Header Ads



கொரோனா தடுப்பூசி வழங்குவதில் அரசியல் செல்வாக்கு - பொதுசுகாதார பரிசோதகர்கள் கவலை


இலங்கையில் கொரோனா தடுப்பூசியை வழங்கும் நடவடிக்கைகளில் அரசியல் செல்வாக்கு- தடுப்பூசி வழங்கும் நிலையங்களை மூடவேண்டியநிலை பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தடுப்பூசியை வழங்கும் நடவடிக்கைகளில் அரசியல் செல்வாக்கு செலுத்துகின்றது என பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

30வயதிற்கு மேற்பட்டவர்களிற்கு தடுப்பூசியை வழங்கும் நடவடிக்கைகள் காரணமாக பல தடுப்பூசி செலுத்தும் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன என பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

60வயதிற்கு மேற்பட்டவர்களிற்கு தடுப்பூசியை வழங்குவதே அரசாங்கத்தின் ஆரம்ப கட்ட திட்டமாக காணப்பட்டது என பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல்ரோகண சுட்டிக்காட்டியுள்ளார்.

60வயதிற்கு மேற்பட்டவர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தும் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் பல தன்னிச்சையான முடிவுகளால் கொரோனா தடுப்பூசியை வழங்கும் நடவடிக்கைகள் குழப்பத்திற்குள் தள்ளப்பட்டுள்ளன, 30வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்படுகின்றது என உபுல்ரோகண தெரிவித்துள்ளார்.

இரண்டு நாட்களிற்கு முன்னர் 60 வயதிற்குமேற்பட்டவர்களிற்கு தடுப்பூசியை வழங்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது,இதன் காரணமாக தடுப்பூசிகளின் அளவும் மட்டுப்படுத்தப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் 30 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கு ஊசிவழங்கவேண்டியதால் தடுப்பூசி போதிய அளவில் இல்லாததன் காரணமாக பல தடுப்பூசி வழங்கும் நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக உபுல்ரோகண தெரிவித்துள்ளார்.

முன்னுரிமை பட்டியலின் அடிப்படையில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கு மருந்து வழங்கப்பட்டிருக்கவேண்டும் ஆனால் அதிகாரிகள் ஏற்படுத்திய குழப்பத்தினால் அவர்களிற்கு தடுப்பூசி கிடைக்கவில்லை இதன் காரணமாக பல நெருக்கடிகள் உருவாகியுள்ளன என உபுல்ரோகண தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளில் அரசியல் செல்வாக்கு செலுத்துகின்றது இதன் காரணமாக அந்த நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன எனவும் உபுல்ரோகண தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.