Header Ads



சுகாதார துறை மீதான, மக்களின் நம்பிக்கை குறைவடைந்துள்ளது - Dr நளிந்த


அரசாங்கத்தின் தவறான முடிவுகள் காரணமாக உள்ளுர் சுகாதார துறை மீதான மக்களின் நம்பிக்கை குறைவடைந்துள்ளது என ஜேவிபி தெரிவித்துள்ளது.

ஜேவிபியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிச இதனை தெரிவித்துள்ளார்.

கொரோனாவைரசிற்கு எதிராக விஞ்ஞான ரீதியில் நிரூபிக்கப்பட்ட வழிமுறைகளிற்கு பதில் புராணக்கதைகளை நம்புவது பெரும் தவறு என அவர் தெரிவித்துள்ளார்.

அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தபடி மக்கள் கட்டுப்பாடுகளை பின்பற்றியதால் முதலாவது அலை கட்டுப்படுத்தப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் இரண்டாவது அலையின் போது சுகாதார அமைப்பின் மீது நம்பிக்கை குறைவடைந்ததால் மக்கள் அவர்கள் தெரிவிப்பதை செவிமடுக்க தவறிவிட்டனர் எனவும் ஜேவியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார அமைச்சரும் இராஜாங்க அமைச்சரும் மற்றும் சபாநாயகரும் தேவையற்ற ஊக்குவிப்புகளை முன்னெடுத்தனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.