September 05, 2021

முஸ்லிங்கள் வாழும் பகுதியில் இந்துக்கடவுள் சிலைகளை நிறுவினால் எப்படி இருக்கும்..? தமிழர் பகுதியில் மத்ரஸா கட்டுவது பொருத்தமானதல்ல - சந்திரசேகரம்

- NOORUL HUTHA UMAR -

யாரும், எங்கும் சட்ட ரீதியாக குடியிருக்கலாம். அதனை யாரும் தடுக்க முடியாது. அவர்களின் காணியில் அவர்கள் குடியிருக்க முழு உரிமையும் உள்ளது. ஆனால் அந்த காணியில் மதரஸா கட்டுவது பொருத்தமான ஒன்றல்ல. தமிழர்கள் செறிந்து வாழும் பிரதேசத்தில் இவ்வாறு ஒரு மதரஸா அமைப்பதானது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். குறித்த காணிக்கு அண்மையில் மிக நீண்ட கால வரலாற்றை கொண்ட கோயில் உள்ளது. தமிழர்களின் மரபுகள், கலாச்சாரம் இதன்மூலம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. முஸ்லிங்கள் செறிந்துவாழும் பிரதேசத்தின் நடுவில் இந்துக்கடவுள் சிலைகளை நிறுவினால் எப்படி இருக்கும். அதுபோலவே இந்த செயலும் உள்ளது என கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் தெரிவித்தார். 

அம்பாறை ஊடக அமையத்தில் இன்று -05- நடைபெற்ற கல்முனை காணி சர்ச்சை விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து அங்கு கருத்து வெளியிட்ட அவர்,  

கல்முனை பிரதேச தமிழ், முஸ்லிம் மக்களை பிரித்து மோதவிடும் நிலையை உருவாக்க அம்பாறைக்கு வெளியே இருந்து வந்த வெளியூர் அரசியல்வாதிகள் முயற்சிக்கிறார்கள். தமிழர்கள் செறிந்துவாழும் கல்முனை இரண்டாம் பிரிவில் அமைந்துள்ள கோயில் வீதியில் தமிழர் ஒருவருக்கு சொந்தமான காணியை முஸ்லிம் ஒருவருக்கு அந்த காணி உரிமையாளர் விற்பனை செய்துள்ளார். முஸ்லிம் ஒருவருக்கு காணியை விற்றதனால் எழுந்த சர்ச்சையை அடுத்து அந்த காணியை தமிழர் ஒருவரே திரும்பிவாங்க முன்னாள் பிரதியமைச்சர் கருணா அம்மான் (வி. முரளிதரன்) ஏற்பாடு செய்து ஒரு பேட்ச் காணியை ஒரு லட்சம் ரூபாய் வீதம் விற்பனை செய்ய ஆறுமாதம் கால அவகாசமும் வழங்கப்பட்டு எட்டு மாதங்கள் கடந்த நிலையில் இன்னும் அந்த காணியை எந்த தமிழரும் கொள்வனவு செய்ய முன்வரவில்லை. கடந்த தேர்தலில் இந்த காணியை காட்டி பிரச்சாரம் செய்து வாக்குப்பெற்றார் கருணா அம்மான். அந்த வளவின் எல்லை சுவற்றையும் அப்போது உடைத்தார்கள். 

பின்னர் ஓய்வுபெற்ற தமிழ் ஆசிரியர் ஒருவரின் குடும்பத்தினர் அந்த வளவை கொள்வனவு செய்ய பலமாதங்களின் பின்னர் தயாரான போது ஒரு பேட்ச் காணியை ஒரு லட்சத்தி அறுபதாயிரம் ரூபாய் வீதம் விற்பனை செய்ய காணி உரிமையாளர் இணக்கம் வெளியிட்டார். விலை கட்டுப்படியாகாத காரணத்தினால் அந்த விடயம் கைவிடப்பட்டது. இப்போது அந்த காணியை வாங்க எந்த தமிழரும் முன்வராத காரணத்தினால் அந்த காணியின் சுற்றுமதில் அமைக்கப்பட்டு மதரஸா ஒன்றை அமைக்க வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்த காணி விடயமானது இனவாத, பிரதேசவாத, கட்சி வாதங்களை கடந்து மனிதாபிமானத்துடன் அணுக வேண்டிய ஒன்றாக உள்ளது. 

இந்த விடயத்தில் மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகள் கல்முனை மாமங்க வித்தியாலயத்தை அண்டிய பிரதேசத்தில் எழுந்த காணிவிவகாரத்தை போன்று இதனையும் அணுகி யாருக்கும் பாதிப்பில்லாத நிரந்தர தீர்வை முன்வைக்க வேண்டும். இப்படியான முரண்பாடுகளை களைய எமது பிரதேசத்திலிருந்தே அரசியல் தலைமைகள் எதிர்காலத்தில் உருவாக வேண்டும். கடந்த மாகாணசபைக்கு அம்பாறையிலிருந்து மூன்று ராஜாக்களை அனுப்பினோம். முதலமைச்சராக சிவநேசதுரை சந்திரகாந்தன் இருந்தார். அவர்களினால் அம்பாறைக்கு எதையும் செய்ய முடியாமலே போனது. இப்போது பிள்ளையான் பாராளுமன்ற உறுப்பினராக உள்ளார். 

கல்முனை பிரதேச செயலகம் தொடர்பில் வாய் திறக்க முடியாது வாய்க்குள் கொழுக்கட்டை வைத்துள்ளார் போலும். சத்தமே வெளிவருவதாக தெரியவில்லை. அவரை மீண்டும் கிழக்கு முதலமைச்சராக கொண்டுவர சிலர் கடும் எத்தனிப்புக்களை செய்துகொண்டு அம்பாறையில் கப்பலை தொடர்ந்து படகுக்கு ஆதரவு திரட்டுகிறார். தமிழ் மக்களின் வாக்குகளை பெறுவோர் தமிழ் மக்களின் குரலாக எங்கும் ஒலிக்க வேண்டும் என்றார்.

11 கருத்துரைகள்:

இந்த விடயம் பெரிசாக அனுமதிக்காமல் பேச்சுவார்த்தை அடிப்படையில் சுமூகமாக தீர்த்துவைக்கபடவேண்டும். அதற்க்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு அன்புக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹாரிஸ் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.

அரசியல் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை. முன்னெல்லாம் மக்கள் சேவகர்கள்தான் அரசியலுக்குள் வந்தரர்கள். இன்றோ .......? மக்கள் சரியாக இருந்தால் அவரகளைமீறி எதுவும் நடந்து விடப்போவதில்லை. தமிழர் செறிவாக வாழும் பிரதேசத்தில் முஸ்லிம் ஒருவருக்குள்ள காணியில் மதரஸா அமைப்பதோ அல்லது பள்ளி கட்ட முயற்சிப்பதோ மிக மிக அடாத்தானது. ஒருவர் செய்யும் செயலினால் முழு இரண்'டு சமூகங்களும் பாதிக்கப்படக்கூடிய நிலைமை உருவாகலாம். அரசியலவாதிகளுக்குத் தீனி போடாமல் சமபந்தப்பட்ட மக்களே இப்பிரச்சினைக்கு சாதகமான தீர்வினை; கொண்டு வருவதுதான் மிகவும் பொருத்தமானது.

சந்திரசேகரம் யின் கருத்து நியாயமானது

சீ அப்படி எல்லாம் கட்டினால் இன ஒற்றுமை ஏற்பட்டுவிடும் தம்பி. விடக்கூடாது. நீங்கள் தனியாகவே இருந்து கொள்ளூங்கடா.

@jaffna இணையம் என்னுடைய கருத்தை ஏன் தடுத்துள்ளீர்கள்? இந்த தமிழ் இனவாதிகளுக்கு எதிராக எம்முடைய நிலைப்பாட்டை பதிவு செய்ய எமக்கு இந்த தளம் மாத்திரமே என்கிற நம்பிக்கையில் மாத்திரமே பதிவு செய்கின்றோம் அதிலும் ஏன் தடை ஏற்படுத்தி நயவஞ்சகமாக செய்யறப்பாடுகிறீர்கள்

Santhirasekaram aen ithanai inappirachchinayaakka munaiyavendum??? ithu oru saathaarana vidayamthaane?

மத்ரசா ஒரு பாடசாலை. அது ஒரு மத தலம் அல்ல. இது தவறான கருத்து. இவருக்கு மத தலம், மத விடயங்களை கற்கும் இடம் பற்றிய தெளிவு இல்லை.

இந்த நாட்டில் உள்ள பெரும்பாலான மதரஸாக்களால் இனஒற்றுமை ஏற்பட்டுள்ளது என யாராவது வாதாடினால் தயவுசெய்து ஓரிரு உதாரணங்கைளத் தருமாறு பணிவாக வேண்டிக் கொள்கின்றேன். எந்த ஒரு மதரஸாவாவது அரபுமொழிக்கு அடுத்து சிங்கள மொழியைக்கற்று சிறந்த மார்க்க போதகர்களை உருவாக்கும் திட்டம் இதுவரை இருந்ததா, எனக்குத் தெரிந்த மட்டில் மிக அண்மையில் திஹாரியில் ஆரம்பிக்கப்பட்டு இயங்கி வரும் ஒரே ஒரு மதரஸாதான் இருக்கின்றது. அதுதவிர இலங்கையில் உள்ள நூற்றுக்கணக்கான மதரஸாக்களில் சிங்களமொழி,சிங்கள இலக்கியம், பௌத்தசமயம் போன்றவை அவர்களுடைய பாடத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டிருக்கின்றதா? பதிலை எதிர்பார்க்கின்றோம்.

அப்பட்டமான உண்மை ஒன்று இருப்பதை இவர் மட்டுமல்ல எவரும் அறியவில்லை. ஏன் இவர்கள் சம்மாந்துறை. அக்கறைபற்றுகளூக்குள். எந்த இந்துவும் இல்லாத உள்ளுக்குள் இந்து கோயில் கள் இப்போதும்அப்படியே இருப்பது எதக்கு முஸ்லிம்களு க்காகவோ? கண்ணத்திண்ட சந்திரசேகரம்.

அப்பட்டமான உண்மை ஒன்று இருப்பதை இவர் மட்டுமல்ல எவரும் அறியவில்லை. ஏன் இவர்கள் சம்மாந்துறை. அக்கறைபற்றுகளூக்குள். எந்த இந்துவும் இல்லாத உள்ளுக்குள் இந்து கோயில் கள் இப்போதும்அப்படியே இருப்பது எதக்கு முஸ்லிம்களு க்காகவோ? கண்ணத்திண்ட சந்திரசேகரம்.

அப்பட்டமான உண்மை ஒன்று இருப்பதை இவர் மட்டுமல்ல எவரும் அறியவில்லை. ஏன் இவர்கள் சம்மாந்துறை. அக்கறைபற்றுகளூக்குள். எந்த இந்துவும் இல்லாத உள்ளுக்குள் இந்து கோயில் கள் இப்போதும்அப்படியே இருப்பது எதக்கு முஸ்லிம்களு க்காகவோ? கண்ணத்திண்ட சந்திரசேகரம்.

Post a Comment