Header Ads



ஆப்கானிஸ்தானில் இருந்து முற்றுமுழுதாக வெளியேறியது அமெரிக்கா - 20 ஆண்டு போர் முடிந்தது, தாலிபன்கள் கொண்டாட்டம்


அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையாக விலகியுள்ளன. ஆகஸ்டு 31க்குள் வெளியேற்ற நடவடிக்கைளை முடிக்க வேண்டும் என்று அமெரிக்கா வைத்திருந்த இலக்கு எட்டப்பட்டுள்ளது.

சுமார் 3000 பேர் கொல்லப்பட்ட, செப்டம்பர் 11 தாக்குதல் என்று பரவலாக அறியப்படும் அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல் 2001ஆம் ஆண்டு நடந்த பிறகு அப்போது ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்து கொண்டிருந்த தாலிபன்கள், தீவிரவாதிகளுக்கு புகலிடம் அளிப்பதாக அமெரிக்கா அந்த நாட்டின் மீது படையெடுத்தது.

1996 முதல் 2001 வரை ஆப்கானிஸ்தான் தாலிபன் ஆட்சியின்கீழ் இருந்தது. இருபது ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க படைகள் விலகிய நிலையில் தற்போது மீண்டும் தாலிபன்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றியுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் முழுவதும் வெளியேறியதை தாலிபன்கள் கொண்டாடி வருகின்றனர்.

தாலிபன்களை நாட்டைக் கைப்பற்றிய பின்னரும் வெளியேற்ற நடவடிக்கைகளுக்காக காபூல் சர்வதேச விமான நிலையம் அமெரிக்கா தலைமையிலான படைகளின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. இப்போது அதுவும் தாலிபன்கள் வசம் வந்துள்ளது.

அங்கு தாலிபன்கள் இருப்பதைக் காட்டும் சில காணொளிகள் வெளியாகியுள்ளன. .

காபூலில் உள்ள ஹமீது கர்சாய் சர்வதேச விமான நிலையத்தில் கொண்டாடும் வகையிலான துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டன. தாலிபன்கள் ஆப்கானிஸ்தான் நகர தெருக்களிலும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. BBC

No comments

Powered by Blogger.