Header Ads



விகாரையை அவருக்கு எழுதி கொடுப்பதில்லை என்பதை, விமல் வீரவங்ச புரிந்துகொள்ள வேண்டும் - சனத் நிஷாந்த


விமல் வீரவங்ச தனது வரலாறு முழுவதும் தான் இருக்கும் அணிக்குள் சிக்கல்களையே உருவாக்கி வந்துள்ளதாக ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகிக்கும் காலத்தில், அன்றைய நிதியமைச்சின் செயலாளரும், தற்போதைய ஜனாதிபதியின் செயலாளருமான பீ.பி. ஜெயசுந்தரவை பொருளாதார கொலையாளி எனக் கூறி சிக்கலை உருவாக்கினார். நிதியமைச்சின் செயலாளரை பொருளாதார கொலையாளி எனக் கூறி அவருடன் சிக்கலை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில் தற்போது கட்சிகளுக்கு இடையில் மோதலை உருவாக்க முயற்சித்து வருகின்றார். தற்போதைய அரசாங்கத்திற்கு எவரும் உரிமையாளர்கள் இல்லை. இது நாங்கள் இணைந்து உருவாக்கிய அரசாங்கம். இதனால், தாமே இந்த அரசாங்கத்தின் உரிமையாளர்கள் என எவரும் நினைப்பார்களாயின் அவர்களுக்கு தவறியுள்ளது.

விகாரையின் புண்ணியதானத்திற்கு கவிதை கூற எவரையாவது கூலிக்கு அமர்த்தினால், கட்டணம் செலுத்தி அவர் அனுப்பி வைக்கப்படுவாரே அன்றி, விகாரையை அவருக்கு எழுதி கொடுப்பதில்லை என்பதை விமல் வீரவங்ச புரிந்துகொள்ள வேண்டும் எனவும் சனத் நிஷாந்த குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.