Header Ads



நௌபர் மௌலவியுடன் ஈஸ்டர், தாக்குதலை முடிவிற்கு கொண்டுவர முயற்சி - முஜிபுர் Mp


இன்று (07) பிற்கபல் இடம் பெற்ற ஊடக சந்திப்பல் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்த கருத்துக்களின் சிறு குறிப்பு.

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திர தாரியாக நௌபர் மௌலவியையும் ஹஜ்ஜுல் அக்பரையும் சரத் வீரசேகர நோற்று அடையாளப்படுத்தினார். 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தாக்குதல் நடந்து சில நாட்களின் பின்னர் கைது செய்யப்பட்ட நௌபர் மௌலவியை தான் பிரதான சூத்திரதாரியாக அடையாளப்படுத்தியுள்ளார். 

ஆனால் கடந்த தேர்தல்களின் போது பிரதான மூல சூத்தரிதாரிகளைக் கண்டு பிடிப்போம் என்று பிரசாரம் செய்தவர் நல்லாட்சி அரசாங்கம் நியமித்த ஆணைக்குழுவின் அறிக்கையை மையப்படுத்தி நௌபர் மௌலவியுடன் இந்த விசாரணைகளையும், தாக்குதலையும் முடிவிற்கு கொண்டு வர முயற்சிக்கின்றனர்.

இன்று அரசாங்கத்திற்கு எதிராக பல் வேறு அதிருப்திகள் மேலேலுந்துள்ள இந் நிலையில் இவற்றிலிருந்து மீளுவதற்கு திடீரென இருவரின் பெயர்களை அடையாளப்படுத்தி  வெளிப்படுத்தியுள்ளனர்.குறிப்பாக காதினல் உட்பட கிருஸ்தவ சமூகத்தையும் அரசாங்கத்தின் சமகால பிரச்சிணைகளையும் மூடி மறைக்கவே இவ்வாறு மேற்கொண்டுள்ளனர்.

பின்னனியில் செயற்ப்ட்ட பலப்படுத்திய பிரதான நபர்கள் குறித்து கண்டறியப்படவில்லை.கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்யப்படட நௌபர் மௌலவி ஆணைக்குழுவில் ஆஜராகவில்லை.சஹ்ரானின் மனைவியின் வாக்கு மூலம் வெளியாகவில்லை,ரவி செனவிரத்ன எழுத்து மூலம் வழங்கிய அவர் சந்தேகதித்த நபர் தொடர்பான விடயங்கள் வெளியாகவில்லை. பூரண தகவல்கள் வெளிப்படுத்தப்படாத சம்பூர்ணமற்ற இந்த ஆணைக்குழு அறிக்கையை வைத்து சரத் வீரசேகர இறுதி முடிவுகளுக்கு வந்துள்ளார்.

சாரா தொடர்பான பல சந்தேகங்கள் உள்ளன.சாரா உயிருடன் இருப்பதாக கூறப்படுகிறது.இது தொடர்பாக அரசாங்கம் இது வரை என்ன முடிவுகளை எடுத்துள்ளது? வழக்கு தாக்கல் செய்துள்ளதா? சாரா உயிருடன் இல்லை என்று அரசாங்கம் கூறுமானால்,சாரா மன்னார் ஊடாக இந்தியா செல்ல உதவியதன் குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டவரை ஏன் விடுதலை செய்யவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

No comments

Powered by Blogger.