February 17, 2021

20 க்கு கை உயர்த்திய முஸ்லிம் எம்.பிக்களின் நிலை என்ன..? அலி சப்ரியை கைவிடக் கூடாது


- A.L.Thavam -

இனவாதிகளின் இலக்கு நீதி அமைச்சர் அலி சப்ரி அவர்களை நோக்கி திரும்பியுள்ளது. ரத்ன தேரரின் முஸ்லிம் விவாக மற்றும் விவாக ரத்து சட்ட நீக்கத்தின் மீதான - அலி சப்ரி அவர்களின் பதில் - இனவாதிகளை கோபப்படுத்தி இருக்கிறது. அவர்கள் நினைத்ததை எல்லாம் சகட்டுமேனிக்கு சாதிக்க நினைக்கின்ற குறுட்டு தைரியத்தை அலி சப்ரி அவர்களின் பதில் திடுக்கிட வைத்துள்ளது.

“நீக்குவதாக இருந்தால்; அனைத்து தனியார் சட்டங்களையும் நீக்க வேண்டும்; முஸ்லிம் தனியார் சட்டத்தை மாத்திரம் நீக்க முடியாது” என்ற அவருடைய பதில் - ரத்ன தேரரை மட்டுமல்ல அவருடைய கருத்திலிருக்கும் அனைவருக்கும் மரண அடியாக விழுந்துள்ளது. இப்படி ஒரு பதிலை அவர்கள் யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. அப்படி ஒரு தர்ம அடி இது.

அண்மைக்காலமாக அலி சப்ரி அவர்களின் செயற்பாடுகள் பாராட்டத்தக்கவையாக இருக்கின்றன. ஜனாஸா எரிப்பை நிறுத்தும் முயற்சிகளில் அலி சப்ரியின் பணி சாதாரணமாக கணித்து விட முடியாதது. அவரை தலைமை கொடுக்க வைத்துத்தான் அரச ஆதரவு எம்.பிக்கள் பின்னின்றனர். ஒரு கட்டத்தில் ராஜினாமா செய்யும் நிலை வரை அவர் சென்றார். கடிதம் கொடுக்கப்பட்டதாகவும் கதைகளுண்டு.

அதனால், இப்போது அவரும் இனவாதிகளின் இலக்காகி விட்டதாக தெரிகிறது. அவரின் மீதான பாய்ச்சலுக்கு தயாராவதாகத் தெரிகிறது. இந்தக் கட்டத்தில் அவரை தனித்து விட முடியாது. முஸ்லிம் சமூகம் அவருடனான ஒருமைப்பாட்டை (Solidarity) வெளிப்படுத்த வேண்டும். அவருக்கான moral support யை கொடுக்க வேண்டும். 

இதில் அரசியல் வேறுபாடு பார்க்கத் தேவையில்லை. பேதங்களுக்கு அப்பால் இது பார்க்கப்பட வேண்டும். ஆர்பாரிப்பது என்பது இதற்கு அர்த்தமல்ல. ஆகக்குறைந்தது பிரார்த்தனைகளில் சேர்த்துக்கொள்வோம்.

இதில் உள்ள சுவாரசியம் என்னவெனில் - அரசாங்கத்தினுள் ஆதிக்கம் நிறைந்த அமைச்சரான அலி சப்ரிக்கே - முஸ்லிம்களுக்காக பணியாற்றும் போது இப்படி இனவாதிகளின் எதிர்ப்பு வருகிறது எனின் - 20 க்கு கையுயர்த்திய முஸ்லிம் எம்.பிக்களின் நிலை என்ன? கொஞ்சம் கொந்தராத்தும், லேபர் தொழிலும் மட்டும்தான். 

மற்றப்படி; 

👉🏿 இறக்காமம் மாயக்கல்லி மலையடிவாரத்தில் இடம்பெறும் குடியேற்றத்தை தடுக்கவோ

👉🏿 தீகவாப்பியை அட்டாளைச்சேனையிலருந்து துண்டாடி - தனியான பிரதேச சபையாக உருவாக்க - பெருமெடுப்பிலான முயற்சிகளை தடுக்கவோ

👉🏿 பொத்துவில் பிரதேச முகுது மகா விகாரை காணி அபகரிப்பை தடுக்கவோ

👉🏿 ஒலுவில் கடலரிப்பிற்கான தீர்வை பெறவோ

👉🏿 முஸ்லிம்களின் விவசாயக்காணிகளை மீட்டுத்தரவோ போவதில்லை.

20 க்கு கையுயர்த்தும் போது இவற்றை பற்றி பேசவுமில்லை. ஜனாஸா எரிப்பு பற்றியே பேசி தீர்க்கமான முடிவுக்கு வராதவர்கள் - இவற்றையெல்லாமா பேசி இருப்பார்கள்?. ஆனால், மக்கள் தலையில் மிளகாய் அரைக்க - சமூகத்திற்காகத்தான் கையுயர்த்தினோம் என்று வெளிப்படையாக பொய்யென்று தெரிந்துகொண்டே பொய் கூறுகிறார்கள். 

இவர்களோடு ஒப்பிடுகையில் - அலி சப்ரி தேசியப்பட்டியலில் அரசாங்கத்தினுள் இருந்துகொண்டு ஆற்றுகின்ற பணிகளுக்காக - இந்தக் கட்டத்தில் அவருடனான ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துவது - முஸ்லிம் சமூகத்தின் மீது கடைமையாகும்.

3 கருத்துரைகள்:

May Allah Almighty safe guard him and give strength and courage. Justice will always in front of Allah.

இவருக்காக அல்லாஹ்விடம் கை ஏந்துவது ஒவ்வொரு முஸ்லிமின்மீதும் கடமை.தற்போது எமது சமூகத்திற்கு உள்ள அரசியல் பலம் இவர் மட்டுமே.இவரை அல்லாஹ்தாலா பாதுகாப்பானாக.இவரைப் பொருத்திப் கொள்வானாக.இவர்சமூகத்திற்காக நாட்டுக்காக எடுக்கும் அனைத்து முயறசிகளிலும் வெற்றியைக் கொடுப்பானாக ஆமீன்.

Well said brother. I do appreciate very much. May Allah Bless you.

Post a comment