Header Ads



கொரோனா உடல்களை அடக்க 3 ஏக்கர் காணியை வழங்கிய சகோதரர்


Covid-19 ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு தனது  சொந்த காணியின் 3 ஏக்கர் நிலத்தை வழங்கினார் சகோதரர் MFM.ஜௌபர் (முன்னாள் NEW STAR விளையாட்டு கழக தலைவர்)

பொது மையவாடிக்கென ஒதுக்கப்பட்டிருந்த 10 ஏக்கர் காணியில் Covid-19 ஜனாஸாக்களை அடக்க முடியாதென்று அரச தரப்பினர்கள் கூறப்பட்ட காரணத்தினால், அதற்கு மேலிருந்த மேட்டுநில காணியை அடையாளப்படுத்தியதன் காரணத்தினால் சகோதரர் ஜௌபர் அவர்களின் 3 ஏக்கர் காணியில் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டது. 

குறித்த தகவலை அவர்களுக்கு அறிவித்ததோடு ஸ்தலத்திற்கு சென்ற போது எந்தவித தயக்கமுமின்றி இன்முகத்துடன் "இது எமது சமூகத்திற்கான பாரிய பணி" என்று கூறியதுடன், "எமது ஜனாஸாக்கள் எரிக்கப்படாமல் அடக்கம் செய்வதே ஒவ்வொரு முஸ்லிமிற்கும்  கவலையாக இருந்த விடயம், அதற்காகவேண்டி அடையாளப்படுத்திய எனது சொந்த காணியை  வழங்குவதில் எனக்கு எதுவித கவலையும் இல்லை" என்று பெருமனதுடன் தெரிவித்தார். இவருக்கு இவ் உலக வாழ்விலும் மறு உலக வாழ்விலும் இறைவனின் அருள் கிடைக்க வேண்டும் என பிரார்த்திப்பதோடு எமது சமூகத்தின் சார்பாகவும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த காணிக்கு மாற்றீடாக பிரதேச சபை, பிரதேச செயலகம் அதற்கான உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என கிராம அபிவிருத்தி சங்கம் சார்பாக வேண்டிக் கொள்கிறோம். 

அரச காணியை தனது சொந்த காணியை வழங்குவது போல படம் காட்டிய நபர்களுக்கு மத்தியில் சொந்த காணியையே கொடுத்து விட்டு சலசலப்பு இல்லாமல் இருக்கும் ஜௌபர் என்றும் போற்றப்பட வேண்டியவர்.

Mohamed Riyath


9 comments:

  1. ஜஃபருக்கு ஜெஸாக்கழ்ழாஹு ஹைரன்

    ReplyDelete
  2. May Allah accept his good deeds and grant him his mercy in this world and here after.
    Ameen.

    ReplyDelete
  3. Allah ungalukku natkooliyai tharuwaan.

    ReplyDelete
  4. Masha allah great person respect sir

    ReplyDelete
  5. ما شاء الله
    My Allah accept this great work and grant him & his family Jannathul firdows

    ReplyDelete
  6. அன்னாரின் வாழ்க்கையில் அள்ளாஹ் பரக்கத்தையும் ஆபியத்தையும் கொடுத்து நீண்ட காலம் வாழ செய்வானாக.மறுமையில் ஜன்னதுல் பிர்தௌஸை வழங்குவானாக.

    ReplyDelete
  7. May Allah shower His blessing on you my dear brother. Aameen!

    ReplyDelete
  8. Allha will reword Mr.Jowfer jannathul firdows

    ReplyDelete

Powered by Blogger.