Header Ads



முழுநாடும் நோய் ஆபத்தை எதிர்கொள்ளும் ஆபத்து உருவாகியுள்ளது - கரு ஜெயசூரிய


நாட்டின் உயர் பதவியில் உள்ள சிலர், தங்கள் நலன்களை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்துடன் செயற்படுவதால் நாடு கொரோனா வைரசின் மூன்றாவது அலையை எதிர்நோக்கும் ஆபத்தான நிலையிலுள்ளது என முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

சமூகநீதிக்கான தேசிய இயக்கத்தின் சார்பில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சமூகநீதிக்கான தேசிய இயக்கத்திற்கு அரசாங்கத்தின் செயற்பாடுகளை குழப்பும் அல்லது விமர்சிக்கும் எண்ணமெதுவும் இல்லை என தெரிவித்துள்ள முன்னாள் சபாநாயகர் அதேவேளை ஜனநாயகத்தினை மதித்த நாடு என்ற வகையில் இலங்கை இன்று மக்களின் நலன்களை அபிவிருத்தி செய்வதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளை கைவிட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் தற்போது அதிகாரம் மிக்க ஒரு சிலரின் நோக்கத்தை நிறைவேற்றுவதிலேயே அக்கறையாகவுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பது என்ற போர்வையில் நாட்டில் இன்று இடம்பெறும் சில நடவடிக்கைகளால் முழுநாடும் நோய் ஆபத்தை எதிர்கொள்ளும் ஆபத்து உருவாகியுள்ளது என கருஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

சுற்றுலாப்பயணிகளை கவருவதற்கு முன்னர் இலங்கை பல விடயங்களிற்கு தீர்வை காணவேண்டும்,அரசாங்கம் முக்கியமாகவும் முதன்மையாகவும் தனது மக்களின் சுகாதாரம் பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்தவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

பல இலங்கையர்கள் வேலைவாய்ப்பின்மை காரணமாக வெளிநாடுகளில் சிக்குண்டு;ள்ள சூழலில் அரசாங்கம் சுற்றுலாப்பயணிகளை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது என தெரிவித்துள்ள முன்னாள் சபாநாயகர் உக்ரைன் சுற்றுலாப்பயணிகளிற்கு விசேட சலுகை அளிக்கப்படும் அதேவேளை ஏன் வெளிநாட்டு வருவாயை இலங்கைக்கு பெற்றுக்கொடுத்த தொழிலாளர்களை நாடு திரும்பியவுடன் தனிமைப்படுத்தல் முகாமிற்கு அனுப்புகின்றனர் என பல இலங்கையர்கள் கேள்வி எழுப்ப ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.