Header Ads



கொழும்பிலுள்ள பாகிஸ்தான் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கை


செய்தி வெளியீடு

பண மோசடி தொடர்பான ஆசியா பசிபிக் குழு (A.P.G ) பாகிஸ்தானின் இரண்டாவது மதிப்பீட்டு  அறிக்கையின் முடிவுகளை 02 ஜூன் 2021 அன்று வெளியிட்டது.  அவ்வறிக்கையின் படி,  40 நிதி நடவடிக்கை பணிக்குழு பரிந்துரைகளில் 31 ல் பாகிஸ்தான் சாதகமான மதிப்பீட்டை அடைந்துள்ளது.

இந்த முடிவுகள் பாகிஸ்தான் அரசாங்கத்தின் நேர்மையை நிரூபிக்கின்றன. இந்த முடிவுகள் உலகளாவிய AML/CFT தரங்களுக்கு இணையாக பாகிஸ்தானைக் கொண்டுவருவதின் வெளிப்பாடாகும். இந்த முடிவுகள், பாகிஸ்தான் அரசாங்க அணுகுமுறையின் வெளிப்பாடாகும்.

நிதி நடவடிக்கை பணிக்குழுவின் மதிப்பீட்டு அறிக்கை இரண்டு களங்களில் மதிப்பிடப்படுகிறது. தொழில்நுட்ப இணக்கம் / சட்ட கருவிகள் மற்றும் செயல்திறன் ஆகியவை  இதில் அடங்கும்.

பாகிஸ்தானின் மதிப்பீட்டு அறிக்கை ஒக்டோபர் 2019 இல் உள்வாங்கப்பட்டது.  ஆனால், தொழில்நுட்ப இணக்கத்திற்கான 40  பரிந்துரைகளில் 10 இல் பெரும்பாலும் பாகிஸ்தான் புகார் செய்யப்பட்டது.

மதிப்பீட்டு அறிக்கைக்கு உள் வாங்கப்பட்டதன் பின்னர், நிதி நடவடிக்கை பணிக்குழுவால் பாகிஸ்தான் கண்காணிப்பின்  கீழ் வைக்கப்பட்டது. இது பெப்ரவரி 2021 இல் காலாவதியானது. இந்த காலகட்டத்தில், பாகிஸ்தான் 14 மத்திய சட்டங்கள் மற்றும் 3 மாகாண சட்டங்கள் மற்றும் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுடன் பாரிய சட்ட சீர்திருத்தங்களை மேற்கொண்டது. இச் சட்டங்கள் பாகிஸ்தானில் உள்ள அமைப்புகளை வலுப்படுத்தியது மட்டுமல்லாமல், நிலைத்தன்மையையும் கொண்டு வந்தன. பாகிஸ்தான் தனது தொழில்நுட்ப இணக்கம் குறித்து தனது அறிக்கையை 2020 ஒக்டோபர் 01 ஆம் திகதி நிதி நடவடிக்கை பணிக்குழுக்கு சமர்ப்பித்தது.

பாகிஸ்தான் தனது  மதிப்பீட்டு அறிக்கையில் அடையாளம் காணப்பட்ட தொழில்நுட்ப இணக்க குறைபாடுகளை நிவர்த்தி செய்வதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்பதை ஆசிய பசிபிக் குழு ஒப்புக் கொண்டுள்ளது. மேலும் 40 பரிந்துரைகளில் 31 பெரும்பாலும்  சாதகமாகவே   கருதப்படுகிறது.

ஆசியா பசிபிக் குழுமத்தின் மதிப்பாய்வில் உள்ள அடுத்த பின்தொடர்தல் அறிக்கையில் மேலும் நான்கு பரிந்துரைகள் குறித்து பாகிஸ்தான் ஆசியா பசிபிக் குழுமத்திற்கு மறு மதிப்பீட்டு கோரிக்கைகளை சமர்ப்பித்துள்ளது.

அடையப்பட்ட தொழில்நுட்ப மேம்பாடுகள், ஆசிய பசிபிக் குழு  மதிப்பீட்டு அறிக்கை செயல்முறையின் 11 உடனடி விளைவுகளில் மேம்பாட்டை  அடைய உதவும். இந்த கணிசமான முன்னேற்றத்தின் விளைவாக, ஆசிய பசிபிக் குழு பாகிஸ்தானை மேம்படுத்தப்பட்டதிலிருந்து (விரைவுபடுத்தப்பட்ட)  மேம்பட்ட பின்தொடர்தலுக்கு நகர்த்த முடிவு செய்துள்ளது.  மேலும், AML/CFT தரத்தினை அடைய பாகிஸ்தான் ஆசியா பசிபிக் குழுவிற்கு தனது முன்னேற்றம் குறித்து தொடர்ந்து அறிக்கை சமர்ப்பித்துக்கொண்டிருக்கும்.

1 comment:

  1. The miracle success of both economic and social-economic development of a Nation under a strong and honest leadership, Alhamdulillah. Something for us to learn from, Insha Allah.
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete

Powered by Blogger.