Header Ads



இன்னும் 2 மாதங்களில் இலங்கையில் நிச்சயம் பஞ்சம் ஏற்படும், தற்போதைய ஆட்சியாளர்களால் அதனை தடுத்து நிறுத்த முடியாது - சம்பிக்க


இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியானது குறுகிய காலத்தில் ஏற்பட்டதல்ல, அது நீண்டகாலமாக அதிகரித்து வந்த நிலைமையின் பிரதிபலன் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

சிங்கள வலையெளி தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

அந்நிய செலாவணி கையிருப்பில் இல்லாத நெருக்கடியே தற்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமையானது அடுத்ததாக தேசிய நிதி பற்றாக்குறையாகவும், தேசிய சந்தையில் வீழ்ச்சியாகவும் மாறும்.

சர்வதேச நிதி தரப்படுத்தல் நிறுவனங்களுக்கு அமைய இலங்கை தற்போது மிகவும் ஆபத்தான நாடுகளுக்கும் கீழே உள்ளது.

அடுத்த நிலைமையானது வாங்குரோத்து நிலைமையாகும். மிக விரைவில் ஒரு நாள் இலங்கையின் வங்கித்துறை வீழ்ச்சியடைக் கூடும்.

இன்னும் இரண்டு மாதங்களில் இலங்கையில் நிச்சயம் பஞ்சம் ஏற்படும். தற்போதைய ஆட்சியாளர்களால் அதனை தடுத்து நிறுத்த முடியாது எனவும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.