிஸ் துறைக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து சட்டமா அதிபரிடம் கையளித்துள்ளோம் என்றும் அவரின் கைகளிலேயே வழக்கு தொடர்பான பணிகள் உள்ளன என்று மேலும் தெரிவித்தார்.

2 comments:

  1. மிகச் சிறந்த நகைச் சுவையாளருக்கான Nobel Price ஒன்று இருக்குமானால் எதுவித
    சந்தேகமுமின்றி
    அதனைத் தமதாக்கிக் கொள்வார்!

    ReplyDelete
  2. so, he says that 'there is none in the world who's responsible for the attack'

    ReplyDelete

Powered by Blogger.