Header Ads



இலங்கையில் காட்போட்டினால் செய்யப்பட்ட பிரேதப் பெட்டிகளுக்குரிய தேவை கிடுகிடு என உயர்வு

கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழப்புகள் அதிகரிப்பதால் காட்போட்டினால் செய்யப்பட்ட பிரேதப் பெட்டிகளுக்கு பெரும் தேவை காணப்படுவதாக தெகிவளை மவுண்ட்லவேனியாவின் மாநகரசபை உறுப்பினர் பிரியந்த சகாபந்து தெரிவித்துள்ளார்.

கார்ட்போட் பிரேதப் பெட்டிகளை தயாரிக்கும் திட்டத்தை முன்னெடுத்தவர்களில் முன்னோடியான பிரியந்த சகாபந்து பல பிரதேச சபைகள் காட்போட்டினால் தயாரிக்கப்பட்ட பிரேதப்பெட்டிகளை வழங்குமாறு கோரியுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் 100 பெட்டிகள் வேண்டும் எனத் தெரிவித்தார் என பிரியந்த சகாபந்து தெரிவித்துள்ளார்.

இந்த வகை பிரேதப் பெட்டிகளால் சூழலிற்கு பாதிப்பில்லை, இவை ஐந்து நிமிடங்களில் எரிந்து முடிந்து விடுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கார்ட்போட் பிரேதப்பெட்டிகளை எரியூட்டுவதற்கு குறைந்தளவு எரிவாயுவே தேவைப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொவிட் உட்பட பல்வேறு காரணங்களால் நாளாந்தம் 400 பேர் உயிரிழக்கின்றனர் எனத் தெரிவித்துள்ள அவர் மரப் பிரேதப்பெட்டிகளிற்காக நாளாந்தம் 200 மரங்கள் தறிக்கப்படுகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.

இவை சூழலிற்கு பாதிப்பை ஏற்படுத்தாதவை எனத் தெரிவித்துள்ள சகாபந்து இறுதி நிகழ்வுகளை முன்னெடுக்கும் அனைவரும் இந்த மாற்றத்தை வரவேற்பார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

தங்கள் மாநகரசபை தற்போது காட்போட் பிரேதப்பெட்டிகளை  இலவசமாகவே வழங்குகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார். TL

No comments

Powered by Blogger.