Header Ads



கொரோனாவை கட்டுப்படுத்துவது எப்போதும், விஞ்ஞான ரீதியாக காணப்பட வேண்டும் - இராஜாங்க அமைச்சர்


கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்கள் குறித்து ஆராய்வதற்காக எந்த குழுவையும் நியமிக்கவில்லை என இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதா அடக்கம் செய்வதா என்பதை ஆராய்வதற்கான தான் குழுவொன்றை நியமித்துள்ளதாக ஊடகங்களிலும் சமூக ஊடங்களிலும் தகவல்கள் வெளியாகியுள்ளன என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொவிட்டினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் எப்போதும் விஞ்ஞான ரீதியிலானவையாக காணப்படவேண்டும், மத இன அரசியல் சமூக மற்றும் புராணஅடிப்படையில் இதற்கு தீர்வை காணதுமுடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் புதிய நோய் என்பதால் உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆரம்ப கட்ட பரிந்துரைகள் மாற்றமடையலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


3 comments:

  1. இந்த அமைச்சர் எந்த குழுவையும் நியமிக்கவில்லை ஏற்றுக் கொள்வோம்.

    அடுத்து இவர் சொல்வது எந்த விஞ்ஞானம்? நீரியல் நிபுணர் வைரஸ் பற்றி சொல்லும் விஞ்ஞானம்?

    உலக சுகாதார ஸ்தாபனம் தனது பரிந்துரைகளை மாற்றம் செய்யவில்லை. அப்படி இருக்க ஒரு வைத்தியராக இவர் மாற்றம் பற்றி நியாயப்படுத்த முனைகிறார். அதாவது எரிப்பதை நியாயம் காண்கிறார்.

    அமைச்சர் பவித்ரா பரவாயில்லை.

    ReplyDelete
  2. that 30 scholars r appoint just for FUN

    ReplyDelete

Powered by Blogger.