Header Ads



பொலிஸ் மா அதிபர் விடுத்துள்ள, கடுமையான எச்சரிக்கை


பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பாக பொலிஸார் மேற்கொண்டுள்ள விசாரணைகளில் தலையிடுவதற்கும் செல்வாக்கு செலுத்துவதற்கும் சில இனந்தெரியாத சக்திகள் தமது உறவினர் எனத் தெரிவித்து தலையிடுவதாக பொலிஸ்மா அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அனைத்து பொலிஸ்நிலையங்களினதும் பொறுப்பதிகாரிகளுக்கு அனுப்பிவைத்துள்ள சுற்றுநிருபத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பொலிஸ் உத்தியோகத்தர்களை தொலைபேசிகளில் தொடர்புகொள்ளும் அவர்கள் தாங்கள் பொலிஸ்மா அதிபரின் உறவினர்கள் என தெரிவிக்கின்றனர் என பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

ஒருபோதும் விசாரணையில் செல்வாக்கு செலுத்த யாரையும் அனுமதிக்கவில்லை என்று அவர் தெரிவித்தார்.

எனவே பக்கச்சார்பற்ற முறையில் விசாரணைகளை நடத்துமாறு அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் அவர் அறிவுறுத்தியதுடன் அவர்கள் அவ்வாறு செய்யத் தவறினால் அந்தந்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

எந்தவொரு தரப்பினரும் தனது உறவினர்களாகவோ அல்லது நண்பர்களாகவோ நடித்து விசாரணையில் செல்வாக்கு செலுத்த முயன்றால் தொடர்பு கொள்ள மூன்று சிரேஷ்டஅதிகாரிகளின் தொடர்புகளை பொலிஸ் நிலையங்களுக்கு அவர் வழங்கியுள்ளார்.

No comments

Powered by Blogger.