Header Ads



கொரோனா உடல்களை விடுவிப்பதில் தாமதம் - சுகாதார அமைச்சின் சுற்றுநிருபமே காரணமென குற்றச்சாட்டு


வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் மரணித்த கொவிட்-19 நோயாளர்களின் சரீரங்களை, பிரேத பரிசோதனைக்காக அனுப்பியதன் பின்னர், மீண்டும் விடுவிப்பதில் தாமதம் ஏற்படுவதாக இலங்கை திடீர் மரண விசாரணையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சினால், கடந்த ஜுன் மாதம் 19 ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கையினால், இந்தத் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. 

குறித்த சுற்றறிக்கைக்கு அமைய, வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் மரணித்த கொவிட்-19 நோயாளர்களின் சரீரங்களை, கட்டாயமாக சட்டவைத்திய அதிகாரியிடம் அனுப்பி, பிரேத பரிசோதனை மேற்கொள்ளுமாறு குறிப்பிடப்பட்டுள்ளமையால், சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. 

சுகாதார அமைச்சின் சுற்றறிக்கையில், மிகவும் முறையற்ற தன்மை உள்ளது. 

எனவே, தமது சங்கத்திடம் வினவி, நடைமுறை ரீதியில் செயற்படுவது எவ்வாறு என்பதை அறிந்து, சுற்றறிக்கையை வெளியிடுவது சிறந்ததாகும் என்றும் திடீர் மரண விசாரணையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.