May 31, 2021

இஸ்ரேல் ஏதேனும் செய்தால் அதனை, துவம்சம்செய்யும் முடிவு எங்கள் மேசையில்தான் உள்ளது - ஹனியா


ஜெருசலேம் மற்றும் அல்-அக்ஸா மஸ்ஜிதை பாதுகாக்க நடக்கும்   எதிர்ப்பு போராட்டத்திற்கு  அனைத்து ஃபாலஸ்தீன மக்களை ஒன்றிணைப்பதே ஜெருசலத்தின் வாள்  போருக்கு கிடைத்த முடிவு  என்று அல்-ஜசீரா தொலைக்காட்சியில் Without Borders நிகழ்ச்சியில் ஃபலஸ்தீன இஸ்லாமிய போராட்ட இயக்கமான ஹமாஸின் தலைவர்  ஹனியா வலியுறுத்தினார்.

அனைத்து பாலஸ்தீனிய எதிர்ப்புக் குழுக்களுக்கும் ஹனியா தனது  மரியாதையை  தெரிவித்தார் மற்றும் எதிர்ப்புத் போராட்ட படைத் தளபதி சகோதரர் அபு கலீத் அல்-ஜைஃப், அல்-கஸ்ஸாம் படைப்பிரிவுகள் மற்றும் அல்-குத்ஸ் படைப்பிரிவுகள் என்ன செய்தன என்பதை சுட்டிக்காட்டினார். மேலும் எதிரிக்கு முன்னால்

 அல்-சித்திக் நிகழ்த்தியவற்றை  ஆச்சரியப்படுத்தோடு விளக்கினார்.

போர்  நிறுத்தத்தை அடைவதற்காக, ஜெருசலேமின் வாள் போரின் கடைசி நாள், மத்தியஸ்தர்களுடன் தொடர்புகள் தீவிரமடைந்தது. ஆக்கிரமிப்பாளர்களுக்கான பதில் தான் எதிர்ப்பு போராட்டம் என்றும் ஆக்கிரமிப்பைத் தொடங்கியவர் தான் இந்த போருக்கு பொறுப்பை ஏற்க வேண்டும் என்பதையும் ஹனியா  விளக்கினார் .

"ஜெருசலேம் பிரச்சினை தொடர்பாக

ஆக்கிரமிப்பாளர்கள்  பிரதிநிதித்துவப்படுத்தும் மத, கருத்தியல் மற்றும் அரசியல் அடையாளங்களுடன்  அவர்களிடம்  எந்தவொரு நேரடி பேச்சுவார்த்தைகளையும் நாங்கள் ஏற்கவில்லை. "

பேச்சுவார்த்தையின் மேசையில் ஜெருசலேம் கூறுபோடப்படுவதை  நாங்கள் பார்க்க மறுத்துவிட்டோம், ஜெருசலேம் தான்  இந்த போர் எழுந்திருப்பதற்கான  மையக் காரணம்  என்பதை தரப்பினரும் புரிந்து கொண்டனர்.

ஒருபக்க சார்புடைய போர்  நிறுத்த அணுமுறையை எதிர்ப்பு போராட்டத்திற்கு சில  மத்தியஸ்தர்கள் அறிவித்ததாக ஹனியா தெளிவுபடுத்தினார், பின்னர் எகிப்தில் உள்ள சகோதரர்கள் எங்களுக்கு பரஸ்பர மற்றும் ஒரே நேரத்தில் இரண்டு தரப்புக்குமான போர்நிறுத்த ஒப்பந்தத்தை வழங்கினர், மேலும் போர் நிறுத்தத்திற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னர் பூஜ்ஜிய மணிநேரம் அறிவிக்கப்படும் என்ற நிபந்தனையின் பேரில் நாங்கள் போர் நிறுத்தத்திற்கு  ஒப்புக்கொண்டோம்.

போர்நிறுத்தத்திற்கு முந்தைய கடைசி மணிநேரங்களில் 3 குடியிருப்பு கோபுரங்களில்  வசிப்பவர்களை வெளியேற்றுமாறு ஆக்கிரமிப்பாளர்கள் கேட்டுக் கொண்டதாக ஹனியே சுட்டிக்காட்டினார். அதே நேரத்தில் எதிர்ப்புக் குழுக்கள், மத்தியஸ்தர்கள் மூலம், இந்த எச்சரிக்கையை முற்றிலுமாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று ஆக்கிரமிப்பிற்குத் தெரிவித்தனர். மேலும் குடியிருப்பாளர்களுடன் தொடர்பு கொண்டு  இந்த குடியிருப்பு கோபுரங்கள், அவர்களிடம் திரும்பி ஒப்படைக்கும்படி செய்யப்பட்டது.

"இந்த தொடர் அச்சுறுத்தலின் கீழ்  போர் நிறுத்தத்தை ஒப்புக் கொள்வதை  நாங்கள் ஏற்க மாட்டோம் என்றும், இந்த ஒப்பந்தத்திலிருந்து நாங்கள் விலகிவிடுகிறோம் என்றும் நாங்கள் ஆக்கிரமிப்பிற்கு தெரிவித்தோம் ஹனியா கூறினார்.

அல்-கஸ்ஸாம் படைப் பிரிவின் செய்தித் தொடர்பாளர் அபு உபைதாவின் எச்சரிக்கைகள் போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள ஆக்கிரமிப்பாளர்களை  கட்டாயப்படுத்தின. ஏனென்றால் எதிர்ப்புபடை  வெற்று எச்சரிக்கைகளை மட்டுமே  வழங்காது என்பது எனக்கு தெரியும்.

"எங்கள் ஏவுகணைகளுடன் ஃபாலஸ்தீனத்தின் மொத்த  புவியியல் நிலம்  அனைத்தையும் எடுத்துக் கொள்ள முடியும். ஆனால் மத்தியஸ்தர்களின் தலையீட்டின் அடிப்படையில் நாங்கள் இந்த சிக்கலை நிறுத்தினோம், ஒரு வேளை ஆக்கிரமிப்பாளர்கள்  ஏதேனும் முட்டாள்தனத்தை செய்தால், அவர்களை துவம்சம் செய்யும் முடிவு இன்னும் எங்கள் மேசையில் தான் உள்ளது ."

ஜெருசலேமின் வாள் போர் ஒரு கட்டம்  முடிந்து  புதிய கட்டம் தொடங்கியுள்ளதாக  ஹனியா கூறினார். இது இயல்பாக்குதல் மற்றும் ஒஸ்லோ ஒப்பந்தங்களை  பின்னுக்கு தள்ளி  ஃபாலஸ்தீனிய அசல் காரணத்தை கலைப்பதை நோக்கமாகக் கொண்ட நூற்றாண்டின் ஒப்பந்தத்திற்கு பெரும் அடியைக் கொடுத்துள்ளது. 

இந்த யுத்தம் பிராந்திய அளவிலும் உலக அளவிலும் பாலஸ்தீன பிரச்சினையை மீண்டும் முன்னிலைக்கு கொண்டு வந்துள்ளது என்று ஹனியா சுட்டிக்காட்டினார்.

எதிர்ப்பு போராட்டத்திற்கு சேதம் ஏற்ப்பட்ட போதும் கூட, எதிர்ப்பு போராட்டத்தின் திடமான  வலிமையை அது பாதிக்காது . 

எதிர்ப்பு போராட்டங்களின்  சுரங்க பாதை வழித் தடங்கள்  நன்றாகவே உள்ளன, மேலும் எதிரிகள்  அவற்றின் மூலம் எந்த வெற்றியையும் பெற முடியவில்லை.  சுரங்கப் பாதைகளை ஆழமான உள்கட்டமைப்பை அவர்களால் தொட முடியவில்லை என்று ஹனியா விளக்கினார்.

அல்-குத்ஸ்  வாள் போரின்போது போராளிகளும் எதிர்ப்பாளர்களும்  க ஆக்கிரமிப்பாளர்களுக்கும் அவர்களின் திட்டங்களுக்கும் பெரும் தோல்வியைத் தந்தனர். எதிர்க்கு படை வட காசா கவர்னரேட்டிலிருந்து நேரடியாக ராக்கெட்டுகளை ஏவியது . கிட்டத்தட்ட 50நிமிடங்களுக்கு மேலாக தொடர்ச்சியான ராக்கெட் தாக்குதல்களை எதிர்ப்புபடை ஏவியது இதுதான் எதிர்ப்பு படையின்  கட்டமைப்பை அழிக்க ஆக்கிரமிப்பாளர்கள் தோல்வியுற்றார்கள் என்பதற்கான சான்று.

சுரங்கங்கள், அரசியல் மற்றும் இராணுவத் தலைமை மற்றும் வரவிருக்கும் இஸ்ரேலின்  மோதல்களின் போக்கைக் கட்டுப்படுத்தும் எதிர்ப்பு படையின்  திறன் ஆகியவை குறித்து உறுதியாகவும் நம்பிக்கையுடனும்  இருங்கள் என்று ஹனியா வலியுறுத்தினார்.

பரந்துபட்ட ஆதரவு :

ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உள்ள உலகளாவிய மக்கள் இஸ்ரேலை "தாக்குதலை  நிறுத்துங்கள்" என்று கூறிய ஒரு உலகளாவிய ஆதரவு அமைப்பு உருவானதை  ஹனியா சுட்டிக்காட்டினார்.

இந்த பெரும் திரளான  மற்றும் வெகுஜன இயக்கத்தையும், சில நாடுகளின் அதிகாரப்பூர்வ நிலையில் ஏற்பட்டுள்ள  மாற்றத்தையும் நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம், என்றார்.

" சில நாடுகள் ஃபலஸ்தீன விவகாரங்களில் முன்னர் அவர்கள் கொண்டிருந்த   தவறான நிலைப்பாட்டில் ஏற்ப்பட்டுள்ள மாற்றத்தை  நாங்கள் கொள்கையளவில் வரவேற்கிறோம்" என்று ஹனியே மேலும் கூறினார்.

பாலஸ்தீனிய நோக்கம் மற்றும் எதிர்ப்பு போராட்டத்தின்  மீதான எந்தவொரு நேர்மறையான அணுகுறையை  நாமும் நேர்மறையாகவே கையாளுவோம். பாலஸ்தீனிய காரணத்தை ஆதரிக்கும் மற்றும் அதற்கு ஆதரவாக நிற்கும் நாடுகள், மக்கள், கட்சிகள், அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் அனைத்திற்கும் ஹனியா  நன்றி தெரிவித்தார்.

ஜோர்டான், லெபனான், ஈராக், குவைத், லிபியா, துருக்கி மற்றும் பிற நாடுகளில் உள்ள அரபு மற்றும் இஸ்லாமிய மக்களுக்கு நாங்கள் கடன்பட்டிருக்கிறோம் என்று தனது பேட்டியில் ஹனியா தெரிவித்தார்.

:அஹ்மது யஹ்யா அய்யாஷ்

1 கருத்துரைகள்:

குடிகாரன் பேச்சு ............

Post a Comment