Header Ads



தீவிரவாத குற்றச்சாட்டில் காவலில் வைக்கப்படுவோம், என்ற அச்சத்தில் முஸ்லிம்கள் வாழ்கின்றனர் - Dr ஜெஹான் பெரேரா


- ஏ.எச்.ஏ. ஹுஸைன் -

இன்று முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தீவிரவாதத்தைத் தூண்டிய குற்றச்சாட்டில் காவலில் வைக்கப்படுவார்கள் என்ற அச்சத்தில் வாழ்ந்துவருவதாக தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா தெரிவித்துள்ளார்.

சமூக வலைத் தளமொன்றில் அவர் தனது கருத்துக்கள் அடங்கிய இடுகையை இட்டுள்ளார்.

திங்களன்று 29.03.2021 அவரால் இடப்பட்டுள்ள அந்த இடுகையில் மேலும் தெரிவிக்கப்பட்டள்ளதாவது

கடந்த செப்டம்பர் 2019 வரை 24 ஆண்டுகளாக ஜமாஅத்தே இஸ்லாமிய அமைப்பின் தலைவராக இருந்த ரஷீத் ஹஜ்ஜுல் அக்பரை பயங்கரவாத புலனாய்வு பிரிவு (TID)  சமீபத்தில் கைது செய்தது.

1954ஆம் ஆண்டு வாக்கில் நிறுவப்பட்ட ஜமாஅத்தே இஸ்லாமி என்பது வை.எம்.சி.ஏ அல்லது சர்வோதயா போன்ற நிறுவனங்களின்  வரிசையில், ஒழுக்கநெறி மற்றும் சமூக வலுவூட்டல் ஆகியவற்றிலும் அதன் உறுப்பினர்களாக உள்ளவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான இதேபோன்ற சமூக நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டு இயங்கி வரும் ஒரு அமைப்பாகும்.

மேலும் சிறந்த விழுமியங்கள், அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துதல், வறுமையை ஒழித்தல் மற்றும் சுற்றுச் சூழலைப் பாதுகாத்தல் போன்ற  செயல்பாடுகளிலும் அந்த அமைப்பு ஈடுபட்டு வருகின்றது.

இது போன்ற அமைப்புகள் இலங்கை சமுதாயத்தின் பிரதான நீரோட்டத்தின் ஒரு பகுதியாகும், அவை ஓரங்கட்டப்படுதல்களுக்கு உட்படுத்தப்;படக்கூடாது.

முன்மொழியப்பட்ட புர்கா தடை ஆயிரம் மதரஸாக்களை மூடுவது மற்றும் தீவிரமயமாக்கல் சட்டம் போன்றவை தீவிரவாதத்தை உற்பத்தி செய்யவும் மனக்கசப்பை உருவாக்கவும் வாய்ப்புள்ளது.

உலகிலுள்ள ஏனைய ஜனநாயக நாடுகளைப்போல இலங்கை பல இன, பல மத மற்றும் பன்மை சமுதாயத்தின் நெறிமுறைகளுக்கு ஏற்ப உள்ள ஒரு ஜனநாயக நாடாக உண்மையிலேயே இருந்தால் முன்மொழியப்பட்ட மூன்று சட்டங்களையும் அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

3 comments:

  1. உண்மையிலேயே கலாநிதி ஜெஹான் பெரேரா அவரகள் "இலங்கைக்குக் கிடைத்த மனிதருள் மாணிக்கம்" என்று சொன்னாலும்' அது மிகைப்படுத்திச் சொல்லப்பட்ட ஒன்று அல்ல. அவரகளுடன் ஒன்றாக தேசபே ( National Peace Council) யில் இணைந்து செயற்படக்கூடிய சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. "இப்படியும் தற்காலத்தில் மனிதர்கள் இருப்பார்களா?" என்று எண்ணும் அளவிற்கு அவரது செயற்பாடுகள் அமைந்து காணப்பட்டன. அவர்களது பெற்றார் அவருக்கு பெயர் ஒன்றைச் சூட்ட வேண்டும் என்பதற்காகவே இந்தப் பெயரை இட்டுள்ளார்கள். தமிழர்களிலும் முஸ்லிம்களிலும் மிகவும் பற்றுக் கொண்டவர். இவரைப் போன்ற ஒருவர் இந்நாட்டின் ஜனாதிபதியாக வந்தால் உலகின் ஜனநாயக நாடுகளுக்கு ஒரு உதாரணமாக இலங்கையைக் கொண்டு செல்வார் என்பதில் எவ்வித {யப்பாடும் இருக்க மாட்டாது.

    ReplyDelete
  2. Salute you Sir. Great Advice to do foolish idiots

    ReplyDelete
  3. ஜெகான் பெரேரா எனது தோழன் என்பது பெருமையாக உள்ளது. இலங்கை முஸ்லிம்களின் இன்றைய நிலைதொடர்பான அவரது ஆய்வுக் கருத்துக்களை நான் ஆமோதிக்கிறேன்.

    ReplyDelete

Powered by Blogger.