Header Ads



2 தடுப்பூசிகளையும் பெறாதவர்களுக்கு, பொது இடங்களில் நடமாட தடை


முப்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் கொவிட்-19 தடுப்பூசியினை பெற்றிருப்பது நாளை -15- முதல் மன்னாரில் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய, மன்னார் மாவட்டத்தில், இரு தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு, பொது இடங்களில் நடமாடுவதற்கும், மீன்பிடி நடவடிக்கைகளுக்காக கடலுக்கு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் சுகாதார சேவைகள் பணிப்பாளர் எஸ். வினோதன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் நேற்று நடைபெற்ற கொவிட் தடுப்புக் குழு கூட்டத்திலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

மன்னார் மாவட்ட மக்களுக்கும் இந்தியர்களுக்கும் இடையிலான தொடர்பு அதிகரித்து வருவதானாலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அதற்கமைய, காவல்துறை சோதனை சாவடிகளிலும், மீன்பிடி துறைமுகங்களில் கொவிட் தடுப்பூசி அட்டைகளை சோதனையிடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. Hiru

No comments

Powered by Blogger.