Header Ads



சுகாதாரத்திற்கு பெறும் அச்சுறுத்தலாக மாறியுள்ள, நீர்கொழும்பு பஸ் டிப்போ - வைத்திய அதிகாரி Dr சமீர அபேசிங்க


- Ismathul Rahuman -

நீர்கொழும்பு பெரியமுல்லையில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் டிப்போ சுகாதாரத்திற்கு பெறும் அச்சுறுத்தலாக உள்ளதாக நீர்கொழும்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் சமீர அபேசிங்க தெரிவித்தார்.

நீர்கொழும்பு மாநகர சபையினால் பெரியமுல்லை, லாஸரஸ் வீதியில் ஆரம்பிக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு வேலை இத்திட்டத்தின் போது பொது சுகாதாரப் பரிசோதகர்கள், பிரதி மேயர் எம்.ஏ.இசட். பரீஸ் ஆகியோர்களுடன் பஸ் டிப்போவுக்குச் சென்ற சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் சமீர அபேசிங்க டிப்போ சூழலை அவதாணித்தபின் இதனால் டெங்கு மற்றுமன்றி இப்பிரதேச சுகாதாரத்திற்கே 

அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக கூறினார். பழுதடைந்த பழைய பஸ் வண்டிகள் அங்கு பலவருட காலமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்ததன. அவற்றிற்கு மேலால் காடு படர்ந்துள்ளது. பழைய டயர்கள், உறுதிப்பாகங்கள், இரும்புப் பொருட்கள் கண்டபடி போடப்பட்டுள்ளன. பயன்படுத்தப்படாத உயரத்திலுள்ள நீர்தாங்கிக்கு மேலால் செடிகள் படர்ந்துள்ளன. நீர்தேங்கி நிற்கக் கூடிய பொருட்கள் ஆங்காங்கே காணப்படுகின்றன. நுளம்புகளை உற்பத்திசெய்யும் இடமாகவே காட்சியளிக்கின்றன.

ஸ்தலத்திலிருந்து டிப்போ அதிகாரி ஒருவரை சுகாதார வைத்திய அதிகாரி அழைத்த போது தற்போது வரமுடியாத நிலையில் உள்ளதால் பின்னர் காரியாலயத்தில் வந்து சந்திப்பதாக கூறியுள்ளர்.

இந்த பஸ் டிப்போவின் பின்பக்க எல்லையில் 1500 மேற்பட்ட மாணவர்கள் கல்விகற்கும் பாடசாலையும், வலது, இடது பக்கங்களில் பாரிய சனக் குடியாட்டங்களும் உள்ளன. இவற்றிற்கும் டிப்போ சூழல் பெறும் அச்சுறுத்தலாக உள்ளன.

இங்கு பல முறை டெங்கு நுளம்பு குடம்பிகள் கண்டுபிடிக்கப்பட்டதுடன் டெங்கு நுளம்பு பரவும் விதத்தில் சூழலை வைத்தமைக்காக வழக்கும் தொடரப்பட்டு அபராதமும் விதிக்கப்பட்டதாக கூறிய வைத்திய அதிகாரி சமீர இம்முறை பழுதடைந்த பழைய பஸ்களையும், பொருட்களையும் அங்கிருந்து அகற்றி சுத்தமாக வைத்திருக்க நீதிமன்ற உத்தரவை பெறவேண்டும் என தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக அடுத்த பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் புகைப்பட ஆதாரங்களுடன் அறிக்கை ஒன்றை சமர்பித்து இதற்கெதிராக நடவடிக்கை எடுக்க ஆவண செய்வதாக கூறினார்.

1 comment:

Powered by Blogger.