Header Ads



சவுதிக்கான இலங்கை, தூதுவர் நிராகரிக்கப்பட்டாரா..?


கனடாவை அடுத்து சவுதி அரேபியாவும் இலங்கைக்கான தூதுவரை ஏற்பதற்கு இதுவரை அனுமதி வழங்கவில்லை என கொழும்பு ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

கனடாவுக்கான இலங்கைத் தூதுவராக முன்னாள் விமானப்படைத்தளபதி ஏர் மார்ஷல் சுமங்கள டயஸ் நியமிக்கப்பட்டிருந்தார்.

இவர் ஸ்ரீலங்கா விமானப்படையின் 17 ஆவது தளபதியாக இருந்து கடந்த 2020 நவம்பர் 02 ஆம் திகதி ஓய்வு பெற்றார்.

கனடா, இலங்கை தொடர்பான ஜெனீவா தீர்மானத்தின் குழுவில் முக்கிய உறுப்பினராக உள்ளதுடன் பாதுகாப்பு விடயங்களில் சீர் திருத்தம் வேண்டுமென வலியுறுத்தி வருகிறது.

இதேவேளை சவுதிக்கான இலங்கை தூதுவராக அகமட் ஏ. ஜவாத் நியமிக்கப்பட்ட நிலையில் அவருக்கான அனுமதியை அந்நாடு இன்னமும் அனுமதிக்கவில்லை.

ஜவாத், முன்னர் சவுதிக்கான இலங்கை தூதுவராக கடமையாற்றிருந்தார்.இவரது காலப்பகுதியிலேயே ரிசானா நபீக் என்ற இலங்கைப்பெண், குழந்தையை கொன்ற குற்றத்துக்காக கடந்த 2013 ஆம் ஆண்டு ஜனவரி 09 ஆம் திகதி தலை துண்டித்து கொல்லப்பட்டார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சவுதியிலுள்ள இலங்கைத்தூதுவரான ஜவாத்தை இலங்கை மீள அழைத்துக் கொண்டது.இதற்குப் பதிலடியாக சவுதியும் தனது இலங்கைக்கான தூதுவரை மீள அழைத்துக் கொண்டது.

ஏயார் சீப் மார்ஷல் மற்றும் ஜவாத் ஆகியோரின் நியமனங்களை நாடாளுமன்ற உயர்குழு கடந்த 2020 நவம்பர் 9 ஆம் திகதி அங்கீகரித்தது.

எனினும் இரண்டு தூதுவர்களையும் கனடா மற்றும் சவுதி அரேபியா ஆகிய இரண்டு நாடுகளும் ஏற்றுக் கொள்ளவில்லை என அந்த பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.