Header Ads



கொரோனா வைத்தியசாலையில் உங்களை 14 நாட்களுக்கு, மேல் வைத்திருந்தால் சட்ட நடவடிக்கை எடுங்கள்


- DR YOOSUFF AND ATTORNEY AT LAW -

கொரோனா நோயாளர்கள் IDH போன்ற கொரோனாவிற்குரிய வைத்தியசாலைகளில் இருக்கும் போது, அவர்களின் இருப்பு சம்பந்தமாக தெரிந்து கொள்ள வேண்டியவை

25.01.2021 அன்று சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட DGHS. Covid-19 /347. 2021 எனும் இலக்க சுற்றறிக்கையின் பிரகாரம் PCR TEST POSITIVE என்று கணிக்கப்பட்ட நாளிலிருந்து 10 நாட்களில் அவரில் இருந்து இன்னொருவருக்கு  தொற்றுக்கூடிய வாய்ப்பு இல்லை என்பதால் அவரை அந்த 10 நாட்களின் பின்னர் வீடுகளுக்கு அனுப்பலாம் என்றும், வீட்டில் மேலும் 4 நாட்கள் வெளியில் சொல்லாமல் தொற்றிலிருந்து பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக இருக்க வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கை கூறுகிறது. 

எனவே இந்த சுற்றறிக்கையின் செய்திச் சுருக்கம் என்னவென்றால் PCR POSITIVE ஆன திகதியிலிருந்து 14 நாட்களுக்கு மேல் அந்த நோயாளரிடம் இருந்து இன்னொருவருக்கு நோய் தொற்ற வாய்ப்பில்லை என்பதாகும். 

எனவே இந்த செய்தியானது, நோயாளிகளை IDH போன்ற கொரோனா வைத்தியசாலைகளுக்கு (சீனி வியாதி, இருதய, சிறுநீரக, ஈரல் வியாதிகள், இரத்த அழுத்தம் , பாரிசவாதம்(STROKE) போன்றவற்றால் சிகிச்சை பெற்று வந்தவர்களை PCR POSITIVE காரணமாக) மாற்றப்பட்ட நோயாளிகளை அந்த வைத்தியசாலையில் இருந்து விடுவிப்பதற்கும் பொருந்தும். 

ஏனெனில் இவர்களை அத்தகைய வைத்தியசாலைகளுக்கு அனுப்புவதன் பிரதான நோக்கம் அந்நோயாளியிலிருந்து ஏனையோருக்கு நிகழக் கூடிய தொற்றைத் தடுப்பதுதான் .

எனவே 14 நாட்களின் பின்னர் தொற்று வாய்ப்பு அற்றுப் போனதும், அவர்களை மீண்டும் இருந்த அதே வைத்தியசாலைக்கு மாற்றும்படி கேட்கும் உரிமை உங்களுக்கு உண்டு. 

அவ்வாறு முடியாது என்று சொன்னால் அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளும் உரிமையும் உள்ளது. அக்காரணம் ஏற்புடையதற்றதாக இருக்கும் பட்சத்தில், சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் உரிமையும் உங்களுக்கு உண்டு.

அந்த 14 நாட்கள் கொரோனா வைத்தியசாலைகளில் வைத்திருக்கையில் அந்த நோயாளிகளின் நெருங்கிய சொந்தங்கள் அவரின் நோய் முன்னேற்றம், உடல் நிலை போன்ற விடயங்களையும் கேட்டறியும் உரிமை உங்களுக்கு உள்ளது. அவ்வாறு தெரிவிக்காத படத்தில் அதற்கும் நீதியை நாடும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.


No comments

Powered by Blogger.