Header Ads



இலங்கையில் இன்று 5,286 பேருக்கு, கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டது


இன்றைய தினம் -29- இலங்கையில் 5,286 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. 

இதற்கமைய கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 1,886 பேருக்கும், கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில், 803 பேருக்கும் கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில், 781 பேருக்கும், இராணுவ வைத்தியசாலையில் 600 பேருக்கும், பனாகொடை இராணுவ முகாமில் 400 பேருக்கும், ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் 382 பேருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் 190 பேருக்கும், முல்லேரியாவ ஆதார வைத்தியசாலையில் 108 பேருக்கும் கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் 80 பேருக்கும் வெலிசர கடற்படை முகாமில் 56 பேருக்கும் இவ்வாறு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது. 

இந்தியாவினால் இலங்கைக்கு பெற்றுக் கொடுக்கப்பட்ட ஒக்ஸ்போர்ட் எஸ்ட்ரா செனெகா (Oxford Astra - Zeneca) கொரோனா தடுப்பூசியை இந்நாட்டவர்களுக்கு செலுத்தும் பணி இன்று காலை கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்டது. 

இதன் முதற்கட்டமாக மேல் மாகாணத்தை சேர்ந்த சுகாதார பிரிவினர் மற்றும் பாதுகாப்பு பிரிவினருக்கு இன்றைய தினம் தடுப்பூசி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.