Header Ads



எந்தவொரு தேர்தலிலும் இளைஞர்களுக்கு 25% ஒதுக்கீட்டை கட்டாயப்படுத்த தனிநபர் பிரேரனைக்கு ஆதரவை கோரும் இம்தியாஸ்


இலங்கையில் வரவிருக்கும் எந்தவொரு தேர்தலிலும் இளைஞர் வேட்பாளர்களுக்கு 25% ஒதுக்கீட்டை கட்டாயப்படுத்த நாடாளுமன்றத்தில் தனி நபர் பிரேரனைக்கு பல் கட்சி ஆதரவை கோருகிறார் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்.

1970 களில் யு.என்.பி.யின் மாணவர் மற்றும் இளைஞர் பிரிவுகளின் மூலம் அரசியலில் நுழைந்த பாக்கீர் மாகார், “அரசியல் பின்னணி இல்லாத இளைஞர்களுக்கு கொள்கை வகுப்பில் நுழைவதற்கான இடம் குறைவு என்பதை நாங்கள் புரிந்துகொண்டுள்ளோம்”.என தெரிவித்துள்ளார்.

1980களின் தொல்லைகள் மற்றும் எழுச்சிகளைத் தொடர்ந்து, நிறுவப்பட்ட அமைப்புகள் இளைஞர்களின் பங்களிப்பை குறைந்த மட்டத்தில் வைத்திருப்பதாக இளைஞர் ஆணையம் சுட்டிக்காட்டியது என்று அவர் கூறினார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, கடந்த ஆண்டின் தொடக்கத்தில், கட்சியின் இளைஞர் பிரிவின்,இளைஞர் வேட்பாளர்களுக்கு 25% வேட்புமனுக்களை ஒதுக்கீடு செய்வதாக ஒரு உறுதிமொழியில் கையெழுத்திட்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியின இளைஞர் விவகார பிரிவு அங்கத்தவரகள் மற்றும் செயற்ப்பாட்டளர்கள் சஜித் பிரேமதாச அவர்களிடம் வினவிய இளைஞர்களுக்கான 25 வீத பங்கேற்பை அவர் ஏற்றுக  கொண்டுள்ளார். பாராளுமன்றத் தேரதல்,மாகாண சபைத் தேர்தல் மற்றும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் இளையோர்களுக்கான பங்கேற்பை குறைந்தது 25 வீதமாக வழங்குவதை சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி அங்கீகரித்துள்ளது.1980 களில் இளைஞர் கிளர்சிக்குப் பின்னர் மறைந்த முன்னால் ஜனாதிபதி ரனசிங்க பிரேமதாசவிடம் முன்வைத்த இளைஞர் ஆணைக்குழு பிரேரனைகள் எனக்கு ஞாபகம் வருகிறது.அதில் தெரிவிக்கப்பட்ட நூற்றுக்கு நாப்பது வீத பங்கேற்பு நிச்சயிக்கப்பட்டது.ஆனால் இன்று இந்த விடயங்கள் மாற்றமடைந்துள்ளதை அவதானிக்க முடிகிறது. இலங்கையின் மொத்த சனத் தொகையில் 15 வயதுக்கும் 29 வயதுக்குமிடைப்பட்டவர்கள் நான்கில் ஒருவர் இளைஞர்கள் என்று,ஐக்கிய நாடுகள் சபையின் கிட்டிய புள்ளிவிபரங்களும் கூறுகிறது.எமது நாட்டின் அளவுகோள்களின் படி 35 வயதுக்கும் மேற்ப்பட்டவர்களையும் இளைஞர்கள் என்ற வட்டத்திற்குள் தேசிய இளைஞர்கள் சேவை மன்றம்  கருதுகிறது.அவ்வாறு நோக்கும் போது 25 வீத்த்திற்கும் கூடிய தொகையாக இளைஞர்கள் இருக்கிறார்கள்.என்றாலும் நாட்டின் எதிரகாலத்தை வடிவமைக்கும் தீர்மானம் எடுக்கும் வகிபங்கு நிலைகளில் அவரகளின் பங்கேற்பை பார்க்கும் போது கவலையளிக்கிறது.


அரசியல் குடும்பப் பின்புலமற்ற இளைஞர்களுக்கு அரசியல் பங்கேற்புக்கான வாய்ப்புகள் அதிகமாகக் கொடுக்கப்பட வேண்டும்.இது தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தி எடுத்துள்ள தீர்மானம் வரலாற்று சிறப்பு மிக்க நிலைப்பாடாகும்.

இளைஞர்களுக்கு 25 வீத பங்கேற்பை உறுதிப்படுத்தும் தனி நபர் பிரேரணையை எதிர்வரும் பாராளுமன்ற அமர்வுகளில் சமர்ப்பிக்கவுள்ளேன்.இது தொடர்பான சட்ட ஏற்பாடுகள் நிறைவு பெறும் வரை சபை ஒத்திவைப்புப் பிரேரனையையும் முன்வைக்க உத்தேசித்துள்ளேன்.இதனை சாத்தியப்படுத்த ஏனைய அரசியல் கட்சிகளையும்,அரசியல் ஆர்வலர்கள் குழுக்களையும் ஒத்துழைக்குமாறு வேண்டிக் கொள்கிறேன்.

இன்று ஐக்கிய மக்கள் சக்தி இளைஞர்களுக்காக இதை நிறைவேற்றுகிறது என்று தெரிவித்தார்.இன்று உலகின் பல நாடுகள் இளைஞர்களுக்கு முன்னுரிமை வரங்குகிறது,அன்மையில் கூட கேரளா பிராந்தியத்தில் 21 வயது நிரம்பிய ஒரு இளையேரிடம் தலைமைப் பதவி வழங்கப்பட்டுள்ளது.நாங்களும் அத்தகைய முன்னேற்றகர முடிவுகளின் பக்கம் நகர வேண்டும்.இளைஞர்களுக்கு நம்பிக்கையாக செயற்பட வாய்பளிக்க வேண்டும்.எத்தகைய அரசியல் குடும்பப் பின்னனியற்ற இளைஞரகளை அரசியல் பங்கேற்புச் செய்ய வைப்பதும் திறமைக்கு முன்னுரிமை கொடுப்பதும் காலத்தின் கட்டாயமாகும் இதனை இலக்காகக் கொண்டு தான் ஐக்கிய மக்கள் சக்தி இளையோர்களுக்கு வாய்ப்பளிக்க முயற்சிக்கிறது என்று தெரிவித்தார்.

இலங்கையின் முன்னாள் இளைஞர் ஆர்வலரும் தற்போதைய ஐ.நா. பொதுச்செயலாளரின் இளைஞர் விவகார தூதுவருமான ஜயத்மா விக்ரமநாயக்க, தனி நபர் பிரேரனைத் திட்டத்தை வரவேற்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.