Header Ads



இங்கிலாந்தில் இலங்கை மாணவி சாதனை


- ஏ.பி.எம்.அஸ்ஹர் -

ஐக்கிய இராஜியத்தில் வசிக்கும் இலங்கை கல்முனையச்சேர்ந்த மாணவி பாதிமா நுஹா ஸ்கொட்லாண்ட் க்லாஸ்கோ பல்கலைக்கழகத்தில் master of engineering in bio medical 

( உயிரி மருத்துவவியல்) பட்டப்படிப்பைப்பூர்த்தி செய்து இரண்டாம் வகுப்பு உயர் சித்தி (Second class upper divisions) பெற்று சாதனை படைத்துள்ளார்.

இவர் கல்முனையைச்சேர்ந்த முஹம்மட் இர்ஷாட் மற்றும் நுபைலா நாகூர்தம்பி ஆகியோரின் புதல்வியாவார். இவர் தனது ஆரம்ப கல்வியை கொழும்பு பம்பலபிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரியில் பயின்றார் அதன் பின்னர் பிரித்தானியாவிலுள்ள கலாஸ்கோ பல்கலைக்கழகத்திற்கு புலமைப்பரிசில் திட்டத்தின் மூலம் தெரிவு செய்யப்பட்டு M .Eng துறைக்குத்தெரிவாகி அங்கு மேற்படிப்பை பூர்த்தி செய்து கொண்டார்.

இதே வேளை  அமெரிக்காவிலுள்ள பென்ஸில்வேனியா Penn State universityயிலும் இது தொடர்பான குறுகிய கால கற்கை நெறி ஒன்றையும் நிறைவு செய்துள்ளார்.

தனது பல்கலைக்கழக காலத்தில் International Engineer Compatitions in Netherland போட்டியில் முதலாமிடத்தைப்பெற்றுக் கொண்டதோடு பல்கலைக்கழகBio medical Engineer Society யின் தலைவராகவும் செயற்பட்டுள்ளார்.

இவர் அக்கரைப்பற்றின் முதலாவது  பீ.ஏ.பட்டதாரியும் சம்மாந்துறை தொழில் நுட்பக்கல்லூரியின் முன்னாள் விரிவுரையாளருமான எம்.ஐ நாகூர் தம்பி மற்றும் றாஹிலா (கலிறா )ஆகியோரின் பேத்தி என்பதும் குறிப்பிடத்தக்கது.

2 comments:

Powered by Blogger.