Header Ads



கிழக்கு மாகாணத்தில் முதல் இரட்டைச் சதம் - பஹீம் நுபைல் வரலாற்று சாதனை


- ஹஸ்பர் ஏ ஹலீம் -

கிழக்கு மாகாண கிரிகட் வரலாற்றில் முதலாவது இரட்டைச் சதம் பெற்று வரலாற்று சாதனை நிகழ்த்தினார் மூதூர் மத்திய கல்லூரி மாணவன் பஹீம் நுபைல்.

இலங்கை பாடசாலை கிரிகட் சம்மேளனத்தினால் தேசிய ரீதியாக நடாத்தப்பட்டு வரும் 19 வயதுக்குற்பட்ட தேசிய பாடசாலை மட்ட கிரிகட் தொடரில் மூன்றாவது லீக் முறையிலான போட்டியானது நேற்று  (01) மூதூர் MCC மைதானத்தில் மட்டக்களப்பு இந்துக் கல்லூரி (தேசிய பாடசாலை) மற்றும் மூதூர் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) ஆகியன மோதிக்கொண்டன.

சர்வதேச ஒரு நாள் கிரிகட் போட்டியினை விதிமுறையாக கொண்ட குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மூதூர் மத்திய கல்லூரியானது முதலில் துடுப்பாட்டத்தினை தீர்மானித்தது.  ஆரம்பம் முதலே போட்டியினை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த மூதுர் மத்திய கல்லூரியானது மட்டு இந்துக்கல்லூரியின் பந்துவீச்சினை சிறப்பாக எதிர்கொண்டனர். அந்த அடிப்படையில் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பஹீம் நுபைல் நிதானமாகவும், அதிரடியாகவும்  துடுப்பெடுத்தாடி 220 ஓட்டங்களினை 128 பந்துகளில் பெற்று கிழக்கு மாகாண ரீதியில் சாதனை படைத்துள்ளார். கிழக்கு மாகாண பாடசாலை கிரிகட் வரலாற்றில் இதுவே முதல் இரட்டை சதமாகும்.

மட்டக்களப்பு மாவட்ட புகழ் பெற்ற பாடசாலை அணிகள் பங்குபெறும் இத்தொடரில் பெறப்பட்டிருக்கும் அதிகூடிய ஓட்டப் பெறுபேறாக இது பதிவாகியுள்ளது. 

தேசிய ரீதியாக நடைபெறும் இத்தொடரில் மூதூர் சார்பாக சொந்த மண்ணில் இவ் இமாலய வரலாற்று  சாதனையை நிகழ்த்தி மூதூர் மண்ணுக்கு பெருமை தேடிக் கொடுத்த மூதூர் மத்திய கல்லூரி அணியின் வீரர் உனைஸ் நுபைல் அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் சங்கம், பாடசாலை அபிவிருத்திக்குழு, மூதூர் மேற்கு பிராந்திய கிரிகட் சங்கம் மற்றும் மூதூர் கிரிகட் நடுவர்கள் அபிவிருத்தி மற்றும் பயிற்றுவிப்பு குழு ஆகியோரின் ஒத்துழைப்பு மற்றும் வழிகாட்டலின் அடிப்படியிலேயே மேற்படி போட்டித்தொடர் இடம்பெறுவது குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்.




4 comments:

  1. மூதூரைச் சேர்ந்த இளம் விழையாட்டு பஹீம் நுபைல் அவர்களுக்கு வாழ்த்துக்கள். இலங்கை முஸ்லிம்கள் வாழ்விலும் தமிழ் பேசும் மக்கள் வாழ்விலும் இருள்சூழ்ந்த இச்சூழலில் தங்கள் சாதனை நம்பிக்கை தருகிறது.

    ReplyDelete
  2. Kandu kolluma politically innovated SLCC??

    ReplyDelete
  3. Congratulations faheem nufail

    ReplyDelete
  4. Congratulations faheem nufail

    ReplyDelete

Powered by Blogger.