Header Ads



பாராளுமன்ற உறுப்பினராகும் வாய்ப்பு, ஞானசாரருக்கு கிடைக்குமா..?


அத்துரலியே ரத்ன தேரரின் கட்சி உறுப்புரிமை ரத்து செய்யப்பட்டுள்ளதால் அவரது பாராளுமன்ற உறுப்புரிமை பறிபோகும் நிலையுள்ளதாகக் கூறப்படுவ தால் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்புரிமை கிடைக்கும் சாத்தியம் உள்ளது. 

எங்கள் மக்கள் சக்தி கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரரின் கட்சி உறுப்புரிமை ரத்து செய்யப்பட்டு கட்சியின் பொதுச் செயலாளரால் தேர்தல் ஆணையாளருக்கு இது குறித்து  அறிவிக்கப்பட்டுள்ளதால் ரத்ன தேரரின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஆபத்து ஏற்பட் டுள்ளது.

அத்துரலியே ரத்ன தேரர் ஜனவரி 5 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றார்.  இந்த தேசிய பட்டியல் குறித்து  எங்கள் மக்கள் சக்தி கட்சியில் கடும் சர்ச்சை ஏற்பட்டது.

கலகொடஅத்தே ஞானசார தேரரும் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வேண்டும் எனக் கோரி வருகிறார்.

இந்நிலையில் விரைவில் ஞானசார தேரர் பாராளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்பார் எனக் கூறப்படுகிறது. Tl


No comments

Powered by Blogger.