கைது செய்யப்பட்ட முன்னாள் ஆளுநர், தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த சட்டத்தின் விதிகளுக்கு இணங்க உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் அதனுடன் தொடர்புடைய சம்பவங்கள் தொடர்பில் அவர் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் அவர் இன்று கைது செய்யப்பட்டார்.
சட்டமா அதிபர் இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தினருக்கு வழங்கிய அறிவுறுத்தலின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாட்டின் பொதுச் சட்டம் தொடர்பிலும் அவர் முன்வைத்த சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
3 கருத்துரைகள்:
வாயால் கெட்டவர்கள் பட்டியலில் இவரும் ஒருவர்.
SHINKAL MENDAL PEOPLE /SHINKALA THUGS POLITICIAN TALKING HATERS SPEECH AGAINST MINORITY PEOPLE , NEVER ARREST , THESE PERSON TELLING TRUE
SHULD RELEASE
SriLanka you sucks. Going wrong way
Post a comment