Header Ads



அரசாங்கத்துக்கு எதிராகச் சேறுபூசும், நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர் - சாகர காரியவசம் Mp


மக்கள் எதிர்பார்த்த சகலவற்றையும் வழங்கிய வாக்குறுதிகளையும் உரியமுறையில் முன்னெடுத்து வருகின்றோம். அதைத் தாங்கிக் கொள்ள முடியாத  எதிர்க்கட்சியைச் சேர்ந்த சிலரே, தம்மீது பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவதாகத் தெரிவித்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் எவ்வித அடிப்படையும் இன்றி, முற்றிலும் பொய்யான வகையில் அரசாங்கத்துக்கு எதிராகச் சீனி மோசடி குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர் என்றார். 

கட்சியின் தலைமையகத்தில் நேற்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

'இலங்கையில் சீனியின் விலை அதிகரித்துச் சென்றதால், நுகர்வோருக்கு சலுகை வழங்க அரசாங்கம் தீர்மானித்தது. அதற்கமைய சீனிக்கான வரியை 50 ரூபாயிலிருந்து 25 சதவீதமாக குறைத்தோம். இது மக்களுக்காக மேற்கொள்ளப்பட்ட வரிக் குறைப்பு. இதனால், சீனி இறக்குமதி வர்த்தகர்கள் சிலருக்கு இலாபம் கிடைத்தது' என்றார். 

ஆனால் கொடுக்கல் வாங்கல்களில் சிலர் மட்டுமே இலாபம் ஈட்டும் வகையில், கடந்த அரசாங்கம் வரியைக் குறைத்து, பின்னர் ஒருவாரத்தில் வரியை அதிகரித்தது எனத் தெரிவித்த அவர், எமது அரசாங்கம் அப்படிச் செய்யவில்லை. இன்றும் 25 சத வரியே அறவிடப்படுகின்றது என்றார். 

'அரசாங்கம் முன்னெடுக்கும் அபிவிருத்திச் செயற்பாடுகளைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாமல், எதிர்க்கட்சியினரும் மக்கள் விடுதலை முன்னணியினரும் அரசாங்கத்துக்கு எதிராகச் சேறுபூசும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்' என்றார்.  

1 comment:

  1. Truth Hurts. If you are Blind beyond Cure, Nobody can make you see.

    DON'T Forget that you CANNOT Fool ALL the People ALL the time.

    ReplyDelete

Powered by Blogger.