Header Ads



ஜனாஸா பிரச்சினைய பிரதமருடன் கலந்தாலோசித்து, அலி சப்ரியினால் தீர்க்க முடியவில்லை - சாணக்கியன்


இன்றளவிலும் தடுத்து வைக்கப்படுள்ள காணமல் ஆக்கப்படுள்ள அரசியல் கைதிகள் தொடர்பில் மற்றும் இராணுவ முகாம்கள் தொடர்பிலும் இன்றைய தினம் -10- காரசாரமான விவாதம் பாராளுமன்றத்தில் நடைபெற்றது. 

இன்றைய தினம் நடைபெற்ற பாராளுமன்ற கேள்வி பதில்களின் போது நான் பிரதம மந்திரி மஹிந்த ராஜபக்ஷவிடம் சில கேள்விகளை தொடுத்திருந்தேன். அவையாவன;

1. தற்பொழுது நாட்டில் இருக்கின்ற அரசியல் கைதிகளின் மொத்த எண்ணிக்கை எத்தனை என்பதையும், அக் கைதிகள் இருக்கின்ற முகாம்கள் எத்தனை என்பதையும், 

2.அவர்களை விடுவிப்பது தொடர்பாக ஏன் இதுவரை காலமும் விரைவான நடவடிக்கை எடுக்கவில்லை என்பதையும்,

3.நாடு முழுவதிலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் பாதுகாப்புப் படையினர் இருக்கின்ற காணிகளின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்,

4.பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் தனியார் காணிகள் மற்றும் அரசாங்க அலுவலக காணிகள் எத்தனை என்பதையும் பிரதம அமைச்சர் குறிப்பிடுவாரா? 

இன்றேல் ஏன்?

அதற்குப் பதிலளித்த பிரதமர் அவர்கள்

இலங்கையில் அரசியல் கைதிகள் எந்த அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்னும் விடயத்தை நான் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். இலங்கையிலுள்ள மாவட்டங்களில் காணப்படும் நிலங்கள் சம்மந்தமாக பேசுவது தேசிய பாதுகாப்பிற்கு தடையாக இருக்கின்றதாக தேசிய பாதுகாப்பு அமைச்சர் கூறியமையினால் நான் அதைப் பற்றி பேசினால் அது தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பாக அமையும் என்பதனால் அதைப் பற்றி இங்கு கூறவில்லை என்றுரைத்தார்.

அவர் அளித்த பதிலில் எனக்கு திருப்தி இன்மையால் நான் அதனை விளக்கமாக அவருக்கு எடுத்துரைத்தேன். 

இதற்கு பதிலளிக்கும் முகமாக நீதி அமைச்சர் அலி சப்ரி அவர்கள் எழுந்து பிரதமருக்கு பதிலாக தான் இதற்கான பதில் அளிப்பதாக கூறி பதில் அளிக்கத் தொடங்கினார். 2009 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் 12,843 பேர் அரசாங்கத்திடம் சரணடைந்தார்கள். இவ்வாறு சரணடைந்தவர்களும் 600 சிறுவர் போராளிகளும் அரசாங்கத்தினால் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்தில் கூறினார். அதிலும் அவர் குறிப்பிட்டார் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களின் அறிக்கையின்படி இன்றளவில் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்படவில்லை. ஆனால் தடுத்து வைக்கப்பட்டவர்கள் வழக்கானது பயங்கரவாத தடைச் சட்டத்தின் அடிப்படையில் இவர்களுக்கான தீர்ப்பு வழங்கப்பட்டு தடுக்கப்பட்டு உள்ளார்கள். இவை சம்மந்தமான தகவல்கள் அடங்கிய ஆவணத்தை சில நாட்களுக்கு முன் அவரிடம் வினாவிய பாராளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் அவர்களுக்கு கையளித்து இருந்தார் என்றார். அதில் ஒரு பிரதியை நான் உங்களுக்குத் தருகின்றேன் என்றும் கூறினார். 

இவை தொடர்பான பிரச்சினைகளுக்கு நடவடிக்கைகள் எடுப்பதற்கு இவை சம்மந்தப்பட்டவர்களோடு இரு கிழமைகளுக்கு முன்பு தாங்கள் குழு கூடி கலந்தாலோசித்ததாகவும், இதனை துரிதப்படுத்துவதற்கு உரிய அனுமதியை தருமாறும் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷவிடம் வலியுறுத்தியிருந்தார். 

நான் கூறும்போது நீதி அமைச்சர் இதற்கு பதில் அளித்த விதம் முரணானது என்று எடுத்துரைத்தேன்.  அதிலும் அவர் சமூகம் சார்ந்த ஜனாஸா பிரச்சினையையே பிரதம மந்திரி உடன் கலந்து ஆலோசித்து தீர்க்க முடியவில்லை என்ற ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி இருந்தேன்.

அவர் கூறியிருந்த கருத்துக்களின் படி ஒரு சிலர் முகப்புத்தகங்களில் படங்கள் மற்றும் கவிதை எழுதியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்கள். சில மாதங்களுக்கு முன்னர் அவர்கள் என்ன வகையான குற்றம் செய்தார்கள் என்ற அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்கள்? என்று கேட்டேன்.

Shanakiyan Rajaputhiran Rasamanickam

1 comment:

  1. இரண்டு பெயரையும் ஒப்பிட முடியாது. அலி சப்ரி தேசிய பட்டியல் நீங்கள் மக்கள் பட்டியல்.

    ReplyDelete

Powered by Blogger.