Header Ads



மனைவியை காணவில்லை, குழந்தைகளை பார்க்கவில்லை - கணவர் முறைப்பாடு


தென்னாப்பிரிக்காவில் ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெண்ணொருவர் பெற்றெடுத்ததாக கூறப்பட்ட நிலையில் அதிரடி திருப்பமாக அதை நான் நம்பவில்லை என அவர் கணவர் தற்போது தெரிவித்துள்ளார்.

தென் ஆப்ரிக்காவின் பிரிட்டோரியா என்ற பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனையில் ஒரு வாரத்துக்கு முன்னர் 37 வயதான Gosiame Sithole ஒரே பிரசவத்தில் 10 பிள்ளைகளை பெற்றெடுத்ததாக கூறப்பட்டது.

ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்றெடுத்ததே உலக சாதனையாக இருந்த நிலையில் தற்போது Gosiame Sithole 10 பிள்ளைகளை பெற்றெடுத்தது புதிய சாதனையாக பார்க்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த விடயத்தில் யாரும் எதிர்பார்க்காத அதிரடி திருப்பம் ஏற்பட்டது. அதன்படி Gosiame Sitholeன் கணவர் Tebogo Tsotetsi மற்றும் அவர் குடும்பத்தார் இது பொய்யாக இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், Gosiame-ஐ என்னால் தொடர்பு கொண்டு அவரின் கூற்றை சரிபார்க்க முடியாததால் அவர் 10 குழந்தைகளைப் பெற்றெடுக்கவில்லை என்று நான் கருதுகிறேன்.

குறிப்பாக தொலைபேசி தகவல் மற்றும் வாட்ஸ் அப் செய்தியை தவிர இதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை, நான் 10 குழந்தைகளின் புகைப்படங்களை பார்க்கவில்லை. ஒரு குழந்தை புகைப்படத்தை மட்டுமே எனக்கு அனுப்பினாள்.

குழந்தைகள் எங்கிருக்கிறார்கள் என்பதை Gosiame Sithole வெளியிட மறுப்பதால் அவருக்கு பணம் நன்கொடை வழங்குவதை மக்கள் நிறுத்தி கொள்ள வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.

நான் கடைசியாக கடந்த ஜூன் மாதம் 7ஆம் திகதி என் மனைவியை பார்த்தேன்,பிரசவ வலியோடு அவர் அப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதற்கு அடுத்தநாள் எனக்கு Gosiame வாட்ஸ் அப் மெசேஜ் அனுப்பினார். அதில் 4 மருத்துவர்கள், 5 செவிலியர்கள் உதவியுடன் 7 ஆண் குழந்தைகள் மற்றும் 3 பெண் குழந்தைகள் 29 வார கர்ப்பத்தில் தனக்கு பிறந்துள்ளதாக தெரிவித்தாள்.

ஆனால் கொரோனா அச்சம் காரணமாக மருத்துவமனையில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என தெரிவித்தாள். ஆனால் ஒரு தந்தையாக நான் குழந்தைகளை பார்க்க வேண்டும் என கூறியும் அது நடக்கவில்லை.

தான் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு விட்டதாகவும் தானும் குழந்தைகளை பார்க்கவில்லை எனவும் Gosiame கூறினாள்.

சில நாட்களாக அவளை காணவில்லை, இது குறித்து புகார் கொடுத்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.

இதனிடையில் Gosiame அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்ட 2 மருத்துவமனைகளிலும் அவருக்கு எந்தவொரு சிகிச்சையும், பிரசவமும் நடக்கவில்லை என மருத்துவர்கள் கூறியதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

No comments

Powered by Blogger.