Header Ads



என்னைக் கைது செய்ய வேண்டுமென்பது எனது சிறப்புரிமையை மீறுவதாகும் - சாணாக்கியன் Mp (வீடியோ)

இன்றையதினம் 09.04.2021 எனது பாராளுமன்ற சிறப்புரிமையை மீறும் வகையில் 07.04.2021 அன்று பாராளுமன்றத்தில் நான் ஆற்றிய உரைக்கும் என்னுடைய கருத்துக்கும் எதிராக என்னை குற்றப் புலனாய்வினர் கைது செய்து விசாரிக்க வேண்டும் என 08.04.2021 அன்று சபையில் வலுயுறுத்திய அரச பாராளுமன்ற உறுப்பினர் செஹன் சேமசிங்கக்கு எதிராக எனது வாதத்தினை வைத்தேன். அத்தோடு அவரின் கூற்றுக்கு எதிரான தக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதையும் அவர் பாராளுமன்றத்தில் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்பதை புரிய வைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தேன். இவரின் இவ் கருத்தானது இவ் சபையில் உள்ளவர்களுக்கும் ஓர் அச்சுறுத்தலான விடையமாகும். இவ் சபையில் எனது கருத்துக்களை சுகந்திரமாகவும், பயமின்றியும் பதிவிடுவதற்கான முழு அதிகாரமும் எனக்கு உண்டு.


 அதன் போது நான் தெரிவித்த "அரசாங்கம் தனது அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள 2021 ஆம் ஆண்டளவில் இன்னொரு தாக்குதலுக்கும் திட்டமிட்டால் கூட சந்தேகப்படுவதற்கில்லை. ஏனெனில், இவர்கள்தான் கடந்த காலங்களில் சஹ்ரானுக்கு சம்பளம் வழங்கியவர்கள். அவரைப் போன்ற ஒருவர் மீண்டும் இந்த அரசாங்கத்துக்கு கிடைத்திருக்கலாம். இதுதொடர்பாக நாட்டு மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும். " இக் கருத்துக்கு எதிராக அவர் என்னைக் கைது செய்து விசாரிக்கவேண்டும் என அவர் கூறியிருப்பது எனது சிறப்புரிமையை மீறும் செயல்பாடாக காணப்படுகின்றது.

எமது கட்சியானது புதிய கட்சி இல்லை 1948 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டதாகும். எமக்கு எல்லா உரிமையும் உண்டு. இவ் ஜனநாயக நாட்டில் இவ்வாறான ஒழுக்க விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை கட்டாயம் எடுக்கப்படவேண்டும்.


No comments

Powered by Blogger.