Header Ads



எங்களால் (ப) துவா இரக்க மட்டுமே இயலும்..!


- மதுராப்புர கலைமகன் பைரூஸ் -

ஏ! முஸ்லிம் உம்மாவே,

ஏன் இன்னும் மௌனிக்கிறாய்...

கறுப்பாடுகளாக நீங்களுமா?

தந்தைக்கு இல்லாத கொரோணா

தாய்க்கு இல்லாத கொரோணா

அன்று 

20 நாள் குழந்தைக்கு வந்தது...

இன்று

2 மாதக் குழந்தைக்கு வந்தது...

எரித்தாயிற்று....

இந்தத் தேசத்தில்

நாங்கள் கைகள் கட்டப்பட்டவர்களாய்..

குரல்வளை நசுக்கப்பட்டவர்களாய்...

சகிக்க இயலவில்லை.

தாங்க இயலவில்லை...

பற்றி எரிகின்றது உள்ளம்

பிஞ்சுகளை எரித்தாற்போல்...

எங்கள் உள்ளக்கரங்கள் நிமிர்ந்து

ஏகனிடம் ஏந்துகின்றன (ப)துவா...

ஏன்தான் இந்த அராஜகம்

எங்கட்கு மட்டும் ஏன் இந்தக் கொடுமை...

நாம் என்ன குற்றமிழைத்தோம்....

போயும் போயும் இந்தச் சிசுக்கள்

செய்த கொடுமைகள்தான் என்ன?

உங்கள் சோற்றுப் பருக்கைகளைத்தானும்

தட்டி உழைத்தனவா? பாவிகாள்!

எங்கள் தலைமைகள் மௌனித்ததனால்

நாங்கள் நாளுக்குநாள் உரிமைகள் இழந்து

கைகளால் பொத்திக் கொண்டிருக்கிறோம்...

அபாயா....கருத்தடை என்று வந்தவர்கள்

கருவருப்பதற்காய் கறுத்த ஆடுகளையும்

கூட்டுச்சேர்த்துக் கொண்டு

காடைத்தனம் புரிகின்றது 

புனிதரின் பெயரை முதலாய்ச் சூட்டிக் கொண்டு...

பால்குடி மறவாப் பிள்ளைகள்...

தாங்க இயலவில்லை ரப்பே...!

இரண்டில் தொடங்கி இருமாதமாகி

20 மாதக் குழந்தை நாளை

எரிக்கப்படலாம்...

அது நோயின்றி

கலிமாச் சொன்னதற்காய்

எனதாகவும் இருக்கலாம் 

உங்களுடையதாகவும் இருக்கலாம்...

எங்கள் மௌனங்கள் 

அவனிடம் தவமிருக்கின்றன....

அவன் அருள்மாரியைப் போன்றே 

அவன் பிடியையும் நாங்கள் நம்புவதால்...

நாங்கள் படைத்தவனை நெருங்கினால்

நிச்சயமாய் எங்களுக்கு நல்லது நடக்கும்

எங்கள் தொழுகை சீராகினால்

எங்கள் கொடுக்கல் வாங்கால் சீராகினால்

எங்கள் எண்ணங்கள் தூய்மையானால்

தூய்மையாளன் உடனடி ரிஸல்டை

(நய)வஞ்சககர்களுக்கு எதிராக

சுடச்சுடக் காட்டுவான்....

அவர்களை எரிக்காமலேயே...

நாங்கள் எரிக்கப்பாடமலேயே...

இறைவா!

சொற்கள் தடுமாறுகின்றன....

நல்லெணத்தை அவர்களின்

நன்றியில்லா இதயங்களில் போட்டுவிடு

ஒரு ஓணாய்க்கு நல்லதண்டனை

அச்சொட்டாய் வழங்கிவிட்டால்

அது எங்களுக்கு ஒத்தடமாய்....

அவர்களுக்குக் குலைநடுக்கமாய்...

எல்லாம் உன் 'குன்' என்ற வார்த்தையன்றி

ஏது இறைவா...!

உன் 'குன்' என்ற வார்த்தை

எம்மை தலைநிமிர்ச் செய்யலாம்!

1 comment:

  1. There r lots of black sheeps, acju, all political baffalows and all so called muslim heads.... the community must wakeup with well educated people. Otherwise cant change this. First, we must select any MP, who is not lawyers

    ReplyDelete

Powered by Blogger.