February 19, 2021

முஸ்லிம்களே, தாய்நாட்டை விலைபேசும் சமூகமாக மாறாதீர்கள் - துண்டுப்பிரசுரங்கள் விநியோகம்


“முஸ்லிம் சமூகமே வெளிநாட்டவரின் பணத்துக்காக தாய் நாட்டை விலை பேசும் சமூகமாக மாறாதே” என நாட்டை நேசிக்கும் முஸ்லிம் அமைப்பு எனும் பெயரில் துண்டுப்பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

அன்பின் இஸ்லாமிய சகோதரர்களே! என தலைப்பிட்டு "தாய் நாட்டை நேசிக்கும் முஸ்லிம் அமைப்பு எனும் பெயரில் மட்டக்களப்பு மாவட்டத்தின் முஸ்லிம் பிரதேசங்களில் இன்று வெள்ளிக்கிழமை -19- துண்டுப்பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.

குறித்த பிரசுரத்தில் - நாம் பல வருடகாலமாக இந்த நாட்டில் வாழ்வது நாட்டிற்காக உயிர்நீத்த தேசப்பற்று கொண்டோரின் தியாகத்தினால் ஆகும், தமிழீழவாதிகள் மென்மேலும் முயற்சி செய்வது எம்மை சிங்கள சமூகத்திற்கு எம்மை அடிப்படைவாதிகளாக காண்பிப்பதற்கே ஆகும்.

தமிழீழவாதிகளது ஜெனீவா நோக்கிய பயணத்தில் முஸ்லிம்களையும் இணைத்துக் கொள்வது முஸ்லிம் சமூகத்திற்கு பாரியதொரு இழுக்கை ஏற்படுத்தும்,

ஈழவாதிகளின் தனிநாட்டு கோரிக்கையினை பலப்படுத்த முஸ்லிம்கள் ஒத்துழைப்பு வழங்குவதன் ஊடாக அது எதிர்கால முஸ்லிம் பரம்பரைக்கு பாரியதொரு கலக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

மேலும் குறித்த துண்டுப்பிரசுரத்தில் முஃமின்களே ! உங்கள் பொருள்களிலும் , உங்கள் ஆத்மாக்களிலும் திடமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள் , உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிடமிருந்து இணை வைத்து வணங்குவோரிடமிருந்தும் நிந்தனைகள் பலவற்றையும் செவிமடுப்பீர்கள்,

ஆனால் நீங்கள் பொறுமையை மேற்கொண்டு இறைவனிடம் பய பக்தியோடு இருந்தீர்களானால் நிச்சயமாக அதுவே எல்லாக் காரியங்களிலும் நன்மையை தேடி தரும், தீர்மானத்துக்குரிய செயலாகும்" என அல்குர்ஆன் இன் 3ஆவது அத்தியாயம் 186ஆவது வசனத்தை மேற்கோள் காட்டி,

எமது முஸ்லிம் சமூகம் வெளிநாட்டவரின் பணத்திற்காக எமது தாய் நாட்டினை விலை பேசும் சமூகமாக மாறி விடக்கூடாது என முஸ்லிம் மக்களிடம் கோரிக்கை விடுக்கக் கூடிய வகையில் குறித்த துண்டுப்பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

9 கருத்துரைகள்:

Itha eluthina naatyaari...conj anga poi janazaakkala puthaikka oru thundu..eluthirukkalaame.... ithula punithamaana quraana vera...., angaala oru parathesi madrasa ellam terrorist engraan, ingaala oru...kenayan 6000 vaal vantichchaam paakka solran.... ithukkellaam eppo thundu...eluthuveengada

இத்தகைய ஒரு முரண்பட்ட சூழல் எதிர்பார்க்கப்பட்டதுதான். அரசு அரசின் ஆதரவாளர்கள் 1980பதுகளின் நடுப்பதிகளில் இருந்தே ஆரம்பித்த விளையாட்டுத்தானே இது. தமிழர்களையும் முஸ்லிம்களையும் மோதவிடுவதுதான் 1985ல் இருந்தே சிங்கள இனவாத அரசின் நோக்கமாக உள்ளது.தமிழர்களுடனான உறவுபற்றி வட கிழக்கு முஸ்லிம் மக்கள்தான் முடிவெடுக்கவேண்டும். தாய்நாட்டை நேசிக்கும் முஸ்லிம் அமைப்பு அதிகரிக்கும் கைதுகள் மற்றும் ஜனாசா எரிப்பு பிரச்சினைகளை ஏன் இதுவரை தீர்த்துவைக்கவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது.

நாட்டை நேசிக்கும் முஸ்லிம்:-
நாட்டை நேசிப்பவனே ! உன்னை எரிக்கும் உன் இஸ்லாமிய கடமைகளை சரியாக செய்ய விடாது உன்னை இஸ்லாத்துக்கு மாற்றமான வழியை காண்பித்து வாழு என்று சொல்லும் நாட்டை விட உனக்கு இஸ்லாம் மேலானதாக இருக்கணும், இஸ்லாம் ஹிஜ்ரத் எனும் ஒரு வழியை திறந்து வைத்திருக்கிறது ஆபிரிக்க நாடுகள் நல்லதாக இருக்கிறது வாய்ப்பு கிடைத்தால் ஹிஜ்ரத் செய் நாட்டை நேசிக்கும் முஸ்லிம் நண்பனே! காட்டிக்கொடுக்கவும் வேண்டாம் கூட்டிக்கொடுக்கவும் வேண்டாம் ஹிஜ்ரத் செய் முஸ்லிம் நண்பனே!

சரி முஸ்லிம்கள் வெளிநாட்டவரின் பணத்துக்காக செயற்படுகிறார்கள் என்றால். இந்த பிரசுரத்தை வெளியிட்ட கூட்டம் அல்லாஹுவின் வசனங்களை (தங்களது சுயலாபத்துக்காக) இனவாதிகள் நிறைந்த இந்த அரசாங்கத்துக்காக விற்பவர்களை என்னவென்று சொல்வது?

ஒவ்வொரு மனிதனாலும் ஒவ்வொரு வேடத்தை மாத்திரம்தான் போட முடியும். ஆனால் சாத்தான்களால் பல்வேறு வேஷங்களைப் போட முடியும். மனிதர்களுக்கு கடவுள் நன்கு சிந்திக்கும் ஆற்றலைக் கொடுத்துள்ளான். நேரத்தையும் பணத்தையும வீணாக்காது நற்செயல்களில் ஈடுபடுவது புத்திசாலிகளின் கடமையாகும்.

தமிழீழவாதிகள் முஸ்லீம் சிங்கள உறவை பிரித்து முஸ்லீம்கள் அடிப்படைவாதிகள் என்று காட்ட முற்படுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இப்பிரசுரத்தார் என்ன செய்கிறார்கள் முஸ்லிம்கள் சிங்களவர்களுக்குச் சோரம்போவோர் என்று சொல்ல வருகிறார்களா?

இத எழுதினவன் நாம் நினேபது போள் முஸ்லிம் அள்ள.

(To the authors of this leaflet) Sir,could you tell these advices to Bodubalasena,singhalae,singhala rawaya and all Racial Aggressors, not to the victims. Don't use Alquraan for your political agenda.

கோடாலிக் காம்புகளை முதலில் பற்ற வைத்தால்தான் இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு சுதந்திரம் கிடைக்கும்

Post a comment